Latest Updates
-
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
September 2026 Career Horoscope: செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி எது தெரியுமா? இது பின்னோக்கி பாய காரணம் என்ன தெரியுமா? -
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்..
2 வாரத்திற்கும் மேலாக இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்..
Kidney Cancer Symptoms In Tamil: நமது உடலில் சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்றும் முக்கியமான பணியை செய்கின்றன. இப்படி நச்சுக்களை வடிகட்டுவதால் இந்த சிறுநீரகங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளன. அதில் ஒன்று தான் சிறுநீரக புற்றுநோய். உலகளவில் ஆண்கள், பெண்கள் என இருபாலரையும் தாக்கும் ஒரு பொதுவான புற்றுநோய் தான் சிறுநீரக புற்றுநோய்.
இந்த சிறுநீரக புற்றுநோய் ஹைப்பர்நெஃப்ரோமா என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறுநீரக குழாய்களின் புறணியில் செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளரும் போது ஏற்படுகிறது. இந்த சிறுநீரக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், அது நுரையீரல் மற்றும் அதைச் சுற்றியுள்ள உறுப்புகளுக்கும் பரவிவிடும். அதுவே ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் நிறைய பேருக்கு சிறுநீரக புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் சரியாக தெரியவில்லை. இப்படி தெரியாததால் நிறைய பேர் மேம்பட்ட கட்டத்தில் மருத்துவரை அணுகி ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கீழே சிறுநீரக புற்றுநோயின் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை உடனே அணுகுங்கள்.
சிறுநீரில் இரத்தம்
பொதுவாக சிறுநீரகங்களில் எப்போது கடுமையான நோய்த்தாக்குதல் அல்லது சேதம் ஏற்பட்டுள்ளதோ, அப்போது தான் இரத்தம் கலந்த சிறுநீரை கழிக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே ஒல்வொரு முறை கழிவறை செல்லும் போதும், இப்படி இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுவதை கண்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இது சிறுநீரகங்களில் உள்ள புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.
பக்கவாட்டுப் பகுதியில் வலி
நீங்கள் மேல் வயிறு, முதுகு மற்றும் உடலின் பக்கவாட்டு பகுதிகளில் வலியையோ அல்லது மிகுந்த அசௌகரியத்தையோ அனுபவித்தால், அதை சாதாரணமாக எண்ண வேண்டாம். ஏனெனில் சிறுநீரகங்களில் ஏதேனும் கட்டிகள் வளர்ந்து வந்தால், அதன் காரணமாக சிறுநீரங்களில் வீக்கம் ஏற்பட்டு இப்படியான வலி அல்லது அசௌகரியத்தை சந்திக்க நேரிடும். இப்படி வலி ஏற்படும் போது கை வைத்தியங்களை மேற்கொண்டும் எந்த ஒரு பலனும் கிடைக்காவிட்டால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
அடிவயிறு வீங்கியிருப்பது
சிறுநீரகங்களில் ஏதேனும் கட்டிகள் வளர்ந்து வந்தால், அதன் காரணமாக அடிவயிற்றுப் பகுதியில் வீக்கத்தைக் காணலாம். உங்கள் வயிறு இப்படி காரணமின்றி திடீரென்று வீங்கியிருப்பதைக் கண்டால், உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பாருங்கள்.
பரனியோபிளாஸ்டிக் சிண்ட்ரோம்
பரனியோபிளாஸ்டிக் சிண்ட்ரோம் வரவிருக்கும் சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகும். உடலின் நோயெதிர்ப்பு மண்டலமானது புற்றுநோய் செல்களுக்கு அசாதாரண வழியில் பதிலளிக்கும் போது அல்லது கட்டியானது உடல் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளை சுரக்கும் போது இந்த சிண்ட்ரோம் ஏற்படுகிறது. சிறுநீரக புற்றுநோய் உள்ள சுமார் 20 சதவீதம் பேருக்கு இந்த பரனியோபிளாஸ்டிக் சிண்ட்ரோம் உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே இந்த சிண்ட்ரோம் கொண்டு சிறுநீரக புற்றுநோயை ஆரம்பத்திலேயே அறியலாம்.
சரி, பரனியோபிளாஸ்டிக் சிண்ட்ரோம்மின் அறிகுறிகள் என்ன என்று நீங்கள் கேட்கலாம். பரனியோபிளாஸ்டிக் சிண்ட்ரோம்மின் அறிகுறிகள் பொதுவாக சிறுநீரக புற்றுநோயின் முதல் அறிகுறியாகும். மேலும் இந்த பரனியோபிளாஸ்டிக் சிண்ட்ரோம் சிறுநீரக புற்றுநோயை விட தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பரனியோபிளாஸ்டிக் சிண்ட்ரோம் அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை:
* காய்ச்சல்
* பசியின்மை
* அதிக கால்சியம்
* இரத்த பரிசோதனையில் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ப்ளேட்லெட்டுகள் அதிகமாக அல்லது மிகவும் குறைவாக இருப்பது
சிறுநீரக புற்றுநோயின் பிற அறிகுறிகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளைத் தவிர, சிறுநீரக புற்றுநோய் இருந்தால் பின்வரும் அறிகுறிகளும் தெரியும். அவை:
* உடல்நிலை சரியில்லாதது போன்று உணர்வது
* பசியின்மை
* எடை இழப்பு
* மிதமான காய்ச்சல்
* எலும்பு வலி
* உயர் இரத்த அழுத்தம்
* இரத்த சோகை
* அதிக கால்சியம்
சிறுநீரக புற்றுநோய் எந்த காரணங்களால் ஒருவருக்கு வரக்கூடும்?
சிறுநீரக புற்றுநோய்க்கான சரியான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இருப்பினும், சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் ஒருசில ஆபத்து காரணிகளைக் கூறுகின்றனர். அவை பின்வருமாறு:
* புகைப்பிடிப்பது
* உடல் பருமன்
* உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர்டென்சன்
* குடும்ப வரலாறு
* கதிரியக்க தெரபி
* மரபணு மாற்றங்கள் அல்லது பிறழ்வுகள்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications