Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
ஆண்களே! ஆணுறுப்பில் இந்த மாற்றங்கள் தெரியுதா? அப்ப உங்களுக்கு ஆண்குறி புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
Symptoms Of Penile Cancer In Tamil: உலகில் பலவிதமான புற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் ஆண்களை மட்டுமே தாக்கக்கூடிய ஒரு வகையான புற்றுநோய் தான் ஆண்குறி புற்றுநோய். நிபுணர்களின் கூற்றுப்படி, ஆண்கள் தங்களின் ஆணுறுப்பில் ஏதாவது பெரிய மாற்றங்களைக் கண்டால், அது தீவிரமான மற்றும் ஆபத்தான நோய்களின் அறிகுறியாகும். எனவே ஆண்கள் தங்களின் ஆணுறுப்பில் வித்தியாசத்தைக் கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆணுறுப்பில் உள்ள வீரியமிக்க செல்கள் கட்டுப்பாடின்றி வளரும் போது ஆண்குறி புற்றுநோய் உருவாகிறது. இந்த புற்றுநோய் ஆணுறுப்பில் எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம். பொதுவாக இது ஆண்குறியின் நுனிப்பகுதி அல்லது நுனித்தோலில் தொடங்கும். இப்போது ஆண்குறியில் எந்த மாதிரியான மாற்றங்கள் தெரிந்தால் ஆண்கள் அவற்றைப் புறக்கணிக்கக்கூடாது என்பது குறித்து காண்போம்.

கொப்புளங்கள் மற்றும் புண்கள்
நிபுணர்களின் கூற்றுப்படி, ஆண்குறியைச் சுற்றி வெள்ளை நிற திட்டுக்களை கண்டால், அது லிச்சென் ஸ்க்லரோசஸின் என்னும் நாள்பட்ட அழற்சியின் ஆரம்ப கட்டமாகும். இந்நிலையானது கடுமையான அரிப்பையும், வலியையும் ஏற்படுத்தும். பொதுவாக இம்மாதிரியான அழற்சி 30-50 வயதிற்குட்பட்ட ஆண்களில் 10-ல் ஒருவருக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையை கொண்டிருக்கும் ஆண்கள் உடலுறவின் போது கடுமையான வலியை சந்திக்க நேரிடும் மற்றும் கட்டிகள், தடிப்புகள், கொப்புளங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். பெரும்பாலும் இம்மாதிரியான அழற்சி பாலியல் ரீதியாக பரவும் தொற்று அல்லது ஹெர்பீஸ், சிபிலிஸ், எச்பிவி போன்றவற்றின் அறிகுறியாகும். மருத்துவர்களின் கூற்றுப்படி, எச்பிவி பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
உடலுறவின் போது குறைவான விந்து வெளியேற்றம்
40 வயதிற்கு முன் ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது உச்சக்கட்ட இன்பத்தின் போது குறைவான விந்து வெளியேற்றத்தைக் காண்பது இயற்கை என்றாலும், இந்த வயதிற்கு மேல் மிகவும் குறைவான அளவில் வெளியேறினால், அது ஆபத்தான ஆண்குறி/புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே விந்து குறைவாக வெளியேறினால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
கடுமையான துர்நாற்றம்
ஆண்களே! உங்கள் ஆணுறுப்பில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? அப்படியானால் அது இறந்த சரும செல்கள் மற்றும் பாக்டீரியாக்களின் தேக்கத்தின் காரணமாக இருக்கலாம். இருப்பினும், இது பிளான்சிடிஸுக்கு வழிவகுத்து, ஆணுறுப்பில் வீக்கத்தையும், வலியையும் உண்டாக்கக்கூடும். இது ஒரு வகையான ஈஸ்ட் தொற்று. இது ஆண்குறியின் நுனி பகுதியை சிவக்க செய்து, வீக்கமடையவும் செய்யும். மேலும் ஆணுறுப்பில் வீசும் துர்நாற்றமானது ஆண்குறி புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். இதன் பிற அறிகுறிகளாவன:
* ஆண்குறியில் இருந்து இரத்தக்கசிவு
* ஆண்குறியில் ஏற்படும் புண் 4 வாரங்களுக்கும் மேலாக ஆறாமல் இருப்பது
* ஆண்குறியின் முன்தோல் தடித்து இருப்பது
* ஆண்குறியின் முன்தோலின் நிறத்தில் மாற்றம்
* ஆண்குறியில் அரிப்பு
* முன்தோலை பின்னோக்கி இழுப்பதில் சிரமம்
சிறுநீர் கழிக்க முடியாமை
குறைந்த அளவில் சிறுநீர் கழிப்பது அல்லது போதுமான சிறுநீர் கழிக்க முடியாமையானது சர்க்கரை நோய், நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே நீங்கள் திடீரென்று குறைந்த அளவில் சிறுநீரை கழித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
ஆண்குறி புற்றுநோயின் பிற அறிகுறிகள்...
* தோலின் ஒரு பகுதி தடிமனாவது
* கட்டி இருப்பது
* இரத்தக்கசிவுடனான புண்
* ஆண்குறியின் நுனிப்பகுதி சிவந்து, அரிப்பை ஏற்படுத்துவது
* லேசான புடைப்புகள்
* ஆண்குறியில் ஏதேனும் வளர்ச்சிகள்
* முன்தோலின் அடியில் இரத்தக்கசிவு
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, விரைவில் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications