Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
உங்ககிட்டஇந்த மருந்துகள் இருந்தா உடனே தூக்கி போடுங்க.. ஏன்னா சுமார் 156 மருந்துக்கு அரசு தடை போட்டுருக்கு..
India Bans 156 FDC Medicines: இந்தியாவில் காய்ச்சல், சளி, ஒவ்வாமை மற்றும் வலி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் உட்பட பரவலாக விற்கப்படும் சுமார் 156 நிலையான-டோஸ் கலவை (FDC) மருந்துகளை, மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறி இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது.
FDC மருந்துகள் என்பவை ஒரு நிலையான விகிதததில் இரண்டு அல்லது அத்ற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்து பொருட்களின் கலவையைக் கொண்டவையாகும். இந்த வகையான மருந்துகளை காக்டெய்ல் மருந்துகள் என்றும் அழைப்பர்.

சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, பிரபலமான மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்படும் வலி நிவாரணி மருந்துகளில் ஒன்றாக பயன்படுத்தப்படும் பிரபலமான கலவைகளில் ஒன்றான 'Aceclofenac 50mg Paracetamol 125mg மாத்திரையை அரசு தடை செய்துள்ளது. இது தவிர இன்னும் 155 FDC மருந்துகளை இந்திய அரசு பாதுகாப்பற்றதாக கருதி விற்பதற்கு தடை விதித்துள்ளது. அந்த மருந்துகளாவன:
* மெஃபெனாமிக் அமிலம் + பாராசிட்டமால் ஊசி
* செடிரிசின் எச்.சி.எல் + பாராசிட்டமால் + ஃபெனைல்ஃப்ரைன் எச்.சி.எல்
* லெவோசெடிரைசின் + ஃபெனைலெஃப்ரின் எச்.சி.எல் + பாராசிட்டமால்
* பாராசிட்டமால் + குளோர்பெனிரமைன் + மாலேட் + ஃபீனைல் ப்ரோபனோலமைன்
* கேமிலோபின் டைஹைட்ரோகுளோரைடு 25 மி.கி பாராசிட்டமால்
* டிராமடோல் என்னும் ஒரு ஓபியாய்டு அடிப்படையிலான வலி நிவாரணி
மேலும் டாரைன், காஃப்பைன் ஆகியவற்றின் கலவையையும் மத்திய அரசு தடை செய்துள்ளது. இப்படி நிலையான டோஸ் காம்பினேஷன் மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவது மனிதர்களுக்கு பாதுகாப்பற்றதாகவும், ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மத்திய அரசு கருதுகிறது. இப்படி FDC மருந்துகளை பகுத்தறிவற்றதாக கருதி, ஒரு நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ததாக அரசு கூறியுள்ளது.
மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியமும் (DTAB) இந்த FDC மருந்துகளை ஆய்வு செய்து, இந்த மருந்துகளில் உள்ள பொருட்களுக்கு எந்த சிகிச்சை நியாயமும் இல்லை என்று கூறியது. எனவே இந்த FDC மருந்துகள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். மேலும் பொது நலன் கருதி, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940ன் பிரிவு 26 A இன் கீழ், இந்த FDC மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்வது அவசியம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே நண்பர்களே! உங்கள் வீட்டில் இந்த காம்பினேஷனில் மருந்துகள் இருந்தால், அவற்றை பயன்படுத்துவது உடனே நிறுத்துங்கள். மேலும் எந்த மருந்தையும் எடுக்கும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே எடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











