For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை இந்த முறைகளின் மூலம் இருந்த இடம் தெரியாமல் செய்யலாமாம்...!

உங்களுக்கு பிடித்த ஆடைகளில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்க விரும்பினால், நீங்கள் பலவிதமான வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.

|

சில நேரங்களில் ஆடையின் கறையை அகற்றுவது மிகவும் கடினமாக இருக்கும். உங்களுக்கு பிடித்த ஆடைகளில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்க விரும்பினால், நீங்கள் பலவிதமான வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். இந்த வீட்டு வைத்திய முறைகள் துணிகளில் உள்ள பிடிவாதமான கறைகளை அகற்ற வேலை செய்கிறது.

Best Natural Stain Remover Remedies in Tamil

உங்கள் ஆடைகளில் ரசாயனங்களைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், இந்த முறைகளை முயற்சி செய்யலாம். துணிகளில் உள்ள கறைகளை நீக்க இந்த பொருட்கள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். உங்களுக்கு பிடித்தமான ஆடைகளில் கறைப்பட்டிருந்தால் இது மிகவும் நன்மை பயக்கும். துணிகளில் உள்ள கறைகளை நீக்க நீங்கள் முறைகளை முயற்சி செய்யலாம் என்று இந்த பதவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை மற்றும் உப்பு பயன்படுத்தவும்

எலுமிச்சை மற்றும் உப்பு பயன்படுத்தவும்

இதற்கு சம அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இப்போது துணியில் கறை படிந்த இடத்தில் பரப்பவும். கலவையை கறை மீது தேய்க்கவும். அதன் பிறகு, 1 முதல் 2 மணி நேரம் வெயிலில் உலர்த்தவும். எலுமிச்சை காரணமாக துணி கெட்டுப்போகாமல் இருக்க, ஒவ்வொரு 20 முதல் 25 நிமிடங்களுக்கு ஒருமுறை அதைச் சரிபார்க்கவும். அதன் பிறகு கழுவவும்.

பேக்கிங் சோடா மற்றும் சலவை சோப்பைப் பயன்படுத்தவும்

பேக்கிங் சோடா மற்றும் சலவை சோப்பைப் பயன்படுத்தவும்

இதற்கு முதலில் கறை படிந்த துணியை குளிர்ந்த நீரில் கழுவி, ஈரப்படுத்தவும். 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெற்று நீரில் கலந்து, இந்த இரண்டையும் கலந்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை கறையின் மீது தடவவும். இப்படியே 30 நிமிடங்கள் விடவும். அதன் பிறகு அதன் மீது சலவை சோப்பு தடவவும். அதன் பிறகு மீண்டும் 30 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் அதை வாஷிங் மெஷினில் கழுவி உலர வைக்கவும்.

காய்கறி கறை நீக்குவது எப்படி?

காய்கறி கறை நீக்குவது எப்படி?

சில நேரங்களில் ஆடைகளில் காய்கறி மற்றும் எண்ணெய் போன்ற கறை படிந்துவிடும். அதை அகற்ற நீங்கள் வினிகரைப் பயன்படுத்தலாம். இதைச் செய்ய, துணியின் கறை படிந்த இடத்தில் வினிகரைப் பயன்படுத்துங்கள். சுமார் 30 நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பிறகு நன்றாக தேய்த்து கழுவவும். கடினமான கறைகளை அகற்ற இது பயனுள்ளதாக இருக்கும்.

இங்க் கறையை நீக்குவது எப்படி?

இங்க் கறையை நீக்குவது எப்படி?

சில நேரங்களில் துணிகளில் இங்க் கறை படியும். இதனை நீக்க நீங்கள் டெட்டாலைப் பயன்படுத்தலாம். கறை படிந்த இடத்தில் டெட்டாலைத் தடவி தேய்க்கவும். அதன் பிறகு கழுவவும். இது மை கறைகளை அகற்ற நன்கு வேலை செய்யும்.

டீ கறையை நீக்குவது எப்படி?

டீ கறையை நீக்குவது எப்படி?

இதற்கு உருளைக்கிழங்கை வேகவைக்கவும். இந்த வேகவைத்த உருளைக்கிழங்கை நீங்கள் காய்கறிகள் செய்ய பயன்படுத்தலாம். டீ கறைகளை அகற்ற இந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம். இந்த தண்ணீரில் தேநீர் கறை படிந்த துணிகளை ஊறவைக்கவும். சிறிது நேரம் இப்படியே இருக்கட்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா

வெள்ளை ஆடைகளில் உள்ள கறைகளை நீக்க வினிகர் மற்றும் பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். இதற்கு இரண்டையும் கலந்து பேஸ்ட் செய்யவும். பின்னர் அதை கொண்டு கறைகளின் மீது தேய்த்து ஊறவைக்கவும். அதன்பின் எப்போதும் போல துவைக்கவும்.

உப்பு

உப்பு

உப்பு ஒரு இயற்கையான கறை நீக்கியாகும். எதிர்பாராத கறைகளை உடனடியாக உப்பை பயன்படுத்துவதன் மூலம் நீக்கலாம். கிரேவி கறைகளின் மீது உப்புக் கரைசலை ஊற்றினால் சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு மறைந்துவிடும். கறையின் மீது உப்பை ஊற்றி விட்டு, உப்பு அனைத்து கிரீஸ்களையும் உறிஞ்சுவதற்கு நேரம் எடுக்கும். அதன்பின் துணியை துவைத்தால் புதியது போல இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Natural Stain Remover Remedies in Tamil

Read to know how to remove tough stains from clothes at home.
Story first published: Friday, August 19, 2022, 17:24 [IST]
Desktop Bottom Promotion