Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
பெண்களே! உங்க மாதவிடாய் காலத்தில் இந்த அறிகுறிகள் இருந்தா அது உடல் ஆரோக்கியமாக இருப்பதன் அறிகுறியாம்...
பெண்களின் மிகவும் மோசமான காலக்கட்டம் என்றால் அது மாதவிடாய்தான். ஏனெனில் மாதவிடாய் காலக்கட்டம் பெண்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் வரப்போவதற்கான அறிகுறிகள் 5 அல்லது 6 நாட்களுக்கு முன்னரே தோன்றும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலம் வித்தியாசமானதாக இருக்கும். இது சராசரியாக 28 நாட்களுக்கு ஒருமுறை நடக்கும். மாதவிடாய் ஏற்படும் 90 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளை ஓரளவு அனுபவிக்கிறார்கள். பெரும்பாலான பெண்களுக்கு இந்த அறிகுறிகள் லேசானவை, ஆனால் மற்றவர்களுக்கு இந்த அறிகுறிகள் தினசரி நடவடிக்கைகளை பாதிக்கும் அளவிற்கு கடுமையானதாக இருக்கும்.

இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும், ஆனால் ஒவ்வொரு மாதமும் உங்கள் உடலில் ஏற்படும் இத்தகைய மாறுபாடுகளில் கவனம் செலுத்துவது ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தைக் கண்டறிவதற்கான சிறந்த வழியாகும். மாதவிடாய் குறித்து பொதுவாக பெண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கும். தங்களின் மாதவிடாய் நார்மலாக இருக்கிறதா அல்லது அசாதாரணமாக இருக்கிறதா என்று பலரும் சந்தேகத்துடன் இருப்பார்கள். சில அறிகுறிகள் இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும். ஆரோக்கியமான மாதவிடாயின் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
26-35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வருவது
பொதுவாக உங்கள் மாதவிடாய் சுழற்சி 26-35 நாட்களுக்குள் இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு மாதமும் ஒரே கால அளவில் இருக்க வேண்டும். சுழற்சியின் மொத்த காலக்கட்டம் உங்கள் மாதவிடாயின் முதல் நாளிலிருந்து உங்கள் அடுத்த மாதவிடாய்க்கு முந்தைய கடைசி நாள் வரை கணக்கிடப்படுகிறது. 5 நாட்களுக்கு மேல் அல்லது குறைவான அல்லது 26-35 நாட்கள் தாண்டியும் மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது ஒழுங்கற்ற சுழற்சிகள் மற்றும் உங்கள் ஹார்மோன்கள் செயலிழந்துவிட்டன என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
வலி இல்லாத மாதவிடாய்
உண்மைதான், ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி வலி இல்லாமல் இருக்க வேண்டும். அடிவயிற்றில் அசௌகரியம் மற்றும் விரிசல் போன்ற ஒரு சிறிய உணர்வு ஏற்படுவது வழக்கம்தான், ஆனால் நீங்கள் வயிறு, முதுகு மற்றும்/அல்லது கால்களில் வலிமிகுந்த தசைப்பிடிப்பை அனுபவித்தால், அது உங்கள் உடலில் ஹார்மோன் பிரச்சினைகள் இருப்பதற்கான அறிகுறியாகும்.
மாதவிடாய் நாட்களில் மட்டும் இரத்தப்போக்கு ஏற்படுவது
ஒரு ஆரோக்கியமான மாதவிடாய் 3-7 நாட்கள் தீவிரமான இரத்தப்போக்கு மூலம் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் லேசான இரத்தப்போக்கு இருக்கும். சுழற்சியின் வேறு எந்த நேரத்திலும் இரத்தப்போக்கு இருக்கக்கூடாது. நீடித்த அல்லது அதிக இரத்தப்போக்கு, மிகவும் லேசான இரத்தப்போக்கு அல்லது மற்ற நேரங்களில் இரத்தப்போக்கு காணப்படுதல் புரோஜெஸ்ட்டிரோன் குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் பிற ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிக்கலாம்.
இரத்தப்போக்கு சாதாரண சிவப்பு நிறத்தில் இருக்கும்
கருப்பையில் போதுமான இரத்த ஓட்டம் இருக்கும்போது, இரத்த உறைவு அல்லது சளி இல்லாமல் சிவப்பு சிவப்பு நிறத்தில் இருக்கும் மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இருண்ட, ஊதா அல்லது பழுப்புநிற இரத்தம் மற்றும் கட்டிகள் இருப்பது மோசமான கருப்பை சுழற்சியைக் குறிக்கிறது. கருப்பையில் இரத்த தேக்கம் வலியை ஏற்படுத்துகிறது மற்றும் இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
மாதவிடாய்க்கு முந்தைய பதற்றம் (PMT) இருக்காது
மாதவிடாய்க்கு முந்தைய பதற்றம் இல்லாமல் உங்களின் மாதவிடாய் காலம் தொடங்கினால் உங்கள் ஹார்மோன்கள் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். பெரும்பாலான பெண்கள் மென்மையான மார்பகங்கள், தலைவலி, பசி, வீக்கம், குடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாதவிடாய்க்கு முந்தைய நாட்கள் அல்லது வாரங்களில் அதிக உணர்ச்சிவசப்படுவதை போல பல பிரச்சினைகளுக்கு ஆளாகலாம்.
உங்கள் மாதவிடாய் சுழற்சி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் நேரடி அறிகுறிகள் இருப்பதால், உங்கள் உடலைச் சரிபார்க்க நேரம் ஒதுக்குவது மிகவும் முக்கியம். உங்கள் சுழற்சிகள் மற்றும் நீங்கள் அனுபவிக்கும் அனைத்து அறிகுறிகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
