Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
நம்ம உடம்புல இப்படி தண்ணியோட அளவு குறையறத எப்படி கண்டுபிடிக்கலாம்? என்ன செய்யலாம்?
இந்த கோடை காலத்தில் உங்கள் உடம்பில் போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால் எந்த மாதிரியான தீமைகள் வரும் எனத் தெரியுமா, வாங்க தெரிஞ்சுக்கலாம். இந்த கோடை காலத்தில் அதை தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.
இந்த வெயில் காலம் வந்துட்டாலே உடம்பில் உள்ள நீர்ச்சத்துக்கள் எல்லாம் வெளியேறிவிடும். இப்படி நீர்ச்சத்து குறைவதால் ஏராளமான உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படுகிறது.

எனவே அவ்வப்போது போதுமான தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இப்படி நீர்ச்சத்து பற்றாக்குறையை எப்படி தவிர்ப்பது அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

நீரின் அத்தியாவசியம்
நமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் தான் ஆனது.ஏனெனில் நமது உடலின் நிறைய செயல்பாட்டுக்கு நீர் மிகவும் அவசியம். கண்களுக்கு, மூட்டுகளுக்கு நீர் ஒரு லூப்ரிகண்ட் ஆக செயல்படுகிறது. தோலிலிருந்து வெளிவரும் வியர்வை மூலமாக உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடம்பை சுத்தப்படுத்துகிறது. நமது உடலில் இருக்கும் நீர்ச்சத்து மூலம் தான் உப்பு, குளுக்கோஸ், மினரல்கள் போன்றவற்றை சமநிலையில் வைக்க முடியும்.

நீர்ச்சத்து பற்றாக்குறை
போதுமான நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ளாத போது அதிகப்படியான தண்ணீர் உடலிருந்து வெளியேறும் போது இந்த நிலை ஏற்படுகிறது. தீவிரமாக உடல் செயல்பாடுகள், வியர்த்தல் போன்றவை நீர்ச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்த கூடும். எனவே இந்த மாதிரியான சமயங்களில் போதுமான அளவு நீர் எடுத்துக் கொள்வது நல்லது.

வயிற்று போக்கு
வயிற்று போக்கு நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. காரணம் இது உணவில் உள்ள தண்ணீரை உறிஞ்சி கொள்கிறது.

வாந்தி
உணவு நோய்கள், குமட்டல் மற்றும் ஆல்கஹால் நச்சு போன்றவையும் நீர்ச்சத்து பற்றாக்குறைக்கு காரணமாகிறது.

வியர்த்தல்
காய்ச்சல், உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் அதிகப்படியான வியர்த்தலால் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. அதே மாதிரி வெயில் காலங்களிலும் வியர்வை அதிகமாக இருக்கும்.

டயாபெட்டீஸ்
இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் அடிக்கடி சிறுநீர் கழிப்பு ஏற்பட்டு உடம்பில் நீர்ச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்
ஆல்கஹால் அதிகமாக எடுப்பது, ஆன்டி ஹிஸ்டமைன், இரத்த அழுத்தம் மற்றும் ஆன்டிசைக்கோட்டிஸ் போன்ற மருந்துகளும் அடிக்கடி சிறுநீர் கழிப்பை ஏற்படுத்தி உடம்பில் நீர்ச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

தடுக்கும் முறைகள்
நீர்ச்சத்து பற்றாக்குறையை கண்டுக்காமல் விட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும். உடனே உங்கள் உடம்புக்கு தேவையான நீரை எடுத்துக் கொள்வது நல்லது.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது கூட ஒரு பாட்டில் தண்ணீரை அவ்வப்போது குடியுங்கள்.
இதன் மூலம் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்கி விடலாம். அதே மாதிரி சிறுநீரின் நிறத்தையும் கவனியுங்கள். லேசான மஞ்சள் நிறமோ அல்லது அடர்ந்த மஞ்சள் நிறமோ தென்பட்டால் நிறைய தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் உடம்பில் நீர்ச்சத்து பற்றாக்குறையை காட்டுகிறது.

அறிகுறிகள்
நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதை சில அறிகுறிகள் கொண்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு தாகம் எடுக்கும். எனவே தாகம் எடுக்கும் போது நிறைய தண்ணீர் குடியுங்கள்.
ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளைக்கு 7-8 தடவை சிறுநீர் கழிப்பார். எனவே நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காவிட்டால் உங்கள் உடம்பில் போதுமான ஊட்டச்சத்து இல்லாததை அறிந்து கொள்ளுங்கள்.
அதே மாதிரி தாகம் எடுக்கும் போது நீர் குடிப்பது மட்டுமே நல்லது. அதற்கு பதிலாக செயற்கை குளிர்பானங்களை எடுத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications