Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும்
இந்த எளிய வழிகள் மூலம் உங்க குக்கரில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை நீக்கி புதுசு போல மாற்றலாமாம்...!
கிட்டதட்ட அனைத்து இந்திய சமையலறையில் இருக்கும் ஒரு பயனுள்ள பொருள் என்றால் அது கண்டிப்பாக பிரஷர் குக்கர். சமையலறையில் நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துவதில் குக்கரின் பங்கு மிகவும் முக்கியமானது.
கிட்டதட்ட அனைத்து இந்திய சமையலறையில் இருக்கும் ஒரு பயனுள்ள பொருள் என்றால் அது கண்டிப்பாக பிரஷர் குக்கர். சமையலறையில் நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துவதில் குக்கரின் பங்கு மிகவும் முக்கியமானது. குக்கர் நம்முடைய நேரத்தையும், பணத்தையும் சேமிக்கும் வேலையை சிறப்பாகவே செய்கிறது.

தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் குக்கரை சுத்தமாக பராமரிப்பது கொஞ்சம் கடினமான பணிதான். அதில் ஏதேனும் விடாப்பிடியான கரை ஏற்பட்டால் நம்முடைய நேரத்தை சேமிக்கும் குக்கரே நம்முடைய நேரத்தை முழுதாக தின்றுவிடும். அதிர்ஷ்டவசமாக, சில ஸ்மார்ட்டான வழிகளில் குக்கரில் இருக்கும் விடாப்பிடியான கரையை விரைவில் நீக்கலாம். குக்கரை திறம்பட சுத்தம் செய்ய உதவும் எளிய தந்திரங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தீய்ந்த உணவு
பிரஷர் குக்கரில் உணவு தீய்ந்து போய்விட்டால், அறை வெப்பநிலையில் தண்ணீரில் நிரப்பி, 15 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் அடுப்பின் மீது வைக்கவும். அதன்பின் அதனை குளிர விடவும், பின்னர் அதை ஒரு ஸ்பாஞ்சு மற்றும் பாத்திரங்களைக் கழுவும் திரவத்தைக் கொண்டு எளிதில் சுத்தப்படுத்தலாம்.

மசாலாக்கறை
மசாலாப் பொருட்கள் குக்கரின் விளிம்பில் ஒரு விடாப்பிடியான கறையை விட்டுச் செல்வது அடிக்கடி நிகழ்கிறது. இது போன்ற சமயங்களில் சிறிது பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாற்றை அதன் மீது தெளித்து 5 நிமிடம் ஊற விடவும். அதன்பின்னர் ஸ்பாஞ்சு மற்றும் வழக்கமான திரவம் மூலம் அதனை எளிதாக சுத்தம் செய்யலாம்.

உணவுக்கறை
பிரஷர் குக்கரில் உணவுக் கறைகள் ஏற்படுவது பெரும்பாலும் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும், அவற்றை அகற்ற, கறைகள் அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை நிரப்பவும். பானையில் வெங்காய தோலின் 5-6 வெளிப்புற அடுக்குகளைச் சேர்க்கவும். அதிக வெப்பத்தில் வைக்கவும். 20 நிமிடங்கள் கொதிக்க விடவும், பின்னர் மெதுவாக கறைகளை துடைத்தால் எளிதில் நீக்கிவிடலாம்.

வெள்ளைக்கறை
பொதுவாக நீங்கள் குக்கரில் உருளைக்கிழங்கு அல்லது வேறு ஏதேனும் காய்கறிகளை வேகவைக்கும் போது, அது குக்கரின் அடிப்பகுதியிலும் பக்கங்களிலும் ஒரு வெள்ளை நிற அடுக்கை ஏற்படுத்தும். அந்த கனிம கறை நீக்க, வினிகர் பயன்படுத்த வேண்டும். இது அமிலத் தன்மை கொண்டது மற்றும் அழுக்கை விரைவாக நீக்க உதவும். ஒரு குக்கரில் சில துளிகள் வினிகருடன் தண்ணீர் சேர்க்கவும். கரைசலை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவினால் இந்த கறைகள் நீங்கிவிடும்.

விடாப்பிடியான கறைகள்
குக்கரில் கடினமான கறை அல்லது நிறத்தை மாற்றும் கறை இருந்தால், 1 கப் தண்ணீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து 15 நிமிடங்களுக்கு மூடி போட்டு கொதிக்க வைக்கவும். அதன்பின் குளிர வைத்து எபபவும் போல கழுவினால் குக்கர் புதுசு போல மாறிவிடும்.

குக்கர் கைப்பிடி
குக்கரில் சுத்தம் செய்ய மிகவும் கடினமான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். எப்பொழுதும் வினிகர் அல்லது பாத்திரங்களைக் கழுவும் திரவத்துடன் வெதுவெதுப்பான நீர் மற்றும் ஒரு நெகிழ்வான பல் துலக்கும் பிரஷை வைத்து சுத்தம் செய்வது கறையில்லாமல் பராமரிக்க உதவும்.

கேஸ்கெட்
எப்பொழுதும் கேஸ்கெட்டை அகற்றி, பாத்திர கழுவும் சோப்புடன் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த பிறகு, அதை தாவர எண்ணெய் தேய்த்து வைக்கவும். 18-20 மாதங்களுக்குப் ஒருமுறை எப்போதும் கேஸ்கெட்டை மாற்றவும்.



Click it and Unblock the Notifications