For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா?... நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது?

சரும நோயாக இருக்க கூடும். அதற்கு பெயர் தான் செபொர்ஹெக் டெர்மடிஸ் என்று பெயர். அதற்கான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

|

நீங்கள் காலையில் தூங்கி எழுந்திருக்கும் போதே தலையில் அரிப்பு மற்றும் வறண்ட கூந்தல் பிரச்சனையை சந்தித்தது உண்டா? இந்த அரிப்பு தலையில் இருக்கும் பொடுகால் கூட ஏற்படலாம். ஆனால் இந்த அரிப்பு தொடர்ந்து இருந்தால் அது ஒரு சரும நோயாக இருக்க கூடும்.

 Seborrheic Dermatitis

அதற்கு பெயர் தான் செபொர்ஹெக் டெர்மடிஸ் என்று பெயர். இந்த செபொர்ஹெக் டெர்மடிஸ் பிரச்சனையை சரி செய்ய 11 வீட்டு வைத்திய முறைகள் கூறப்பட்டுள்ளன. அது பற்றித்தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்க இருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 செபொர்ஹெக் டெர்மடிஸ்

செபொர்ஹெக் டெர்மடிஸ்

இது ஒரு சரும பிரச்சினை ஆகும். இது தலை, முகம் , மார்பு, முதுகு மற்றும் இடுப்பு போன்ற பகுதிகளில் ஏற்படுகிறது. இந்த அழற்சி நோய் அரிப்பு, செதில் செதிலாக வருதல், அரிப்பு போன்றவற்றை தலையில் ஏற்படுத்தும். இந்த பிரச்னை ஏற்பட்டவரின் தலையானது எண்ணெய் பிசுக்குடன், அரிப்பு மற்றும் செதில் செதிலாக காணப்படும்.

இந்த சரும பிரச்சினை வருவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இது தலையில் எண்ணெய் பசையை அதிகரித்து முடி உதிர்தலுக்கு வழி வகை செய்கிறது. இந்த பிரச்சினையை நீங்கள் சரியாக கையாண்டால் போதும் எளிதாக வீட்டிலிருந்தே இதை சரி செய்து விடலாம்.

இந்த செபொர்ஹெக் டெர்மடிஸ் பிரச்சனையை சரி செய்ய 11 வீட்டு வைத்திய முறைகள் கூறப்பட்டுள்ளன.

 லெமன்

லெமன்

லெமனின் அமிலத்தன்மை தலையை நன்றாக சுத்தம் செய்கிறது. இது ஆரோக்கியமான கூந்தல் வளர்வதற்கும், முடி உதிர்தலையும் சரி செய்கிறது.

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் லெமன் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்

அதில் காட்டன் பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளே செய்யுங்கள்

15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்

பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவுங்கள்

இதை வாரத்திற்கு 1-2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் தயிர்

வெள்ளரிக்காய் மற்றும் தயிர்

வெள்ளரிக்காய் உங்கள் தலைக்கு இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மையை தருகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் தலையை சுத்தம் செய்து ஈரப்பதத்தை கொடுக்கிறது. தலையில் ஏற்படும் அரிப்பை போக்குகிறது.

தேவையான பொருட்கள்

5-6 வெள்ளரிக்காய் துண்டுகள்

2 டேபிள் ஸ்பூன் தயிர்

பயன்படுத்தும் முறை

வெள்ளரிக்காய் துண்டுகளை நன்றாக அரைத்து கொள்ளவும்.

அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

தலையில் அப்ளே செய்து 30 நிமிடங்கள் விடவும்

மைல்டு ஷாம்பு கொண்டு அலசுங்கள்.

வாரத்திற்கு 2 முறை செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

MOST READ:காதுக்குள்ள இவருக்கு எவ்ளோ அழுக்கு சேர்ந்திருச்சு தெரியுமா? கேட்டு ஷாக் ஆகிடாதீங்க...

கற்றாழை மற்றும் க்ரீன் டீ

கற்றாழை மற்றும் க்ரீன் டீ

இது தலைக்கு போதுமான ஈரப்பதத்தை தருவதோடு செபொர்ஹெக் டெர்மடிஸ் என்ற பிரச்சனைக்கு மருந்தாகிறது. இந்த க்ரீன் டீயில் அடர்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது தலைமுடியை புதுப்பித்து முடி உதிர்தலை தடுக்கிறது.

தேவையான பொருட்கள்

1/2 கப் கற்றாழை ஜெல்

1 கப் க்ரீன் டீ

பயன்படுத்தும் முறை

கற்றாழை ஜெல்லை ஒரு கப் க்ரீன் டீயில் கலந்து கொள்ளுங்கள். எந்த வித கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள்

தலையை நன்றாக அதைக் கொண்டு மசாஜ் செய்யுங்கள்

. 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்

குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள்

இதை வாரத்திற்கு 1 முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு மற்றும் தேங்காய் எண்ணெய்

பூண்டு மற்றும் தேங்காய் எண்ணெய்

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், பூஞ்சை எதிர்ப்பு பொருள் போன்றவை தலையை சுத்தம் செய்யவும், முடி உதிர்தலை போக்கவும் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய் தலையில் உட்புகுந்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது. முடி உதிர்தலை போக்குகிறது.

தேவையான பொருட்கள்

6-8 பூண்டு பற்கள்

2 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்

பயன்படுத்தும் முறை

பூண்டின் தோலை நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள்

இதை தேங்காய் எண்ணெய்யில் நன்றாக கலந்து கொள்ளுங்கள்

சில விநாடிகள் தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும்.

30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்

இதை வாரத்திற்கு 1-2 முறை செய்து வரும் போது நல்ல மாற்றம் கிடைக்கும்.

தேன் மற்றும் முட்டையின் கரு

தேன் மற்றும் முட்டையின் கரு

தேன் ஒரு இயற்கையான மருந்தாகும். தேனில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள், ஆக்ஸினேற்றிகள் தலையில் ஏற்படும் பிரச்சினையை சரி செய்து முடி உதிர்தலை போக்குகிறது. முட்டைக் கருவில் உள்ள புரோட்டீன் கூந்தலை வலிமையாக்குகிறது.

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் தேன்

1 முட்டை கரு

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் முட்டையின் கருவை மட்டும் தனியே பிரித்து கொள்ளுங்கள்

இப்பொழுது அதனுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்

இதை உங்கள் கூந்தல் மற்றும் முடிகளில் தடவிக் கொள்ளுங்கள்

30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்

பிறகு கழுவுங்கள்

இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வாருங்கள் தலையில் இருக்கும் பிரச்சனை சரி ஆகிடும்.

MOST READ:அடக்கொடுமையே! சுன்னத் செய்த போது மயக்கம் போட்டு விழுந்த சிறுவன்...

வேப்பிலை, எள் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள்

வேப்பிலை, எள் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள்

வேப்பிலையில் ஆன்டி பாக்டீரியல், அலற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி செப்டிக் பொருட்கள் போன்றவை உள்ளன. இவை தலைக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து முடி உதிர்தலை போக்குகிறது. மஞ்சளும் அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை இருப்பதால் தலைமுடியை சுத்தம் செய்து கூந்தலை வலிமையாக்குகிறது.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் வேப்பிலை

1 டேபிள் ஸ்பூன் எள் எண்ணெய்

1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் வேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள்

அதனுடன் எள் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்

இந்த பேஸ்ட்டை நன்றாக தலையில் அப்ளே செய்யுங்கள்

30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்

பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு அலசுங்கள்.

கடலை மாவு மற்றும் தயிர்

கடலை மாவு மற்றும் தயிர்

கடலை மாவு மற்றும் தயிர் தலைக்கு சிறந்த சுத்தம் செய்யும் பொருளாக இருக்கிறது. செபொர்ஹெக் டெர்மடிஸ் என்ற பிரச்சனைக்கு எதிராக செயல்படுகிறது.

தேவையான பொருட்கள்

2-3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு

1/2 கப் தயிர்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். கட்டியில்லாமல் மென்மையாக கலக்குங்கள். இந்த கலவையை தலையில் அப்ளே செய்யுங்கள். 20-25 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு அலசுங்கள். இதை இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் பவுடர்

பேக்கிங் பவுடர்

பேக்கிங் சோடாவில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை தலையில் உள்ள பாக்டீரியா தொற்றை போக்கி முடி உதிர்தலை போக்குகிறது.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா

3 டேபிள் ஸ்பூன் தண்ணீர்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் பேக்கிங் பவுடர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்

இந்த பேஸ்ட்டை தலையில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள்

இதை அப்படியே 5 நிமிடங்கள் வைத்திருங்கள்

பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவுங்கள்.

இதை ஒரு மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆளி விதைகள்

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்றவை தலையை சுத்தம் செய்ய பயன்படுகிறது. இதுவும் செபொர்ஹெக் டெர்மடிஸ் பிரச்சனைக்கு சிறந்த ஒன்று.

தேவையான பொருட்கள்

1/4 கப் ஆளி விதைகள்

1 டேபிள் ஸ்பூன் பிழிந்த லெமன் ஜூஸ்

2 கப் தண்ணீர்

பயன்படுத்தும் முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி சூடாக்குங்கள்

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஆளி விதைகளை போடுங்கள்.

கலவையை நன்றாக அடர்த்தியாக வரும் வரை காத்திருங்கள். லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

சூடான கலவையை எடுத்து ஆற விடுங்கள்

அது குளிர்ந்த உடன் ஜெல் வடிவத்தில் கிடைக்கும்

இந்த பேஸ்ட்டை தலையில் மற்றும் கூந்தலில் தடவுங்கள்.

இந்த ஜெல்லை ஈரப்பதத்திற்காகவும், ஸ்டைலிங் ஜெல்லாகவும் கூட மாற்றி வரலாம்.

டீ ட்ரி ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்

டீ ட்ரி ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்

டீ ட்ரி ஆயிலில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை தலைக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுத்து தலைமுடியை வலுவாக்குகிறது.

தேவையான பொருட்கள்

3-5 சொட்டுகள் டீ ட்ரி ஆயில்

2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள்

அதில் டீ ட்ரி ஆயிலை சேருங்கள்

இப்பொழுது இந்த எண்ணெய்யை லேசாக சூடு பண்ணுங்கள். தலைமுடியை பாதிக்காத அளவுக்கு சூடு இருந்தால் போதும்.

இதை தலை மற்றும் கூந்தலில் தடவுங்கள்

45 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்

பிறகு மைல்டு ஷாம்பு மற்றும் வெதுவெதுப்பான நீர் கொண்டு அலசுங்கள்.

இதை வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல பலனை காணலாம்.

MOST READ:உட்காருமிடத்தில் இப்படி கட்டி இருக்கிறதா? வலி உயிர் போகிறதா? என்ன பண்ணலாம்?

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை தலையில் உள்ள பாக்டீரியாவை அழிக்கிறது. இது pH அளவை சமநிலையில் வைக்கவும், தலையில் ஏற்படும் அரிப்பு, செதில்களை நீக்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

4 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர்

2 கப் தண்ணீர்

பயன்படுத்தும் முறை

ஆப்பிள் சிடார் வினிகரை நீரில் கலந்து கொள்ளுங்கள்

ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள்.

5 நிமிடங்கள் அப்படியே வைத்து இருங்கள்.

பிறகு தண்ணீரைக் கொண்டு கழுவுங்கள்

இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் செபொர்ஹெக் டெர்மடிஸ் என்ற பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Hair Loss Caused By Seborrheic Dermatitis

Do you wake up to itchy and flaky scalp? An itchy, flaky scalp generally indicates dandruff. But, when this condition becomes acute, it might be more than just dandruff. This can be due to a chronic skin disorder known as Seborrheic Dermatitis.
Desktop Bottom Promotion