For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி ஒரு பாலியல் நோயா?... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மக்களே!

மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? வாங்க அதன் சிகிச்சைகள் மற்றும் அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

|

மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? வாங்க அதன் சிகிச்சைகள் மற்றும் அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Human Papillomavirus (HPV) Infection

மனித பாப்பிலோமா வைரஸ் பொதுவாக தொற்று நோயை உண்டாக்குகிறது. இது பொதுவாக ஒருவரின் சருமத்தில் இருந்து மற்றவர்க்கு தொற்றக் கூடியது. இந்த பரிமாற்றம் பெரும்பாலும் உடலுறவு காரணமாக நிகழ்கிறது. எனவே பாலியல் ரீதியாக ஈடுபடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எளிதாக தொற்றிக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரவும் விதம்

பரவும் விதம்

இந்த ஹெச்பிவி வைரஸ் குத, யோனி மற்றும் வாய்வழி உடலுறுவின் போது பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து ஆரோக்கியமான நபருக்கு உடலுறுவின் வழியாக தொற்றக் கூடும். இந்த வைரஸ் குறிப்பாக ஆணுறுப்பு, உமிழ்நீர் மற்றும் யோனி திரவத்தின் வழியாக பரவக் கூடியது. இது தொண்டை, நாக்கு, கை மற்றும் கால் பகுதிகளை பாதிக்கக் கூடும்.

MOST READ: வாட்டர் பாட்டிலை சூரிய ஒளியில் வைத்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

தொற்று நோய் பாதிப்பு

தொற்று நோய் பாதிப்பு

பெரும்பாலான மக்கள் இந்த ஹெச்பிவி தொற்று நோயால் வாழ்நாளில் ஒரு முறையாவது பாதிப்படைகின்றனர். சில நேரங்களில் இந்த பாதிப்பு தானாகவே போய் விடும். சில சந்தர்ப்பங்களில் இது புற்றுநோய் மற்றும் பிறப்புறுப்பு மருக்களை ஏற்படுத்தக் கூடும். கிட்டத்தட்ட 100 வகையான ஹெச்பிவி வைரஸ்கள் உள்ளன. இவற்றுள் 14 வகை வைரஸ்கள் புற்றுநோயை உண்டாக்க வல்லது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கருத்துப்படி , 90% தொற்று இரண்டு வருடங்களில் தானாகவே சரியாகி விடுகிறது. சிலருக்கு இந்த அறிகுறிகள் தெரிவதே இல்லை. இதனால் இது எளிதாக மற்றவர்க்கு பரவி விடுகிறது.

வெவ்வேறு அறிகுறிகள்

வெவ்வேறு அறிகுறிகள்

ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் பரவும் போது அறிகுறிகள் காட்டத் தொடங்குகிறது. இதன் மூலம் எந்த வகையான ஹெச்பிவி வைரஸ் தாக்கியுள்ளது என்பதை கண்டறிகிறார். கீழ்க்கண்ட அறிகுறிகளை வைத்து கண்டறியலாம்.

பிறப்புறுப்பு மருக்கள்

பிறப்புறுப்பு மருக்கள்

இந்த மருக்கள் பொதுவாக ஆசன வாய், வுல்வா, ஆணுறுப்பு, யோனி மற்றும் விதைப்பையில் ஏற்படுகிறது. புண்கள், புடைப்புகள் மற்றும் காலிஃப்ளவர் வடிவில் காணப்படும்.

ப்ளாண்டர் மருக்கள்

இது பார்ப்பதற்கு கடினமாக தானியம் போன்று காணப்படும். இது பாதங்களில் கொப்புளங்களை உண்டாக்கும்.

பொதுவான மருக்கள்

இந்த மருக்கள் கடினமாக கைகள் மற்றும் விரல்களில் உண்டாகும். கொப்புளங்கள் போன்று தடித்து காணப்படும்.

தட்டையான மருக்கள்

முகம், தாடிப்பகுதி,கால்கள் போன்ற பகுதிகளில் தட்டையான மருக்கள் தோன்றும்.

ஓரோபார்னீஜியல் மருக்கள்

ஓரோபார்னீஜியல் மருக்கள்

இது நாக்கு மற்றும் தொண்டை பகுதியில் வெவ்வேறு வடிவங்களில் அளவுகளில் வரக் கூடியது.

MOST READ: இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?...இத படிங்க... தெரிஞ்சிக்கங்க...

தொற்றுக்கான காரணங்கள்

தொற்றுக்கான காரணங்கள்

சருமத்தில் ஏற்படும் காயங்கள், கீறல்கள், சிராய்ப்பு இதன் வழியாக இந்த வைரஸ் எளிதாக சருமத்தினுள் நுழைந்து விடும்.

பாதிக்கப்பட்ட சருமத்துடன் தொடர்பு கொள்ளும் போது பரவும்.

உடலுறவு மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக இருக்கும் போது ஏற்படுகிறது.

கர்ப்பிணித் தாய் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தால் நோய்த் தொற்று குழந்தைக்கும் ஏற்படலாம்.

பாதிக்கப்பட்ட நபருடன் முத்தம் வைக்கும் போது வாய்வழியாக பரவக் கூடும்.

புகைப்பிடிப்பவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருந்தால் அவரின் சிகரெட்டை வாங்கி குடிப்பவருக்கும் இது பரவக் கூடும்.

ஆபத்துக்கள்

ஆபத்துக்கள்

அதிக பேருடன் பாலியல் தொடர்பு கொள்ளுதல்

உடலில் உள்ள வெட்டுக்கள் மற்றும் காயங்கள் வழியாக

குறைந்த நோயெதிப்பு சக்தி

பொது நீச்சல் குளங்களில் குளித்தல் இவற்றின் மூலம் பரவலாம்.

கண்டறிதல்

கண்டறிதல்

இந்த வைரஸ் தொற்றை கீழ்க்கண்ட முறைகள் மூலம் கண்டறியலாம்

பாப் ஸ்மியர் சோதனை

டி. என். ஏ சோதனை

அசிட்டிக் அமில சோதனை

சில சமயங்களில் இந்த ஹெச்பிவி வைரஸ் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படவும் காரணமாக அமைகிறது. இந்த மாதிரியான நேரங்களில் புற்றுநோய் கட்டியிலிருந்து சாம்பிள்கள் லூப் எலக்ட்ரோ சர்ஜிகல் எக்சிஷன் பிராசீசர் (LEEP) மற்றும் கிரையோதெரபி மூலம் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

சிகிச்சை முறைகள்

சிகிச்சை முறைகள்

பல சந்தர்ப்பங்களில் இந்த நோய்த் தொற்றுக்கு சிகிச்சை தேவையில்லை. ஆனால் சில தீவிரமான பாதிப்புகள் இருந்தால் கீழ்க்கண்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

சாலிசிலிக் அமிலம், ட்ரைக்ளோரோஅசெடிக் அமிலம் மற்றும் இமிகிமோட் ஆகியவற்றைக் கொண்ட மருந்துகள் ஹெச்பிவி வைரஸை அழிக்க பயன்படுகிறது.

எலக்ட்ரிக் கரண்ட் கொண்டு வைரஸை எரிப்பது அல்லது பாதிக்கப்பட்ட மருக்களை உறைய வைப்பது, பொதுவான மருக்களுக்கு திரவ நைட்ரஜனை பயன்படுத்துவது போன்றவற்றை செய்கின்றனர்.

கோல்போஸ்கோபி மூலம் கருப்பை வாய் கட்டிகளை முன்னரே ஆராய்ந்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

MOST READ: புண்ணியம் தரும் புரட்டாசி சனி - பெருமாளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

தடுக்கும் முறைகள்

தடுக்கும் முறைகள்

கைகளில் மருக்கள் இருந்தால் அதை நகங்களால் குத்தவோ, நகங்களை கடிக்கவோ வேண்டாம்.

நீச்சல் குளங்களுக்கு செல்லும் போது சொந்த காலணிகளை அணியுங்கள். லாக்கர் அறை வரை வெறுங்காலுடன் நடக்க வேண்டாம்.

உடலுறவின் போது காண்டம் பயன்படுத்துங்கள், வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்று இருக்கும் போது இது பரவுவதை தடுக்க முடியும்.

மற்றவர்களின் எச்சி சிகரெட்டை வாங்கி புகைக்காதீர்கள்.

மற்ற நபரின் காலணிகளை மற்றும் உள்ளாடைகளை வாங்கி அணியாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Human Papillomavirus (HPV) Infection: Symptoms, Causes, Risk Factors, Treatment And Prevention

Human papillomavirus (HPV) infection is a common viral infection that occurs mainly due to skin-to-skin contact. The transfer occurs mostly due to sexual intercourse and so, sexually active men and women are its main target.
Story first published: Wednesday, September 18, 2019, 15:32 [IST]
Desktop Bottom Promotion