Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்க டூத் பேஸ்ட்-ல இந்த பொருள் இருந்தா யூஸ் பண்ணிடாதீங்க.. இல்ல ரொம்ப அவதிப்படுவீங்க...
Toothpaste: நாம் காலையில் எழுந்ததும் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் தான் டூத் பேஸ்ட். ஆனால் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் பாதுகாப்பானது தானா என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். ஏனெனில் தற்போது நாம் உபயோகிக்கும் பல பொருட்களில் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தினமும் பற்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் டூத் பேஸ்ட்டிலும் நமக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்கத் தான் செய்கின்றன. அதில் பலரும் நினைப்பது ப்ளூரைடு தான். ஆனால் இந்த ப்ளூரைடு தவிர மற்றொரு பொருளும் நமது டூத் பேஸ்ட்டில் இருக்க வாய்ப்புள்ளன. அது தான் சோடியம் லாரில் சல்பேட். இதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இல்லையெனில் அதுப்பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

நேச்சுரோபதி மருத்துவரான டாக்டர் ஜானின் பௌரிங் தனது இன்ஸ்டா பக்கத்தில், சோடியம் லாரில் சல்பேட் உள்ள டூத் பேஸ்ட்டை பயன்படுத்தக்கூடாது என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சோடியம் லாரில் சல்பேட் என்னும் பொருளானது பற்களைத் துலக்கும் போது நுரையை உருவாக்க டூத் பேஸ்ட்டில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த சோடியம் லாரில் சல்பேட் ஒரு எரிச்சலூட்டி மற்றும் இது வாயில் புண்களை வரத் தூண்டும். எனவே இந்த சோடியம் லாரில் சல்பேட் இருக்கும் டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
சோடியம் லாரில் சல்பேட் என்றால் என்ன?
சோடியம் லாரில் சல்பேட் (SLS) என்பது பல தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் துப்புரவு தயாரிப்புகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இது அதன் சுத்திகரிப்பு மற்றும் நுரைக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது பற்கள் மற்றும் ஈறுகளில் இருந்து அழுக்குகளை அகற்ற உதவுகிறது.
இருப்பினும் சிலருக்கு இந்த சோடியம் லாரில் சல்பேட் சேராமல் போகலாம். இந்த பொருள் நிறைந்த டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது வாயில் எரிச்சலுடன் புண்ணையும் சந்திக்கலாம். எனவே இந்த சோடியம் லாரில் சல்பேட் இல்லாத டூத் பேஸ்ட்டை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
சோடியம் லாரில் சல்பேட் உள்ள டூத் பேஸ்ட்டைப் பயன்படுத்துவதால் சந்திக்கும் அபாயங்கள்
சோடியம் லாரில் சல்பேட் உள்ள டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவதால், அது சிலர் எரிச்சல் அல்லது காயங்கள் அல்லது கடுமையான வறட்சியை ஏற்படுத்தலாம். இன்னும் அரிதான நேரங்களில், இது சிலருக்கு வீக்கம் அல்லது அரிப்பை ஏற்படுத்தக்கூடும். அதுவும் சென்சிடிவ்வானவர்கள் இந்த சோடியம் லாரில் சல்பேட் உள்ள டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது, அது ஈறுகள் அல்லது பற்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி, நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
டூத் பேஸ்ட் வாங்கும் போது ஒருவர் பின்பற்ற வேண்டியவை:
* முதலில் டூத் பேஸ்ட்டின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கங்களை படித்து பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது "SLS-free" குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த பேஸ்ட்டால் எவ்வித எரிச்சலும் ஏற்படாது என்று அர்த்தம்.
* நீங்கள் அடிக்கடி எரிச்சல் அல்லது கூச்சத்தை அனுபவித்தால், உடனே பல் மருத்துவரை அணுக வேண்டும். பின் பல் மருத்துவர் பரிந்துரைக்கும் டூத் பேஸ்ட்டை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
* முக்கியமாக வாய் சுத்தமாக இருக்க வேண்டுமானால், தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் பற்களைத் துலக்குவது, ப்ளாசிங் செய்வது போன்ற பழக்கங்களை வழக்கமாக கொள்ள வேண்டும். இப்படியான பழக்கங்களால் வாயில் தொற்றுகள் ஏற்படும் அபாயம் குறைவதோடு, ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியமும் மேம்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications