Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உடம்பின் இந்த பகுதிகளில் வலியை சந்திச்சா.. அசால்ட்டா இருக்காதீங்க.. அது சிறுநீரக நோயின் அறிகுறியா இருக்கலாம்..
Kidney Damage Symptoms In Tamil: நமது உடலில் உள்ள சிறுநீரகங்கள் மிகவும் மென்மையானவை மற்றும் இவை உடலை சுத்திகரிக்கும் முக்கியமான பணியை செய்கின்றன. இந்த சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதால், இவற்றில் நச்சுக்கள் தேங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இதன் விளைவாக சிறுநீரகங்களில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டுமானால், நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஜங்க் உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது, அதன் விளைவாக சிறுநீரகங்களில் நச்சுக்கள் அதிகம் சேர வாய்ப்புள்ளது. ஒருவரது சிறுநீரகங்களில் நச்சுசுக்ள் அதிகம் சேர்ந்தால், அதனால் சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிக்கப்படுவதோடு, கடுமையாக சேதமடைந்து, மோசமான நோய்கள் வருவதற்கான அபாயம் உள்ளது.

சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால், அது பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தும். முக்கியமாக சிறுநீரக பிரச்சனை இருப்பினும், உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் வலியை அடிக்கடி சந்திக்க நேரிடும். அந்த வலியை கவனித்து சிகிச்சை மேற்கொண்டால், எளிதில் சரிசெய்யலாம். இப்போது சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால் எந்த பகுதிகளில் வலியை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம் .
கீழ் முதுகு
சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால் முதலில் கீழே முதுகுப் பகுதியில் தான் வலி தெரியும். ஏனெனில் நமது சிறுநீரகங்களானது விலா எலும்புக் கூண்டுக்கு கீழ் அமைந்துள்ளது. எனவே அடிக்கடி கீழ் முதுகுப் பகுதியில் வலியை அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
உடலின் பக்கவாட்டு பகுதிகள்
சிறுநீரகங்களில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது சிறுநீரகங்களில் கற்கள் இருந்தாலோ, உடலின் பக்கவாட்டுப் பகுதிகளில் அடிக்கடி வலியை சந்திக்க நேரிடும். அதாவது இடுப்பு வலியை அடிக்கடி சந்தித்தால், சிறுநீரகங்களில் பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புள்ளது. எனவே உடலின் பக்கவாட்டு பகுதியில் சந்திக்கும் வலியை புறக்கணிக்காதீர்கள்.
அடிவயிறு
சிறுநீரகங்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது சிறுநீரகங்களில் வீக்கம் அல்லது அவற்றின் செயல்பாட்டில் பாதிப்பு இருந்தால் , அடிவயிற்றுப் பகுதியில் தாங்கமுடியாத வலியை அடிக்கடி சந்திக்கக்கூடும். எனவே உங்கள் அடிவயிற்றில் அடிக்கடி வலி ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
இடுப்பு பகுதி
சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால், அதை உணர்த்தும் வகையில் இடுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வலி பரவியிருக்கும். அதுவும் சிறுநீரகங்களில் உள்ள கற்கள் சிறுநீர் பாதையில் நகரும் போது, அந்த வலி அப்படியே பரவுவதோடு, கடுமையானதாக இருக்கும்.
மேல் தொடை
சிறுநீரகங்களில் பிரச்சனை அல்லது சேதம் ஏற்பட்டிருந்தால், அதன் விளைவாக தொடைப்பகுதியில் வலியை சந்திக்க நேரிடும். அதுவும் அந்த வலி தொடையில் இருந்து அப்படியே கீழே இறங்கும். எனவே தொடைகளில் வலியை சந்தித்தால், அந்த வலியை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி கவனியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications