Just In
- 1 hr ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 2 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
- 3 hrs ago
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?.. கண்டிப்பா படிங்க…!
- 3 hrs ago
அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா?
Don't Miss
- Movies
சிறுமியுடன் திருமணம்.. லஞ்சம் தந்து போலி ஐடி கார்டு.. சர்ச்சைகளுக்குப் பேர் போன பிரபல பாடகர் கைது!
- Automobiles
அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!
- News
கையில் வீச்சரிவாள்.. வாய் நிறைய பச்சை பச்சையாய்.. நடுரோட்டில் இளைஞர் ரகளை.. யாருக்காக தெரியுமா?
- Finance
இத்தனை மாநிலங்களில் ஹால்மார்க் வசதி இல்லை..! தமிழகத்தின் நிலை என்ன..?
- Technology
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- Sports
ராபின் உத்தப்பா செய்த அதே சாதனை.. அரைசதம் அடித்து மிரட்டிய இளம் வீரர்!
- Education
ISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்கு கண் அடிக்கடி துடிக்குதா?... எதற்காக துடிக்கிறது? அதை எப்படி நிறுத்தலாம்?
கண்ணின் இமை, திடீரென இழுப்பு வந்ததுபோல் துடித்த அனுபவம் உங்களுக்கு நேர்ந்ததுண்டா? கண்ணின் மேலிமை அல்லது கீழிமை இப்படி துடிக்கும். இந்தத் துடிப்பு சில நொடிகள் மாத்திரமே நீடிக்கும். அரிதாக மணிக்கணக்கில், நாள் கணக்கில் அதைவிட அதிகமாகவும் துடிக்கக்கூடும். இடக்கண் துடித்தால் நல்லது; வலக்கண் துடித்தால் அபசகுனம் போன்ற நம்பிக்கைகளும் உண்டு.
இடக்கண்ணோ, வலக்கண்ணோ இமை துடிப்பு என்பது எரிச்சலூட்டக்கூடியதாக இருந்தாலும் ஆபத்தானதல்ல. இமை துடிப்பதற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இமை துடிக்காமல் தடுக்க ஏதாவது வழி உள்ளதா?

கண்ணிமை துடிப்புக்கு காரணம்
மன அழுத்தம், அதிக அளவு காஃபைன் சேர்த்தல், தூக்கம் கெடுதல் அல்லது போதுமான தூக்கமின்மை, கண் வறட்சி ஆகியவை இமையில் இழுப்பு வந்ததைப்போன்ற துடிப்பு ஏற்பட காரணமாகின்றன.
மது அருந்துதல், பிரகாசமான விளக்கு வெளிச்சம், கண் பரப்பு மற்றும் இமையின் உள்பக்கம் உறுத்தல், அதிக உடலுழைப்பு, புகை பிடித்தல், காற்று, தலைசுற்றுவது போன்ற உணர்வு, மருந்துகள் சாப்பிடுதல் ஆகியவையும் கண்ணிமை துடிப்புக்குக் காரணமாவதோடு, அதை அதிகப்படுத்தவும் செய்யும்.
பெரும்பாலும் வலி இல்லாமலே தான் இமை துடிக்கும். இது ஆபத்தானதும் அல்ல. பல நேரங்களில் சிகிச்சை ஏதும் தேவையில்லாமல் தானாகவே இது நின்று விடும்.
MOST READ: மாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது...

இமை துடிப்பதை எப்படி நிறுத்துவது?
இமையில் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் துடிப்பை தூண்டும் காரணிகளை கண்டறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் இமை துடிப்பை தடுக்கலாம். இமை துடிப்பை தடுக்கக்கூடிய சில வாழ்க்கை முறை மாற்றங்கள்:

காஃபைன்:
தேநீர் மற்றும் காஃபி போன்ற காஃபைன் சேர்ந்த பானங்களை குடிப்பதை, காஃபைன் கலந்த சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளலாம் அல்லது முற்றிலும் நிறுத்தி விடலாம். ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் காஃபைனை நிறுத்திவிட்டு கண்ணிமை துடிக்கிறதா என்று கண்காணிக்கலாம்.

மதுபானம்:
உங்கள் கண்ணிமை துடிப்பதற்கு மதுபானம் காரணமாக அமையலாம். ஆகவே, மதுபானம் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள்.

தூக்கம்:
தினமும் இரவு ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்குங்கள். படுக்கைக்குச் செல்லும் முன்னர் தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
MOST READ: இந்தியாவுல 1000 ஆண்டு பழமையான 10 கோவில்கள்ல எத்தனை தமிழ்நாட்டுல இருக்கு தெரியுமா?

வறண்ட கண்கள்:
பெரியவர்களுக்கு, குறிப்பாக ஐம்பது வயதை எட்டியவர்களுக்கு கண்கள் வறட்சியடைய நேர்கிறது. கணினி திரையை அதிக நேரம் பார்ப்பது, குறிப்பிட்ட மருந்துகள் சாப்பிடுவது, கான்டாக்ட் லென்ஸ் அணிவது ஆகியவை கண்கள் வறளுவதற்குக் காரணமாக அமைகின்றன. அவற்றை தவிர்க்கலாம்.

நீர்ச்சத்து:
உடலில் நீர்ச்சத்து குறைவதால் கண்ணிமை துடிக்கக்கூடும். இதை தவிர்க்க முடிந்த அளவு அதிக நீர் பருக வேண்டும்.

ஊட்டச்சத்து:
மெக்னீசியம் போன்ற சத்துகள் குறைவதும் கண்ணிமை துடிப்பை உருவாக்கக் கூடும் என்கின்றர். இதில் இன்னும் முடிவு எட்டப்பட வேண்டுமென்றாலும், சமச்சீர் உணவை உண்பதன் மூலம் இமை துடிப்பை தடுக்கலாம்.

ஹைட்ரோதெரபி:
கண்களை மூடிக்கொண்டு குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீரை மாறி, மாறி இமைகள் மேல் அடித்துக்கொள்ளலாம். ஹைட்ரோதெரபி என்ற இந்த முறையில், தண்ணீரை தெளிக்கும்போது கண்களில் உள்ள இரத்தநாளங்கள் சுருங்கும்; வெதுவெதுப்பான நீர் படும்போது இரத்தநாளங்கள் விரிவடையும். அதன்மூலம் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
MOST READ: உங்க பிரபல நட்சத்திரங்களோட அழகான பெண் செக்ரட்டரிகளை பார்த்திருகீங்களா? இதோ பாருங்க...

இமை துடிப்பை தடுக்கும் பயிற்சிகள்
எளிமையான சில பயிற்சிகள் மற்றும் மசாஜ் செய்வதன் மூலம் கண்களுக்கு ஓய்வும் இளைப்பாறுதலும் கிடைக்கும். இமையில் இழுப்பு ஏற்படுவது இதன் மூலம் குறையும்.

மசாஜ்:
கையின் நடுவிரலை இமைகள்மேல் பதித்து, விரலை வட்டவடிவமாக சுழற்றி (circular motion) அரை நிமிட நேரத்துக்கு (30 விநாடிகள்) மசாஜ் செய்யலாம். இது இமைகளில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதோடு கண் தசைகளை வலுவாக்கும்.

சிமிட்டுதல்:
முடிந்த அளவு இறுக்கமாக கண்களை மூடி, பிறகு முடிந்த அளவு விரிவாக திறக்கவும். கண்ணீர் வருமளவுக்கு தொடர்ந்து இப்படி செய்யவேண்டும். இது கண்கள் மற்றும் முகத்தின் தசைகள் விரிவடையச் செய்வதோடு, கண்களுக்கு நீர்ச்சத்து கிடைக்குமாறும், இரத்த ஓட்டம் அதிகரிக்குமாறும் செய்யும்.
இமைகளுக்கு இது ஓய்வையும் தரும். இதைச் செய்யும்போது கண்ணிமை துடிப்பு அதிகமானால் அல்லது வலி ஏற்பட்டால் நிறுத்திவிடவும்.
MOST READ: விஷ்ணு இரணியனை கொல்வதற்காக ஏன் நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்? அதான் டுவிஸ்ட்...

இறுக்குதல்:
கண்களை ஒரு நிமிட நேரத்துக்கு மூடிக்கொள்ளவும். மூடியிருக்கும்போது முடிந்த அளவு கண்களை இறுக்கவும். பிறகு இமைகளை திறக்காமல் இறுக்கிய கண்களை தளரவிடவும். மூன்று முறை இப்படி செய்தபின்னர் கண்களை திறக்கலாம்.