Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
அடிக்கடி இந்த இடத்துல வலிக்குதா? அப்ப உங்களுக்கு சிறுநீரக கல் இருக்குன்னு அர்த்தம்... உஷார்...
Symptoms Of Kidney Stone In Tamil: நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான பணியை செய்து வருகின்றன. அதாவது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன. இப்படிப்பட்ட சிறுநீரகங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் சிறுநீரக கற்கள்.
ஒவ்வொரு ஆண்டும், அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிறுநீரகக் கல் பிரச்சனைகளுக்காக அறுவை சிகிச்சை செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சிறுநீரக கற்களானது தாதுக்கள் மற்றும் உப்புக்களால் உருவாகின்றன.

ஒருவருக்கு சிறுநீரக கற்களானது உணவுகள், அதிகப்படியான உடல் எடை, குறிப்பிட்ட மருத்துவ நிலைகள் மற்றும் ஒருசில மருந்துகள் போன்றவற்றால் உருவாகலாம். சிறுநீரக கற்கள் ஒருவரது சிறுநீரகங்கள் முதல் சிறுநீர்ப்பை வரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் உருவாகலாம்.
இந்த சிறுநீரக கற்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்வதோடு, சில சமயங்களில் சிறுநீரக செயலிழப்பையும் ஏற்படுத்தலாம். இப்போது சிறுநீரக கற்கள் இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தென்படும் என்பதைக் காண்போம்.
சிறுநீரக கற்கள் இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகள்:
* உங்கள் கீழ் முதுகின் பக்கவாட்டு பகுதியில் யாரேனும் குத்துவது போன்று கடுமையான உணர்கிறீர்களா? அதுவும் இந்த வலி வயிறு மற்றும் இடுப்பு பகுதி வரை பரவியிருந்தால், உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது.
* அடிக்கடி சிறுநீர் வருவது போன்று உணர்கிறீர்களா? அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுவது சிறுநீரக தொற்றின் அறிகுறியாக இருந்தாலும், சிறுநீரக கற்கள் இருந்தாலும், இந்த அறிகுறிகளை உணரக்கூடும்.
* சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல், வலி மற்றும் சிறுநீரின் நிறம் மங்கலாக அல்லது இரத்தம் கலந்து இருந்தால், அதுவும் சிறுநீரக கற்களின் எச்சரிக்கை அறிகுறிகளுள் ஒன்று.
* சிறுநீர் கழிக்கும் போது கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டிருந்தால் இந்த அறிகுறி தென்பட்டாலும், சிறுநீரக கற்கள் இருந்தாலும் இந்த அறிகுறி தெரியும்.
* திடீரென்று வாந்தி, குமட்டல் ஏற்படுவதோடு, திடீரென்று காரணமின்றி காய்ச்சல், குளிர் போன்றவற்றை சந்தித்தால், அதுவும் சிறுநீரக கற்களின் அறிகுறியாகும்.
சிறுநீரக கல் பிரச்சனைக்கான சிகிச்சை முறைகள்
சிறுநீரக கற்களை அகற்றும் பல சிகிச்சை முறைகள் உள்ளன. ஆயினும், சிறுநீரக கற்களின் அளவைப் பொறுத்து, சிகிச்சை முறைகள் வேறுபடும். இப்போது சிறுநீரக கற்களை அகற்ற மேற்கொள்ளும் சிகிச்சைகள் குறித்து காண்போம்.
* முதல் சிகிச்சை: சிறுநீரக கல் சிறியதாக இருந்தால், அவற்றை இயற்கையாக வெளியேற்ற மருத்துவர் பரிந்துரைப்பார். அதற்கு அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். அதுவும் தினமும் 3-4 லிட்டர் நீரை குடிக்க வேண்டும். இப்படி நீரை அதிகம் குடிக்கும் போது, அது சிறுநீர் கழிப்பதை அதிகரித்து, சிறிய கற்களை எளிதில் வெளியேற்றிவிடும்.
* இரண்டாவது சிகிச்சை: சிறுநீரக கற்கள் மிதமான அளவில் இருந்து, கடுமையான வலியை ஏற்படுத்தினால், அந்த வலியைக் குறைக்க மருத்துவர் வலி நிவாரண மருந்துகளை கொடுப்பார். அத்துடன் கல் எதிர்காலத்தில் உருவாவதைத் தடுக்க எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதையும் பரிந்துரைப்பார். அதைப் பின்பற்ற வேண்டும்.
* மூன்றாவது சிகிச்சை: கல் மிகவும் பெரியதாக இருந்தால், அப்போது மருத்துவர் அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைப்பார்.
எனவே சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், சற்றும் தாமதப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகி, அவரிடம் இதை தெரிவித்து, அவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் உணவு முறையைப் பின்பற்றுங்கள். ஒருவேளை தாமதம் செய்தால், சிறுநீரக கற்கள் பெரிதாகி, இயற்கையாக அகற்றுவதில் சிக்கலை சந்திக்க நேரிட்டு, அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். ஆகவே உஷாராக இருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications