Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
10 வயதுக்கு குறைவான குழந்தைகளை பாதிக்கும் புற்றுநோயை விட மோசமான நோய்... இதன் அறிகுறிகள் என்ன தெரியுமா?
குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்பட வாய்ப்புகள் அதிகம், அதற்கு காரணங்கள் அவர்களின் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பும், பெற்றோர்களுக்கு குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பற்றி முழுமையாக தெரியாமல் இருப்பதுதான்.
லாங்கர்ஹான்ஸ் செல் ஹிஸ்டியோசைடோசிஸ் (LCH) என்பது ஒரு அரிதான, புற்றுநோய் போன்ற நிலையாகும், இது லாங்கர்ஹான்ஸ் செல்கள் எனப்படும் ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்கள் அசாதாரணமாக பெருகி, உடல் முழுவதும் பல்வேறு உறுப்புகள் மற்றும் திசுக்களில் குவிந்துவிடும்.

LCH அனைத்து வயதினரையும் பாதிக்கிறது, ஆனால் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் மிகவும் அதிகம். இந்த பதிவில் LCH இன் காரணங்கள், அறிகுறிகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
காரணங்கள்
LCH நோயில் இருக்கும் முக்கியப் பிரச்சினை என்னவென்றால் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் தெளிவாக தெரியாமல் இருப்பதுதான், ஆனால் இது நோயெதிர்ப்பு அமைப்பு அசாதாரணங்களுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட செல்கள் (லாங்கர்ஹான்ஸ் செல்கள்) நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் தொற்றுக்கு எதிராக உடலைப் பாதுகாப்பதில் இவை பங்கு வகிக்கின்றன. LCH பாதிப்பு ஏற்பட்டால், இந்த செல்கள் பெருகி, உடலின் பல்வேறு பகுதிகளில் குவிந்து, கட்டிகள் மற்றும் பிற சிக்கல்களை உருவாக்க வழிவகுக்கிறது. சில ஆய்வுகள் LCH ஆனது சில இரசாயனங்கள் அல்லது வைரஸ்களின் வெளிப்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறுகின்றன. குடும்பத்தில் யாருக்கேனும் இந்த பாதிப்பு இருப்பது, குறிப்பிட்ட மரபணு மாற்றங்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவை LCH-க்கான பிற ஆபத்து காரணிகளில் முக்கியமானவை.
அறிகுறிகள்
LCH இன் அறிகுறிகள் நோயின் இடம் மற்றும் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. சில நேரங்களில், LCH எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம், மேலும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் அல்லது இமேஜிங் ஆய்வுகளின் போது மட்டுமே இந்த நிலை கண்டறியப்படலாம். இருப்பினும், சில முக்கியமான அறிகுறிகளில் எலும்பு வலி, தோலில் ஒரு சொறி அல்லது புண்கள், வீங்கிய நிணநீர் முனைகள், காய்ச்சல், சோர்வு மற்றும் அடங்கும். எடை இழப்பு, மூச்சுத் திணறல் அல்லது இருமல், வயிற்று வலி அல்லது வாந்தி போன்றவை அரிதான சந்தர்பங்களில் ஏற்படலாம். LCH பல உறுப்புகள் மற்றும் திசுக்களை பாதிக்கும் என்பதால், அதை கண்டறிவது மிகவும் சவாலானது. இதன் அறிகுறிகள் மற்ற ஆரோக்கியப் பிரச்சினைகளுடன் ஒத்துப்போவதால் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நோயாளிகள் ஏதேனும் அசாதாரண அறிகுறிகளை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.
எப்படிக் கண்டறிவது?
LCH நோயைக் கண்டறியும் முறை பொதுவாக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இமேஜிங் ஆய்வுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதேசமயம், X-RAY, CT ஸ்கேன்கள் அல்லது MRI ஸ்கேன்கள் போன்ற இமேஜிங் ஆய்வுகள் கட்டிகள் அல்லது பிற அசாதாரணங்களைக் கண்டறிய உதவும். சில அரிதான சந்தர்ப்பங்களில், நோயறிதலை உறுதிப்படுத்த பயாப்ஸி சோதனை தேவைப்படலாம். பயாப்ஸியின் போது, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஒரு சிறிய திசு மாதிரி அகற்றப்பட்டு, லாங்கர்ஹான்ஸ் செல்கள் உள்ளதா என நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. LCH மற்ற ஆரோக்கிய பிரச்சினைகளின் அறிகுறிகளைப் பிரதிபலிக்கும் என்பதால், அதைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும். LCH ஐ பரிந்துரைக்கக்கூடிய சில அறிகுறிகளைக் கண்டறிய மருத்துவர்கள் இரத்தப் பரிசோதனைகளைப் பயன்படுத்தலாம்.
சிகிச்சை
LCH இருப்பது உறுதியானால் அதற்கான சிகிச்சை அதன் தீவிரத்தன்மை மற்றும் இருக்கும் இடத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் இதற்கு சிகிச்சை தேவைப்படுவதில்லை, ஏனெனில் இந்த நிலை தானாகவே சரியாகக் கூடியது.. இருப்பினும், சிகிச்சை தேவைப்பட்டால், அதில் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை அல்லது நோய் எதிர்ப்பு சிகிச்சை ஆகியவை அடங்கும். மருத்துவ சிகிச்சைகள் தவிர, உடல் சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை போன்ற சிகிச்சைகள் இதன் அறிகுறிகளை நிர்வகிப்பதற்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

