Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
ஒற்றை தலைவலி இருக்கா? அப்ப இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க.. வலி தீவிரமாகிடும்...
Foods That Trigger Migraine Headache In Tamil: ஒவ்வொருவருமே தங்கள் வாழ்நாளில் நிச்சயம் ஒருமுறையாவது தலைவலியை சந்தித்திருப்போம். தலைவலி வந்தால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. அந்த அளவில் அது ஒருவரை பாடாய்படுத்திவிடும். சாதாரண தலைவலியே இப்படியென்றால், ஒற்றை தலைவலி இன்னும் கொடியதாக இருக்கும்.
இந்த வகை தலைவலியின் போது யாரோ ஒருவர் சுத்தியல் கொண்டு தலையில் அடிப்பது போன்று கூர்மையான வலியை சந்திக்க நேரிடும். இந்த ஒற்றை தலைவலியால் உலகில் ஏராளமானோர் தினந்தோறும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஒற்றை தலைவலிக்கு எவ்வித சிகிச்சையும் இல்லை.

இருப்பினும் இந்த ஒற்றை தலைவலியை உண்ணும் உணவுகளை கண்காணிப்பதன் மூலம் தீவிரத்தைக் குறைக்கலாம் என்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆம், நாம் உண்ணும் சில உணவுகளே நமக்கு ஒற்றைத் தலைவலியைத் தூண்டலாம். எனவே உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வரக்கூடாதெனில் ஒருசில உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள். இப்போது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் சில உணவுகளைக் காண்போம். அந்த உணவுகளை இதுவரை நீங்கள் அதிகம் உட்கொண்டு வந்தால், இனிமேல் சாப்பிடாதீர்கள்.
காஃப்பைன்
உங்களால் காபி குடிக்காமல் இருக்க முடியாதா? ஆனால் உங்களுக்கு ஒற்றை தலைவலி வரக்கூடாதெனில், காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது ஒற்றை தலைவலிக்கு வழிவகுக்கும் என்று ஒரு ஆய்வு கூறினாலும், திடீரென்று காபி குடிப்பதை நிறுத்தினால, அதுவும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். எனவே காபி குடிப்பதை முழுமையாக நிறுத்தாமல், ஒரு நாளைக்கு 2 கப் மட்டும் காபி குடிப்பதை வைத்துக் கொள்ளுங்கள்.
சாக்லேட்
ஆம், சாக்லேட் கூட ஒருவருக்கு ஒற்றைத் தலைவலியைத் தூண்டலாம். ஏனெனில் சாக்லேட்டிலும் காப்ஃபைன் அதிகமாக உள்ளது. அதோடு டைரமைனும் உள்ளது. என்ன தான் ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளைக் குணப்படுத்தும் காப்ஃபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருந்தாலும், இது ஒற்றை தலைவலியை அதிகரிக்கும். எனவே தலைவலிக்கும் போது அல்லது ஏற்கனவே தலைவலி பிரச்சனையைக் கொண்டிருந்தால், சாக்லேட் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்
உலர் பழங்கள், நட்ஸ் போன்றவை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களாக கருதப்பட்டாலும், இவையும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் என்பது தெரியுமா? ஏனெனில் உலர் திராட்சை, பேரிச்சை, ஆப்ரிகாட்கள், அத்திப்பழங்கள் போன்றவற்றில் ஒற்றைத் தலைவலியைத் தூண்டக்கூடிய ஃபைனிலாலனைன் அதிக அளவு உள்ளது. ஆனால் இது ஒருவரது உடலைப் பொறுத்தது. அனைவருக்குமே இது பொருந்தும் என்று கூறிவிட முடியாது.
ஒயின்
ஆம், ஆல்கஹால் கூட ஒருவருக்கு ஒற்றை தலைவலியை வரத் தூண்டும். 2018 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆராய்ச்சியில் பங்குகொண்டவர்கள் மது அருந்தியதில், குறிப்பாக ஒயினை குடித்ததில் ஒற்றைத் தலைவலி தூண்டப்படுவது தெரிய வந்தது. ஒயின்களில் ப்ளேவோனாய்டுகள், டானின்கள் போன்ற கலவைகள் உள்ளன. இவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். மேலும் மது அருந்துவது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி, அதன் விளைவாக தலைவலியை வரத் தூண்டுகிறது.
பழங்கள்
நற்பதமான பழங்கள், குறிப்பாக சிட்ரஸ் பழங்கள் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலியை வரத் தூண்டலாம். நீங்கள் பழ பிரியராக இருந்தால், ஒற்றைத் தலைவலியைத் தவிர்க்க பழங்களை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 2016 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சிட்ரஸ் பழங்கள் ஒற்றை தலைவலியைத் தூண்டுவது தெரிய வந்தது. எனவே உங்களுக்கு பழங்களால் தான் ஒற்றைத் தலைவலி வருகிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த பழங்களை சாப்பிட்டு ஒற்றை தலைவலியை கண்காணியுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications