For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிகரெட் பிடிக்கிறத திடீர்னு நிறுத்திட்டா என்ன ஆகும்னு தெரியுமா? இத பார்த்து தெரிஞ்சிகங்க...

|

புகை பிடிக்கும் வழக்கத்தை கைவிடுவது நல்ல விஷயம். ஆனால், புகை பிடிப்பதை நிறுத்துவதால் சில விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

Qtting Smoking

சிகரெட்டிலுள்ள நிகோடினும் புகையிலையிலுள்ள ஏனைய வேதிப்பொருள்களும் உடலுக்குக் கிடைக்காததால் பல பின்விளைவுகள் உண்டாகின்றன. இந்த அறிகுறிகள் அனைவருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளைவுகள்

விளைவுகள்

பழக்கத்தை நிறுத்திய பிறகும் சிகரெட்டுக்காக மனம் ஏங்குதல்

தூக்கமின்மை

தொடரும் இருமல்

மனச்சோர்வு, மனக்கலக்கம், எரிச்சலுணர்வு

அதிக பசி மற்றும் உடல் எடை கூடுதல்

ஆகியவை புகை பிடித்தலை நிறுத்தியவர்கள் சந்திக்கக்கூடிய பின் விளைவுகளாகும்.

புகை பிடிக்கும் பழக்கத்தை விடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதிலுள்ள நிகோடின் பலவிதங்களில் செயல்படக்கூடிய வஸ்து.

வேண்டாத பழக்கத்தை விட்டு ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் இந்த நல்ல முயற்சியில் அநேகர் ஈடுபட்டு வருகின்றனர். சிகரெட் பழக்கத்தை விட்டுவிட்டால் உடனடியாக எல்லாம் சரியாகி விடாது. மாறாக, சில பின் விளைவுகளை கடந்தே இம்முடிவை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

MOST READ: இந்த எடத்துல வலிக்குதா? நீங்க பண்ற இந்த 7 விஷயந்தான் அதுக்கு காரணம்... இனிமே செய்யாதீங்க

சிகரெட்டுக்காக ஏங்கும் மனம்

சிகரெட்டுக்காக ஏங்கும் மனம்

புகைப்பதை நிறுத்தினால், நிகோடினுக்காக மனம் ஏங்குவது பொதுவான ஒன்றுதான். இவ்வகை ஏக்கம் ஐந்து நிமிட காலத்திற்கு நீடிக்கும்; ஆனால், உறுதியான முடிவால் அதை மேற்கொள்ளலாம். மிட்டாய், சூயிங்கம் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் புகைக்கும் விருப்பத்தை தவிர்க்கலாம்.

சிகரெட்டின் மேல் மனம் செல்வதை தடுக்க குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. என்ன காரணங்களை முன்னிட்டு புகைக்கும் பழக்கத்தை கைவிட்டீர்களோ அதையும் புகைக்காமல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளையும் எப்போது நினைத்துக் கொண்டிருந்தால் புகைக்கக்கூடாது என்ற முடிவை வெற்றிகரமாக கைக்கொள்ள முடியும். சிகரெட் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் எழும்போது சிறிது தூரம் காலாற நடப்பது அல்லது மூச்சுப் பயிற்சி செய்வது என்று கவனத்தை திருப்பினால் சிகரெட் ஆசையை தவிர்க்க முடியும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

சிகரெட்டிலுள்ள நிகோடின் ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. சிகரெட் புகைப்பதை நிறுத்தியவுடன் நிகோடினை போன்ற தன்மை கொண்ட காஃபைன் போன்ற ஊக்குவிப்பான்களை மனம் தேடும். ஆகவேதான் புகை பிடிக்கும் பழக்கமுடையவர்கள் அவற்றை நிறுத்தியவுடன் பதற்றம், கலக்கம், சமாதானமின்மை ஆகியவை காணப்படும். இதைக் குறைப்பதற்காக, காஃபி, தேநீர் மற்றும் கோலா சார்ந்த பானங்களை பருகுவதை தவிர்க்கவும். மாறாக காஃபைன் போன்ற ஊக்குவிப்பான்கள் இல்லாத பழச்சாறு (ஜூஸ்) மற்றும் மூலிகை டீ ஆகியவற்றை பருகலாம்.

தொடரும் இருமல்

தொடரும் இருமல்

புகைக்கும் பழக்கத்தை நிறுத்தியவர்கள் அநேகருக்கு இருமல் வரக்கூடும். நுரையீரல் மற்றும் சுவாச குழலில் காற்றை வடிகட்டக்கூடிய சிலியா என்ற மயிரிழைகள் மீண்டும் முளைப்பதும், புகைத்ததினால் சேர்ந்த சளி மற்றும் கோழை ஆகியவற்றை வெளியேற்றும் வேலையும் நடப்பதால் இருமல் வரும். அதாவது புகைத்ததினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உங்கள் உடல் தன்னைத்தானே குணமாக்கிக் கொள்கிறது. ஆனாலும் இருமல் இருவாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மனச்சோர்வும் கலக்கமும்

மனச்சோர்வும் கலக்கமும்

புகை பழக்கத்தை நிறுத்துவதால் வரும் பின் விளைவுகளில் மோசமானது மனச்சோர்வாகும். மனநிலை மாறுபட்டு எரிச்சல் உண்டாகிறது. ஆகவே மனதை லகுவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதுடன் எளிதான உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். அப்போது மனதுக்கு சற்று இளைப்பாறுதல் கிடைக்கும்.

MOST READ: உடனடியாக கருத்தரிக்க எந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்?

அதிகமாகும் பசியும் உடல் எடையும்

அதிகமாகும் பசியும் உடல் எடையும்

புகை பிடிக்கும்போது நிகோடின் என்னும் பொருள் உடலில் சேர்கிறது. இது உடலுக்கு ஊக்கத்தை அளிக்கக்கூடியது. நிகோடினால் அட்ரீனலின் சுரக்கிறது; அதன் காரணமாக உடலில் சர்க்கரை சேர்க்கிறது. புகைப்பதை விட்ட உடன் நிகோடின் செயல்பாட்டால் சேர்கிற சர்க்கரை குறைவுபட்டுப்போகும். ஆகவே, சர்க்கரையை மனம் நாடும். நாள் முழுவதும் ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை உண்டு கொண்டிருந்தால் சர்க்கரைக்கான ஏக்கம் குறையும். வெறுமனே சாக்லேட் போன்ற மிட்டாய்களை சாப்பிடாமல் நல்ல உணவுகளை உண்ணுங்கள்.

புகைப்பதை நிறுத்தியதுமே உங்கள் நாவிலுள்ள சுவை மொட்டுகளால் உணவின் ருசியை நன்கு அறிந்திட இயலும். பசியும் எடுக்க ஆரம்பிக்கும். மிக அதிகமாக பசித்தது என்றால் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு தம்ளர் தண்ணீர் பருகுங்கள். அது குறைவாக சாப்பிட்டதுமே முழு திருப்தியை கொடுக்கும்.

புகை பழக்கத்தை கைவிடவேண்டும் என்று தீர்மானிக்கும்போதே வரும் பின் விளைவுகளை பற்றி அறிந்து கொண்டால் அவற்றை வெல்வது எளிது.

எதிர்கொள்வது எப்படி?

எதிர்கொள்வது எப்படி?

சிகரெட் தேவைப்படும் சூழ்நிலை வரும்போது கவனத்தை திசைதிருப்புவதற்காக ஐந்து நிமிடம் செய்வதுபோன்று சில செயல்பாடுகளை தீர்மானித்துக் கொள்ளுங்கள். சிகரெட் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போது நண்பரோடு போனில் பேசலாம்; சீட்டு விளையாடலாம்; சற்று தூரம் நடக்கலாம்; சிறு துண்டு பழம் சாப்பிடலாம் அல்லது செல்லப்பிராணியுடன் விளையாடலாம்.

உதாரணமாக, புகைப்பதை தூண்டும் எல்லா செயல்களையும் தவிர்க்க வேண்டும். தினமும் காலையில் சிற்றுண்டி சாப்பிட்ட பின்னர் காஃபி அருந்தியவுடன் சிகரெட் பிடிப்பது வழக்கமாயின் சில நாள்கள் வெளியே காலை சிற்றுண்டி சாப்பிடுங்கள். கார் ஓட்டும்போது புகை பிடிப்பது வழக்கமென்றால், நடந்து செல்லுங்கள் அல்லது வேறு வாகனங்களை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

ஐந்து காரணங்கள்

ஐந்து காரணங்கள்

வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றிக் கொள்ளவே புகைத்தலை கைவிடுகிறோம். புகைப்பதை நிறுத்துவதால் என்னென்ன நன்மைகள் விளைகின்றன?

ஆரோக்கியம் மேம்படும்

ஆரோக்கியம் மேம்படும்

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும் மற்ற வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடவும் நேரம் இருக்காது. புகைப்பதை நிறுத்திவிட்டால் விளையாடலாம்; உடற்பயிற்சி செய்யலாம். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.

புகைப்பதை நிறுத்தியதும் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட ஆரம்பிக்கும். சிலியா என்னும் மயிரிழைகள் வளருவதால் நுரையீரலில் கட்டியிருக்கும் சளி வெளியே வரும். இதனால் தோன்றும் இருமல், ஒரு மாதம் முதல் ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கக்கூடும்.

ஆயுள் கூடும்

ஆயுள் கூடும்

முதுமையடையும்போது வேலையிலிருந்து ஓய்வு பெற்று அமைதியாக வாழ்க்கையை ரசிக்கவேண்டும். புகைப்பதினால் மூளையில் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியோ அல்லது இள வயதில் நுரையீரல் புற்றுநோய் வந்தோ அவதிப்படாமல், அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வதற்கு புகைத்தலை நிறுத்துவது அவசியம்.

MOST READ: மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்...

பணம் மிச்சமாகும்

பணம் மிச்சமாகும்

சிகரெட் வாங்கி பணத்தை வீணாக்குவதற்குப் பதில், குடும்பத்தில் அவசியமான செலவுக்கு அந்தப் பணத்தை பயன்படுத்தலாம்.

சிகரெட் நெடி இல்லை

சிகரெட் நெடி இல்லை

புகைப்பவர்களிடம் எப்போதும் சிகரெட்டின் நாற்றம் இருந்துகொண்டிருக்கும். புகைப்பதை நிறுத்திவிட்டால் சிகரெட் நெடி வீசாது.

சந்தோஷமான குடும்பம்

சந்தோஷமான குடும்பம்

புகைப்பதை நிறுத்திவிட்டால் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியும். பிள்ளைகள் கல்லூரியில் பட்டம் பெறுவதை பார்க்கலாம்; வாழ்க்கைத் துணையுடம் நேரம் செலவழிக்கலாம். உங்களது நல்லமுயற்சியை பார்த்து குடும்பத்தினர் சந்தோஷப்பட்டு உங்களுக்கு உதவ முன்வருவர்.

MOST READ: இப்படி முடி வெடிச்சிகிட்டே இருக்கா? வாழைப்பழம் இருக்கே.. இனி அந்த கவலை எதுக்கு?

எவ்வளவு நாள்கள் நீடிக்கும்?

எவ்வளவு நாள்கள் நீடிக்கும்?

புகைப்பதை நிறுத்துவதால் ஏற்படும் சிகரெட் நாட்டம், மனச்சோர்வு, மனக்கலக்கம், எரிச்சல், மனநிலை மாற்றம், கவன சிதைவு ஆகியவை ஏறத்தாழ மூன்று முதல் ஐந்து நாள்கள் நீடிக்கும். பின்னர் மெல்ல மெல்ல மறைந்து விடும்.

புகைக்கும் ஆவல் தோன்றும்போது நிகோடின் மிட்டாய்களை பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது. அதுவும் ஆரோக்கியத்தை பாதிக்கும். குறைந்த நிகோடின் அளவு கொண்ட மிட்டாய்களை பயன்படுத்தி பழகுங்கள். காலப்போக்கில் அதையும் நிறுத்திவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Common Side Effects Of Qtting Smoking And How To Cope

Unfortunately, when you quit smoking, experiencing withdrawal symptoms is common. The side effects of quitting smoking can be diverse. Not everyone experiences the side-effects of withdrawal to the same degree. This is because our bodies deal with the lack of nicotine and other chemicals in tobacco smoke in varying ways.
Story first published: Wednesday, May 29, 2019, 13:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more