Latest Updates
-
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இரவு நேரத்தில் கால்களில் இந்த அறிகுறிலாம் தெரியுதா? அப்ப உங்க கல்லீரல் செயலிழக்கப் போகுதுன்னு அர்த்தம்.. உஷார்
Symptoms Of Liver Failure In Tamil: நமது உடலில் கல்லீரல் மிகவும் பெரிய மற்றும் முக்கியமான உறுப்பு. இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவது, மெட்டபாலிசத்திற்கு உதவுவது, செரிமான ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்வது போன்றவற்றில் முக்கிய பங்கை வகிக்கிறது.
இப்படிப்பட்ட முக்கியமான வேலைகளை நாள் முழுவதும் செய்து வரும் கல்லீரல் நமது ஒருசில உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினால் சேதமடையக்கூடும். எனவே அவ்வப்போது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் சுத்தப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், ஒரு கட்டத்தில் கல்லீரலின் செயல்பாடு குறைந்து, கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

கல்லீரலில் உள்ள பிரச்சனைகளை சரியாக கவனித்து அதற்கு சிகிச்சை எடுக்காமல் போனால், கல்லீரல் செயலிழந்து, அதன் விளைவாக இதயத்தில் சேதயம், கணைய செயலிழப்ப போன்ற பல்வேறு உறுப்புக்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படக்கூடும் எனவே எப்போதும் ஓருவர் தங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தின் மீது கவனத்தை செலுத்த வேண்டும்.
ஒருவேளை கல்லீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அது நமக்கு பல்வேறு அறிகுறிகளை வெளிக்காட்டும். கீழே கல்லீரல் செயலிழக்கப் போகிறது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த அறிகுறிகள் இரவு நேரத்தில், அதுவும் கால்களில் தான் வெளிக்காட்டும். அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
கால் வீக்கம்
கல்லீரல் செயலிழக்கப் போகிறது என்றால் முதலில் வெளிப்படும் ஒரு அறிகுறி தான் கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் கல்லீரலானது சரியாக செயல்படாமல், நச்சுக்களை வெளியேற்றாமல் இருந்தால், அதன் விளைவாக உடலில் உள்ள திசுக்கள் திரவங்களை கால் பகுதிகளில் அப்படியே தங்க செய்துவிடுகிறது. இதன் விளைவாக கால்களில் நீர்தேக்கத்தால் வீக்கத்தை சந்திக்க நேரிடும்.
தொடர்ச்சியான அரிப்பு
கல்லீரல் செயலிழக்கப் போகிறது என்றால் வெளிப்படும் மற்றொரு அசாதாரண அறிகுறி தான் கால்களில் கடுமையான அரிப்பை சந்திப்பது. ஆம், உங்கள் கால்களில் திடீரென்று காரணமின்றி கடுமையான அரிப்பு ஏற்படுகிறது என்றால், உங்கள் கல்லீரலில் ஏதோ தீவிர பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வீக்கமடைந்து வலிக்கும் நரம்புகள்
உங்கள் கால்களில் நரம்புகள் புடைத்துக் கொண்டு, கடுமையான வலியை ஏற்படுத்துகிறது என்றால், உங்கள் நரம்புகள் சரியாக செயல்படுவதில்லை என்று அர்த்தம். அதுவும் சிலந்தி நரம்புகள், அதாவது கால்களில் ஆங்காங்கு இரத்த நாளங்கள் விரிவடைந்து காணப்பட்டடால், கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்ற அர்த்தம். இப்படியான சூழ்நிலையில் மருத்துவரை அணுகி உடனே சிகிச்சை பெற வேண்டும்.
சரும நிற மாற்றம்
ஒருவரது கால் மற்றும் பாதங்களின் நிறம் வழக்கத்தை விட வித்தியாசமான நிறத்தில் காணப்பட்டால், கல்லீரல் செயலிழக்கும் நிலையில் உள்ளது என்று அர்த்தம். கல்லீரல் தான் பிலிரூபினை மெட்டபாலிசம் செய்கிறது. இப்படிப்பட்ட கல்லீரல் சரியாக செயல்படாமல் போனால், பிலிரூபின் பித்தப்பையில் குவிந்து, சருமத்தின் நிறத்தை மஞ்சள் நிறத்தில் வெளிக்காட்டும். அத்துடன் அரிப்பையும் ஏற்படுத்தும்.
கால்கள் மற்றும் பாதங்களில் வலி
கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டால் கால்களில் வெளிப்படும் மற்றொரு அசாதாரண அறிகுறி, இரவு நேரத்தில் கால்களில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். அதுவும் கல்லீரல் சரியாகச் செயல்படாதபோது உடலில் நீர் தேங்குவதால் இது முக்கியமாக நிகழ்கிறது. இந்த வலிக்கு பெறும் நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, இரவில் இந்த வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
தசை பலவீனம் மற்றும் வலி
உங்களால் திடீரென்று நடக்க முடியவில்லையா? அப்படியானால் உங்கள் கல்லீரல் சரியாக செயல்படுவதில்லை என்று அர்த்தம். வழக்கத்திற்கு மாறாக தசைகளில் கடுமையான வலி மற்றும் பலவீனத்தை ஒருவர் உணர்ந்தால், அவர் கல்லீரல் ஆரோக்கியத்தை முதலில் சோதனை செய்து பார்க்க வேண்டும்.
ஏனெனில் தசைகளின் செயல்பாட்டிற்கு அவசியமான புரதங்களை உற்பத்தி செய்வதில் கல்லீரல் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படும் போது, புரத தொகுப்பு பலவீனமடைந்து, அதன் விளைவாக தசை வலி, தசை பலவீனம் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இம்மாதிரியான தசை வலியை அதிகம் சந்திக்க நேரிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
