Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
உங்க முகத்துல இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உங்க சிறுநீரகம் ஆபத்தான நிலையில் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்...
Symptoms Of Kidney Damage In Tamil: நமது உடலிலேயே நாள் முழுவதும் ஓயாமல் வேலை செய்யக்கூடிய ஒரு முக்கியமான உறுப்பு தான் சிறுநீரகங்கள். இந்த சிறுநீரகங்கள் நமது உடலில் உள்ள நச்சுக்களை வடிகட்டி சிறுநீரின் வழியே வெளியேற்றும் பணியை செய்கின்றன. இப்படி சுத்தம் செய்யும் வேலையை சிறுநீரகங்கள் செய்வதால், அவற்றில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளன.
அதுவும் ஒருவர் போதுமான அளவு நீரை அருந்தாமல் இருந்தால், அவர்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளன. இது தவிர உயர் இரத்த அழுத்தம், அதிக இரத்த சர்க்கரை அளவு, உடல் பருமன் மற்றும் புகைப்பழக்கம் இருந்தால் சிறுநீரகங்களில் சேதம் ஏற்பட்டு சிறுநீரக நோய்கள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. அதோடு ஒருவரது பரம்பரையில் யாருக்கேனும் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், அவர்களுக்கும் சிறுநீரக நோய்கள் வரும் ஆபத்து உள்ளன.

சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால், நமது உடல் அவற்றை நமக்கு உணர்த்த ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதுவும் சிறுநீரகங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது ஒருவரது முகம் மற்றும் கண்களிலேயே அறிகுறிகளை வெளிக்காட்டும். இப்போது சிறுநீரக நோய் இருந்தால், முகம் மற்றும் கண்களில் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.
கண் வீக்கம்
சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால் முதலில் தெரியும் அறிகுறி கண் வீக்கம். சிறுநீரகங்களால் சரியாக அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற முடியாமல் போகும் போது அல்லது போராடும் போது, அந்த திரவங்கள் அப்படியே கண்களைச் சுற்றி தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தும். இப்படியான கண் வீக்கம் தொடர்ந்து இருந்தாலோ அல்லது தீவிரமாக இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகுங்கள்.
விவரிக்க முடியாத கருவளையங்கள்
அழகை கெடுக்கும் கருவளையங்கள் வெறும் போதுமான தூக்கம் கிடைக்காததால் மட்டும் வருவதில்லை, சிறுநீரகங்களில் பிரச்சனைகள் இருந்தாலும் வரக்கூடும். எனவே நீங்கள் எவ்வளவு தான் கருவளையங்களைப் போக்க முயற்சித்தும், எந்த பலனும் கிடைக்காவிட்டால், உங்கள் சிறுநீரகங்களில் பிரச்சனை உள்ளதென்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சரும நிற மாற்றம்
உங்கள் சருமத்தின் நிறம் வழக்கத்தை விட மஞ்சள் நிறமாகவோ அல்லது வெளிரிய தோற்றத்திலோ காணப்பட்டால், சிறுநீரகங்களில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. எப்போது சிறுநீரகங்களானது சரியாக செயல்படாமல், நச்சுக்கள் உடலிலேயே தேங்கி இருந்தால், அதன் விளைவாக சரும நிறம் வேறுபட்டு காணப்படும். எனவே உங்கள் சரும நிறத்தில் அசாதார மாற்றத்தைக் கண்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
தொடர்ச்சியான சரும வறட்சி மற்றும் அரிப்பு
சிறுநீரகங்களின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டால், அது சரும வறட்சி, அரிப்பு மற்றும் உடலின் நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகளில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். அதுவும் இப்படியான வறட்சியும், அரிப்பும் தொடர்ந்து நீடித்திருந்தால், சிறுநீரகங்களில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
முக வீக்கம்
சிறுநீரகங்களில் பிரச்சனை அல்லது நோய் இருந்தால், அது கண்களில் மட்டுமின்றி தாடை, கன்னங்கள் மற்றும் ஒட்டுமொத்த முகமும் வீங்கி காணப்படும். இந்த சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி அவரிடம் இந்த தெரிவித்து தவறாமல் சிகிச்சை பெறுங்கள்.
கண்களில் இரத்தக்கசிவு
உங்கள் கண்களில் இரத்தம் கசிந்திருப்பதை காண்கிறீர்களா? அதோடு தொடர்ந்து கண்கள் சிவந்து போய் உள்ளதா? அப்படியானால் உங்கள் சிறுநீரகங்களில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
மருக்கள்
சிறுநீரகங்களில் தீவிரமான பிரச்சனை இருந்தால் வெளிப்படும் மற்றொரு அறிகுறி தான் மருக்கள். உங்கள் உடலில் மருக்கள் அதிகமாக இருந்தால், உங்களின் இரண்டு சிறுநீரகங்களின் செயல்பாடுகளும் சரியாக செயல்படுவதில்லை என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications