Latest Updates
-
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது!
சீனாவில் குழந்தைகளை குறி வைத்து தாக்கும் 'மர்மமான நிமோனியா' - அதன் அறிகுறிகள் என்ன?
Mysterious Children Pneumonia Outbreak In China: தற்போது தான் கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து சீனா மெதுவாக மீண்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சீனாவில் மற்றொரு புதிய தொற்று குழந்தைகளை குறி வைத்து பாதித்து வருகிறது. இதை மர்மமான நிமோனியா என்று அழைக்கின்றனர்.
இந்த தொற்றிற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் இந்த நிமோனியாத் தொற்றைப் பார்க்கும் போது, எங்கு இதுவும் கொரோனாவைப் போன்று அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

சீனாவில் குழந்தைகளை தாக்கும் நிமோனியா பள்ளிகளில் இருந்து பரவுகிறது. இதனால் படிக்கும் குழந்தைகள் பலர் சீன மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சொல்லப்போனால், சீனாவில் உள்ள பல மருத்துவமனைகள் குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன.
அல் ஜசீராவின் அறிக்கையின் படி, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கியதால் இப்படியான தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது. மேலும் குளிர்காலத்தில் மைக்கோபிளாஸ்மா நிமோனியா என்னும் நோய்க்கிருமி 5 மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளைத் தாக்கி, தொண்டைப்புண், உடல் சோர்வு, காய்ச்சல், நீடித்தல் இருமல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தி, அதற்கு சிகிச்சை பெற குழந்தைகள் மருத்துவமனைகளில் அதிகம் குவிவதால், அது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது என்று சீன சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தரவு கேட்கும் உலக சுகாதார அமைப்பு
ஏற்கனவே நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் குளிர்காலத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மீண்டும் வர வாய்ப்புள்ளதாக சீன வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் சீன வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சீனாவில் குழந்தைகளிடையே மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் போன்ற பல தொற்று சுவாச நோய்கள் இருப்பதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, சுவாச நோய்களின் அதிகரிப்பு குறித்த விரிவான தகவலை சீனாவிடம் கேட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
இது தவிர இன்ஃப்ளூயன்ஸா, SARS-CoV-2, RSV மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட நோய்க்கிருமிகளின் தற்போதைய போக்குகள் குறித்த தகவல்களையும் வழங்குமாறு சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சீனாவில் பரவும் மர்ம நிமோனியாவின் அறிகுறிகள்
* காய்ச்சல்
* இருமல்
* சுவாசிப்பதில் சிரமம்
* தொண்டை புண்
* மிகுந்த உடல் சோர்வு
நிமோனியா தொற்றை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மர்ம நிமோனியா தொற்றைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு பொது மக்களுக்கு ஒருசில நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்துகிறது. அவை:
* தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
* கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
* சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
* வெளியே பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க்குகளை அணிய வேண்டும்.
* கூட்ட நெரிச்சல் நிறைந்த இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
* முக்கியமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு நிமோனியா வருவதற்கான காரணங்கள்
பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நிமோனியா வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
* குறைவான சமூகப் பொருளாதாரப் பின்னணி - குறைவான சமூகப் பொருளாதாரப் பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளிடையே நிமோனியா தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
* குறைவான நோயெதிர்ப்பு சக்தி - நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ளும் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்கும். இத்தகைய குழந்தைகளைத் நோய்க்கிருமிகள் தாக்கும் போது, அவர்களின் வலிமையான நோயெதிர்ப்பு சக்தியால் சமாளிக்க முடியும். ஆனால் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது போதுமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்காத குழந்தைகளின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். எனவே இம்மாதிரியான குழந்தைகளை நிமோனியா தாக்க அதிக வாய்ப்புள்ளது.
* ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகள் - எச்.ஐ.வி அறிகுறிகள் மற்றும் தட்டம்மை போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்ட குழந்தைகளுக்கு நிமோனியா மிகவும் வேகமாக தாக்கும் அபாயம் உள்ளது.
* சுற்றுச்சூழல் காரணிகள் - வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசடைந்த காற்றினை சுவாசிக்கும் மற்றும் சிகரெட், ஊதுபத்தி, சாம்பிராணி ஆகியவற்றின் புகையை அதிகம் சுவாசிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் வேகமாக நிமோனியா தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications