For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கற்றாழைய கசக்காம எப்படி சாப்பிடறது? யாரெல்லாம் தெரியாம கூட சாப்பிட கூடாது?

|

இந்த சோற்று கற்றாழையை கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம். ஆலோ ப்ரொக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த சோற்று கற்றாழை நோய்களை ஆற்றும் குணமுடையது.

aloe ferox

தென் ஆப்பிரிக்காவில் இது அதிகளவில் காணப்படுகிறது. உள்ளே உள்ள குளிர்ச்சியான சதைப்பற்று எரிந்த சருமத்திற்கும் சரும அழகுப் பொருட்கள் செய்வதற்கும் பயன்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோற்று கற்றாழை

சோற்று கற்றாழை

ஆலோ ப்ரொக்ஸ் என்பது இதன் அறிவியல் பெயர். இது சாந்த்ரோயோசியேஃபியாமி என்ற குடும்பத்தை சார்ந்தது. அதுமட்டுமல்லாமல் மருந்து அறிவியல் துறையின் துவாவின் பல்கலைக்கழகம், டாக்டர் வையங் சென் வெளியிட்ட கருத்து படியும், தென்னாப்பிரிக்காவின் பல்கலைக்கழகம், தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடி, மக்கள் இதை 'கசப்பான அலோ' அல்லது 'கேப் அலோ' என்று அழைக்கின்றனர். இதன் உள்ளே உள்ள குளிர்ச்சியான சதைப்பற்று எரிந்த சருமத்திற்கும் சரும அழகுப் பொருட்கள் செய்வதற்கும் பயன்படுகிறது.

இந்த தாவரம் 3.5மீட்டர் வரை வளரக் கூடியது. இதன் இலைப்பகுதி முட்களுடன் தடினமாகவும், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற மலர்களுடன் காணப்படும். ப்ரொக்ஸ் என்பதற்கு ஒவ்வொரு இலையின் விளம்பிலும் கூம்புகள் உள்ளது என்று பெயர்.

MOST READ: ஓனர் திட்டினதால கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியபோன பூனை... என்ன கொண்டு வந்துச்சு தெரியுமா?

சரும காயங்களை ஆற்றுதல்

சரும காயங்களை ஆற்றுதல்

இதிலுள்ள ஜெல் சரும பிரச்சினைகள் அனைத்திற்கும் பயன்படுகிறது. காயங்களை குணப்படுத்துதல், குளிர்ச்சியாக்குதல், சரியாக்குதல் போன்ற வேலைகளை செய்கிறது. மேலும் தீக்காயங்கள், பருக்கள், சரும வடுக்கள் மற்றும் சோரியாஸிஸ் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

Dr. Yimei Jia et al. யால் எட்னோபார்மகோலஜி இதழில் வெளியான ஒரு ஆய்வு படி சருமத்தின் மீதுள்ள பாதிப்புகளை வேகமாக ஆற்றுகிறது. அதுமட்டுமல்லாமல் காயங்களில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

மலமிளக்கி

மலமிளக்கி

இதன் கசப்பு தன்மை ஒரு மலமிளக்கி மாதிரி செயல்படுகிறது. விவசாய மற்றும் உணவு, கெமிஸ்ட்ரி நாளிதழில் வெளியான கருத்துப்படி இதன் உள்ளே உள்ள ஜெல் பகுதி மலச்சிக்கலை தடுத்து மலத்தை இலகுவாக வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்கிறது.

MOST READ: ஜாக்கிரதையா வாங்குங்க... இறால்ல ஜெலட்டின் ஊசிபோட்டு விக்கறாங்களாம்...

பாலுறவு தொடர்பான தொற்றுகள்

பாலுறவு தொடர்பான தொற்றுகள்

உடலுறவு வழியாக பரவும் நோய்களை தடுப்பதில் இந்த கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. கொனோரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. எனவே நீங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து கூட கற்றாழை களிம்புகளை வாங்கி பயன்படுத்தலாம்.

MOST READ: ஆக்டோபஸை உயிரோட சாப்பிட நெனச்சு அது மூஞ்ச கீறிவிட்ட கொடூரம்.. இதோ நீங்களே பாருங்க...

 பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

இந்த கற்றாழை ஜெல்லை சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது

எனவே இதை குறைந்த அளவு கொஞ்ச நாள் எடுத்துக் கொண்டால் போதும்.

அதிகளவு நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டு வந்தால் சிறுநீரகம், கல்லீரல், இதயம் மற்றும் தசைகளில் பாதிப்பு ஏற்படும்.

கருவுற்ற பெண்கள் மற்றும் தாய்பாலூட்டும் பெண்கள் இதை உட்கொள்வதை தவிருங்கள்.

அதே மாதிரி அல்சர் இருப்பவர்கள், இரத்தக் கசிவு உடையவர்கள், க்ரோன் நோய் பெற்றவர்கள், வயிறு சம்பந்தமான கோளாறு கொண்டவர்கள், சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் இவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what is aloe ferox and how to use

Aloe Ferox is the scientific name for a species of the aloe plant. Like other aloe plants, it is a succulent and belongs to the Xanthorrhoeaceae family as per a study published by Dr. Weiyang Chen from the Department of Pharmaceutical Sciences, Tshwane University of Technology, South Africa
Story first published: Wednesday, May 15, 2019, 17:25 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more