For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா? அப்போ என்ன வெளியேறுது?...

|

தீவிர வியர்வை தோன்றும் போது நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு ஆச்சரியப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. உங்கள் இதயம் உந்தப்படுவதை நீங்கள் உணர்கிறீர்கள், உங்கள் தசைகள் வெப்பமடைகின்றன. வியர்வை என்பது முற்றிலும் இயல்பான உடல் செயல்பாடு, இது கடுமையான உடல் பயிற்சிக்குப் பிறகு உடலை குளிர்விக்க உதவுகிறது.

Detoxifying

வியர்வையால் உடலின் உள்ளே உள்ள நச்சுகளை அகற்ற முடியும் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். உண்மையில், வியர்வை கழிவுப்பொருட்களை அல்லது தெளிவான நச்சுப் பொருள்களை வெளியிடுகிறது என்ற பொதுவான கருத்தும் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக வியர்வை

அதிக வியர்வை

உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற வியர்த்தல் உதவுகிறது என்று நீங்களும் நம்பினால், நீங்கள் இப்பொழுது அதிர்ச்சியடையக் கூடும். உங்கள் நம்பிக்கைக் குமிழியை வெடித்ததற்கு மன்னிக்கவும், ஆனால் வியர்வை என்பது உங்கள் உடலின் நச்சுத் தன்மையை அகற்றுவதற்கான சிறந்த வழி கிடையாது என்பதே உண்மை.

MOST READ: இனி வங்கியில் பணம் எடுக்க பான் கார்டு அவசியம்... மத்திய அரசு அறிவிப்பு என்ன சொல்கிறது?

நச்சுக்கள்

நச்சுக்கள்

சுற்றுச்சூழல் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளின்படி, வியர்வை மூலம் வெளியாகும் மாசுபடுத்திகளின் எண்ணிக்கை உண்மையில் மிகக் குறைவு. இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம், வியர்வை முதன்மையாக நீர் மற்றும் தாதுக்களால் ஆனது மற்றும் மிகக் குறைந்த அளவே நச்சுப் பொருட்களைக் கொண்டுள்ளது.

சிறுநீரகம்

சிறுநீரகம்

நமது தோலால் (வியர்வை வழியாக) வெளியேற்றப்படும் மாசுபாட்டை நீங்கள் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலால் வெளியேற்றப்படும் நச்சுகளுடன் ஒப்பிடுகையில் அது மிகக் குறைவு. பெரும்பாலான நச்சுகள் கொழுப்பில் கரையக்கூடியவை, எனவே, வியர்வையில் கரைவதில்லை. வியர்வை 99 சதவீத நீராகும்.

MOST READ: எடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...

இதன் பொருள் என்ன?

இதன் பொருள் என்ன?

ஒரு ஆய்வின்படி, நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் வேலை அல்லது உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், உங்கள் உடல் 1-2 லிட்டர் வியர்வையை விடுவிக்கும். இருப்பினும், அந்த வியர்வையில் உள்ள நச்சுகளின் அளவு நானோகிராமில் 1/10 கூட இல்லை. எனவே அடிப்படையில், நீங்கள் உங்கள் உடலை இவ்வழியில் உச்சநிலைக்குத் தள்ளினாலும், தோன்றும் வியர்வையானது நீங்கள் தினமும் உட்கொள்ளும் நச்சுகளில் 1 சதவீதத்தை கூட வெளியிடாது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஸ்பாக்கள் முதல் sauna வரை, அழகு மற்றும் சுகாதாரத் தொழிலகங்கள் வியர்வையை வெளியிடுவதன் மூலம் நச்சுத்தன்மையை நீக்கலாம் என்ற கருத்தை பெரிதும் நம்பியிருப்பதாகத் தெரிகிறது. சூடான குளியல் மற்றும் sauna-க்கள் ஓய்வளிக்க, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும், அவற்றை எச்சரிக்கையுடன் தொடர வலுவாக அறிவுறுத்தப்படுகிறது.

MOST READ: முள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா? வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...

நீரிழப்பு

நீரிழப்பு

நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வியர்வை வெளியேறிய பிறகு எப்போதும் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்கவும், வியர்வை சிகிச்சையை வெகுதூரம் எடுத்துக் கொள்ள வேண்டாம். தீவிர வியர்த்தல் போன்ற ஒரு வழக்கு 35 வயது பெண்ணின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது.

இந்த கியூபெக் பெண்ணை சேற்றில் பூசி, பிளாஸ்டிக் தாளில் போர்த்தி, தலையை அட்டைப் பெட்டிகளால் ஒன்பது மணி நேரம் தீவிர நச்சுத்தன்மை அகற்றத்திற்கு மூடி வைத்திருந்தனர். 1 மணிநேரங்களுக்குப் பிறகு அதிக வெப்பத்தால் அவர் இறந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: water தண்ணீர்
English summary

Your Sweat Is NOT Detoxifying

There is a reason why you feel incredibly amazing after working up some serious sweat. You feel your heart pumping and your muscles warm up. Sweat is an absolutely normal bodily function, which helps in cooling down the body after a strenuous physical workout.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more