Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நைட் நேரத்துல இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உங்க கல்லீரல் செயலிழக்கப் போகுது-ன்னு அர்த்தம்.. உஷார்..
Liver Damage Symptoms In Tamil: உடலில் கல்லீரல் மிகப்பெரிய உறுப்பு. நமது உடலில் கல்லீரல் பல முக்கியமான வேலைகளை செய்கிறது. இது உடலின் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. கல்லீரல் இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியாது. ஏனெனில் இந்த கல்லீரல் நமது உடலில் சுமார் 500 விதமான வேலைகளை செய்கிறது. முக்கியமாக கல்லீரலானது நாம் உண்ணும் உணவுகளில் உள்ள நல்லது, கெட்டதைப் பிரித்தெடுத்து, கெட்டதை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
மேலும் கல்லீரலானது உணவுகளைச் செரிக்கும் பித்த நீரை உற்பத்தி செய்கிறது. மேலும் இது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுகளை வெளியேற்றும் முக்கிய பணியை செய்கிறது. முக்கியமாக கல்லீரல் நாம் உண்ணும் உணவை நமது உடலுக்கு வேண்டியவாறு மாற்றித் தருகிறது. இதுப்போன்று ஏராளமான முக்கிய வேலைகளை கல்லீரல் செய்து வருகிறது.

இப்படி நிறைய வேலைகளை செய்து வருவதால், கல்லீரலில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக அதிக வேலை காரணமாக கல்லீரல் செயலிழக்கவும் வாய்புள்ளது. இப்போது கல்லீரல் செயலழப்பு நிகழப் போகிறது என்றால் இரவு நேரத்தில் வெளிப்படும் சில அறிகுறிகளைக் காண்போம்.
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக உள்ளது. அதில் ஒன்று தான் கல்லீரல் நோய். ஏனெனில் கல்லீரலானது உடலில் இருந்து கழிவுகளை அகற்றுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே அந்த கல்லீரல் சரியாக செயல்படாமல் பிரச்சனைகளை கொண்டிருந்தால், அது சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
அடிவயிற்று வலி
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவதுடன், அடிவயிற்றுப் பகுதியில் வலி, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளையும் சந்திக்கிறீர்களா? அப்படியானால் இந்த அறிகுறிகளை சற்றும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள். ஏனெனில் இந்த அறிகுறிகளும் கல்லீரல் செயலிழப்பின் அறிகுறிகளாகும்.
அதிகப்படியான உடல் சோர்வு
காரணமின்றி நீங்கள் மிகுதியான உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது கல்லீரல் நோயின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதுவும் கல்லீரல் நோய் தீவிரமடைந்து, கல்லீரல் செயலிழக்கம் தொடங்கும் போது, உடலில் ஆற்றல் சுத்தமாக இல்லாததை போன்று உணரக்கூடும். இம்மாதிரியான அறிகுறியை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லுங்கள்.
மஞ்சள் காமாலை அறிகுறிகள்
மஞ்சள் காமாலையின் போது உடலில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால், சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். இப்படி சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் தெரியத் தொடங்கினால், அது கல்லீரல் மோசமான நிலையில் உள்ளது என்பதன் எச்சரிக்கை அறிகுறியாகும்.
சரும அரிப்பு
கல்லீரலில் பிரச்சனைகள் இருந்தால், அது சருமத்தில் அதிகப்படியான அரிப்பைத் தூண்டும். ஏனெனில் கல்லீரல் சரியாக செயல்படாததால், பித்த உப்புக்கள் உடலில் தேங்கி சருமத்தில் அரிப்பை உண்டாக்கும். இப்படியான அரிப்பு அதிகமாக இருப்பதோடு, அதன் விளைவாக இரவு தூக்கமும் பாழாகும்.
தூக்கமின்மை
இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் உங்கள் கல்லீரலில் தீவிர பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் கல்லீரல் சரியாக செயல்படாமல் இருப்பதால், அதன் காரணமாக சந்திக்கும் அரிப்புகள், வலி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இரவு தூக்கத்தைக் கெடுக்கின்றன.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் கல்லீரல் செயலிழக்கும் நிலையில் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications