Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
நைட் உங்க முகத்தில் இந்த பிரச்சனைகளை சந்திக்குறீங்களா? அப்ப சிறுநீரகம் மோசமா இருக்குன்னு அர்த்தம்... உஷார்..
Kidney Damage Symptoms In Tamil: உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் சிறுநீரக பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறுநீரகங்களின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. சிறுநீரகங்கள் நன்கு ஆரோக்கியமாக செயல்பட்டால் தான், உடலில் நச்சுக்கள் தேங்காமல் வெளியேறி, உடல் சுத்தமாக இருக்கும். அதுவும் தற்போதைய நமது உணவு பழக்கத்தால் சிறுநீரகங்களில் நச்சுக்கள் அதிகம் தேங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
இப்படி நச்சுக்கள் அதிகம் தேங்கினால், அதன் விளைவாக சிறுநீரகங்களில் பிரச்சனைகள் வரத் தொடங்கிவிடும். சிறுநீரகங்களில் உள்ள பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், சிறுநீரகங்களின் செயல்பாடு படிப்படியாக குறைந்து, பின் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கும், சிறுநீரக செயலிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

சரி, சிறுநீரகங்களில் பிரச்சனை உள்ளது என்பதை எப்படி கண்டறியலாம் என்று கேட்கலாம். சிறுநீரகங்களில் பிரச்சனை இருப்பின் அதன் அறிகுறிகள் முகம் மற்றும் கண்களிலேயே தெரியத் தொடங்கும். இப்போது சிறுநீரக பிரச்சனைகளைக் சுட்டிக் காட்டும் வகையில் முகம் மற்றும் கண்களில் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.
வீங்கிய கண்கள்
சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால் தெரியக்கூடிய ஆரம்ப அறிகுறிகளுள் ஒன்ற தான் கண்களில் வீக்கம் ஏற்படுவது. எப்போது ஒருவரது சிறுநீரகங்களால் உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் போகிறதோ, அப்போது கண்களைச் சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்பட்டு, கண்கள் வீங்கும். பொதுவாக இப்படியான வீக்கத்தை உடல் சோர்வு அல்லது அழற்சியால் ஏற்பட்டதாக பலரும் குழப்பமடையலாம். ஆனால் சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தாலும் ஏற்படும் என்பதால், கண் வீக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
கண் இமைகளில் வலி மற்றும் அசௌகரியம்
இரவு நேரத்தில் கண்களைச் சுற்றி அசாதாரண வலி மற்றும் அசௌகரியத்தை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இப்படியான கண் அசௌகரியமானது சிறுநீரக சேதத்தின் முக்கியமான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
கருவளையம்
கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்கள் போதுமான தூக்கத்தைப் பெற முடியாமல் இருக்கும் போது அழகைக் கெடுக்கும் வகையில் ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஒருவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல், நச்சுக்களை வெளியேற்ற முடியாமல் போராடிக் கொண்டிருந்தால், அந்த நச்சுக்களி தேக்கத்தினால், சரும நிறத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படத் தொடங்கும். எனவே நல்ல தூக்கத்தை மேற்கொண்டும் கருவளையங்கள் ஏற்பட்டால், தாமதிக்காமல மருத்துவரை அணுகுங்கள்.
சரும வறட்சி
உங்களின் சருமம் திடீரென்று அதிகமாக வறண்டு போகிறதா? அதுவும் உங்கள் முகச்சருமம் அதிகமாக வறண்டு காணப்படுகிறதா? அப்படியானால் சிறுநீரகங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். நல்ல ஆரோக்கியமான சிறுநீரகங்களானது உடலில் திரவ அளவை பராமரிக்கவும், எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது.
ஒருவரது உடலில் திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் அளவு சரியாக இருந்தால், சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். அதுவே சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால், உடலில் திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, அதன் விளைவாக சரும வறட்சி மற்றும் எரிச்சலை சந்திக்க நேரிடும். எனவே இந்த அறிகுறிகளை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
சரும நிற மாற்றம்
சிறுநீரகங்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் வெளிப்படும் மற்றொரு அறிகுறி சரும நிறத்தில் மாற்றம் ஏற்படுவதாகும். அதாவது உங்களின் சருமத்தின் நிறமானது வழக்கத்திற்கு மாறாக மஞ்சள் நிறத்திலோ அல்லது சற்று பொலிவிழந்து கருமையாகவோ காணப்பட்டால், சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் உடலில் நச்சுக்கள் அதிகமாக தேங்கியுள்ளது என்று அர்த்தம். எனவே உங்கள் சரும நிறத்தில் மாற்றங்களை கண்டால் சாதாணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications