Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
இந்த அறிகுறிகளை அடிக்கடி சந்திக்குறீங்களா? அப்ப சிறுநீரகத்தில் பெரிய பிரச்சனை இருக்குன்னு அர்த்தமாம்.. உஷார்..
Kidney Problem Symptoms In Tamil: நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளுள் சிறுநீரகங்களும் அடங்கும். இந்த சிறுநீரகங்கள் நமது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான வேலையை செய்கிறது. இந்த சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் போனால், அதன் விளைவாக உடலினுள் நச்சுக்களின் அளவு அதிகரித்து, அதன் விளைவாக உடலின் பிற உறுப்புக்களின் செயல்பாடு மோசமாக பாதிக்கப்படும்.
இது தவிர சிறுநீரகங்களிலும் நோய் வரத் தொடங்கிவிடும். எனவே ஒவ்வொருவரும் தங்களின் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள், காய்கறிகளை உண்பதை தவிர, நீரை அதிகம் அருந்த வேண்டும்.

சரி, சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாமல் இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். கீழே சிறுநீரகங்களின் செயல்பாட்டில் இடையூறு இருந்தாலோ அல்லது அல்லது சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தாலோ தெரியக்கூடிய சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களிடம் இந்த அறிகுறிகள் தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
சிறுநீர் கழிப்பதில் சிரமம்
சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால் தெரியக்கூடிய முதன்மையான மற்றும் பொதுவான அறிகுறி தான் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை சந்திப்பது. அதுவும் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்தால் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது அதிகப்படியான அழுத்தத்தை உணர்ந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த அறிகுறிகள் அனைத்தும் சாதாரணமானவை அல்ல. தீவிரமான பிரச்சனையின் முக்கிய அறிகுறிகளாகும்.
வீக்கம்
சிறுநீரகங்கள் தான் உடலில் இருந்து அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகின்றன. ஆனால் இந்த சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால், இந்த அதிகப்படியான நீரும், நச்சுக்களும் அப்படியே தேங்கிவிடும். இந்த நச்சுக்களை அப்படியே தேங்கினால், அது சிறுநீரகங்களை பாதிப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். இப்படி நச்சுக்கள் அதிகம் தேங்கும் போது, அதன் விளைவாக முகம் மற்றும் மூட்டுகளில் வீக்கத்தை உண்டாக்கும்.
நுரையுடன் கூடிய சிறுநீர்
சிறுநீரகங்களில் பிரச்சனை தீவிரமாக இருந்தால், வெளிப்படும் மற்றொரு அறிகுறி நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவது. இப்படி நுரையுடன் சிறுநீர் கழிக்கும் போது, அதை சாதாணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வாய் துர்நாற்றம்
இரத்தத்தில் நச்சுக்கள் அதிகமாக தேங்கியிருந்தால், அதன் விளைவாக வாய் துர்நாற்றம் அல்லது வாயின் சுவையில் மாற்றத்தை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் இந்த அறிகுறிகளை அதிகமாக சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தாமதிக்காமல் மருத்துவரை உடனே அணுகி தெரிவிக்க வேண்டும். ஏனெனில் எப்போது சிறுநீரகங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கிறதோ அல்லது சரியாக செயல்படாமல் போகிறதோ, அப்போது இப்படியான அறிகுறிகளை சந்திக்க நேரிடும்.
களைப்பு
சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால் வெளிப்படும் மற்றொரு அறிகுறி மிகுந்த உடல் சோர்வு மற்றும் களைப்பு. சிறுநீரகங்களானது ஆரோக்கியமான நிலையில் இருக்கும் போது, அது எரித்ரோபொய்டின் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றன. இதன் வேலை உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களை பராமரிப்பதாகும். ஆனால் எப்போது சிறுநீரகங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளதோ, அப்போது இரத்த சிவப்பணுக்களின் அளவு குறையத் தொடங்கி, மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும்.
வெளிரிய அல்லது அடர் நிற சிறுநீர்
சிறுநீரகங்கள் ஆரோக்கியமான நிலையில் இல்லாமல் இருந்தால், வெளியேற்றும் சிறுநீரின் நிறமும் சாதாரணமாக இருக்காது. ஒன்று சிறுநீர் அடர் நிறத்தில் இருக்கும் அல்லது வெளிரிய நிறத்தில் இருக்கும். இவ்விரு அறிகுறிகளுமே சிறுநீரகங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதன் எச்சரிக்கை அறிகுறிகளாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











