Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
நைட் நேரத்துல இந்த பிரச்சனைகளை சந்திக்குறீங்களா? அப்ப உங்க கல்லீரல் மோசமா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்...
Liver Damage Symptoms In Tamil: நமது உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்பு. இது வயிற்றின் மேல் பகுதியின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது. இந்த கல்லீரல் ஏராளமான முக்கிய பணிகளை செய்கிறது. அதில் செரிமானம், இரத்த சுத்திரிகரிப்பு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை சேமிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மேலும் கல்லீரல் செரிமானத்திற்கு உதவும் பித்தநீரை உற்பத்தி செய்கிறது. இந்த பித்த நீர் தான் கொழுப்புக்களை ஜீரணிக்கவும், கழிவுகளை அகற்றவும் உதவுகிறது. குறிப்பாக கல்லீரல் 4 மடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் 8 பிரிவுகள் மற்றும் ஆயிரக்கணக்கான சிறிய மடல்களால் ஆனவை. இப்படிப்பட்ட கல்லீரலில் ஏராளமான பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் உள்ளன.

ஒருவரது கல்லீரலில் பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும். முக்கியமாக இரவு நேரத்தில் தெரியும் ஒருசில அறிகுறிகள் கல்லீரல் நோயின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். இப்போது கல்லீரலில் தீவிரமான நோய் இருந்தால் இரவு நேரத்தில் வெளிப்படும் அறிகுறிகளைக் காண்போம்.
இரவு அடிக்கடி சிறுநீர் கழிப்பது
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திரிக்கிறீர்களா? எப்போது ஒருவரது கல்லீரல் ஆபத்தில் உள்ளதோ அல்லது செயல்பட சிரமப்படுகிறதோ, அப்போது அதிகப்படியான திரவங்கள் தேங்கத் தொடங்கி, அதன் விளைவாக அடிக்கடி இரவு நேரத்தில் சிறுநீர் கழுக்க நேரிடுகிறது. எனவே வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீரைக் கழித்து வந்தால், உங்கள் கல்லீல் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம்.
அதிகப்படியான தாகம்
கல்லீரல் நோயின் முதன்மையான எச்சரிக்கை அறிகுறி என்றால் அது அதிகப்படியான தாகம். எப்போது கல்லீரல் செயல்பட போராடிக் கொண்டிருக்கிறதோ, அப்போது உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லை என்று அர்த்தம். இப்படி உடலில் நீர்ச்சத்து குறையும் போது, தாகம் அதிகம் எடுத்து அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது. எனவே இரவு நேரத்தில் அதிக தாகத்துடனும், அடிக்கடி சிறுநீரை கழித்தும் வந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
அடர் நிற சிறுநீர்
கல்லீரல் செயல்பாடு மோசமாக இருந்தால் தெரியக்கூடிய மற்றொரு அறிகுறி அடர் நிறத்தில் சிறுநீர் கழிப்பது. இப்படி அடர் நிற சிறுநீர் வெளியேறினால், கல்லீரல் உற்பத்தி செய்யும் பிலிரூபின் உடலில் அதிகமான அளவில் தேங்கியுள்ளது என்று அர்த்தம். எப்போது ஒருவரது கல்லீரல் சரியாக செயல்படாமல் உள்ளதோ, அப்போது பிலிரூபின் அதிகம் தேங்கி, அதன் விளைவாக சிறுநீரின் நிறம் அடர் நிறத்தில் இருக்கும். அதுவும் இப்படி அடர் நிற சிறுநீர் இரவு நேரத்தில் அதிகம் தெரியும்.
உடல் களைப்பு மற்றும் பலவீனம்
தொடர்ச்சியான உடல் களைப்பு மற்றும் பலவீனமும் தெரிந்தால், கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்று அர்த்தம். கல்லீரல் தான் உடலுக்கு வேண்டிய ஆற்றலை உற்பத்தி செய்கிறது மறும் நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றுகிறது. எனவே அடிக்கடி மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடன மருத்துவரை அணுகுஙங்கள்.
அடிவயிற்று வலி
ஒருவரது அடிவயிறு இரவு நேரத்தில் மட்டும், அது வயிற்றின் மேல் பகுதியில் வலியை சந்தித்தால், கல்லீரல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அதுவும் இந்த வலி அடிக்கடி இரவு நேரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் சேர்ந்து வந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
கால் அல்லது அடிவயிற்றில் வீக்கம்
கால்கள் அல்லது அடிவயிற்றுப் பகுதியில் வீக்கத்தை சந்தித்தால் அது கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். கல்லீரலானது எப்போது சரியாக செயல்படாமல் போகிறதோ, அப்போது திரவங்கள் உடலில் தேங்கத் தொடங்கி கால்களில் வீக்கத்தை உண்டாக்கும். குறிப்பாக இப்படியான வீக்கம் இரவு நேரத்தில் தான் அதிகமாக ஏற்படும. எனவே இரவு நேரத்தில் கால் வீக்கத்தை தொடர்ந்து சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications