For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேப்பிலை கலந்த டூத்பேஸ்டுல பல் துலக்கலாமா? பல்லுல என்ன மாதிரி பிரச்சினை வரும்?

வேப்பிலையில் உள்ள மருத்துவ குணம் நிறைய நன்மைகளை தரக் கூடியது. அதனால் தான் இப்பொழுது வேப்பிலையைக் கொண்டு டூத் பேஸ்ட் தயாரித்து வருகிறார்கள் நிறைய நிறுவனங்கள்.அதன் நன்மைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

|

நாம் தான் இப்பொழுது வித விதமான டூத் பேஸ்ட் வகைகளை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அந்தக் காலத்தில் எல்லாம் வேப்பிலை குச்சியை கொண்டு தான் பல் துலக்கி வந்துள்ளனர்.

Neem Toothpaste

ஏனெனில் வேப்பிலையில் உள்ள மருத்துவ குணம் நிறைய நன்மைகளை தரக் கூடியது. அதனால் தான் இப்பொழுது வேப்பிலையைக் கொண்டு டூத் பேஸ்ட் தயாரித்து வருகிறார்கள் நிறைய நிறுவனங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேப்பிலை டூத் பேஸ்ட்

வேப்பிலை டூத் பேஸ்ட்

வேப்பிலை டூத் பேஸ்ட் என்பது இயற்கை பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் வேப்பிலை எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். இது ஒரு ஆன்டி பாக்டீரியல் க்ளீனராக செயல்படுகிறது. இந்த வேப்பிலை மரம் இந்தியா போன்ற நகரங்களில் அதிகமாக காணப்படுகிறது.

கனேடிய ஜர்னல் ஆஃப் தாவரவியல், ஓபெண்டர் கோவ் வெளியிட்ட ஒரு ஆய்வின் படி வேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்களால் தான் பல ஆயிரக்கணக்கான காலங்களாக அதை டூத் பேஸ்ட் ஆக பயன்படுத்தி வந்துள்ளனர்.

MOST READ: கார்பைடு கல் வைத்து பழுக்காத நல்ல மாம்பழங்களை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?

கலப்படம்

கலப்படம்

ஆனால் தற்போது வேப்பிலை டூத் பேஸ்ட்டில் கூட கலப்படம் செய்து வருகிறார்கள். கொஞ்சமாக வேப்பிலை எண்ணெய்யை கலந்து விட்டு மற்றபடி ப்ளோரைடு அதிகளவில் சேர்க்கின்றனர். எனவே டூத் பேஸ்ட் வாங்கும் போது அதில் கலக்கப்பட்டடுள்ள பொருட்களின் பட்டியலை பார்ப்பது நல்லது. ஒரிஜினல் வேப்பிலை டூத் பேஸ்ட்டை நீங்கள் மருந்து கடைகளில், ஆன்லைனில் வாங்கிக் கொள்ளுங்கள்.

வேப்பிலை டூத் பேஸ்ட் பயன்கள்

வேப்பிலை டூத் பேஸ்ட் பயன்கள்

இதில் ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு தன்மை, ஆன்டி டயாபெட்டிக், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அஸ்ட்ரிஜெண்ட், அழற்சி எதிர்ப்பு தன்மை போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன. இந்த டூத் பேஸ்ட் வாய் துர்நாற்றம், பாக்டீரியா தாக்கம், பற்களில் கசடுகள் தேங்குதல் இதற்கு மட்டும் தீர்வு அளிப்பதோடு பற்சொத்தைக்கு எதிராகவும் செயல்படுகிறது. பல் வலி மற்றும் அழற்சியை குறைத்து சிறந்த தீர்வளிக்கிறது.

MOST READ: மெட்ரோவுல போயி இந்த ஆளு பார்த்த வேலய பாருங்க... எங்க இருந்துடா வர்றீங்க...

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

அதிகமான வேப்ப எண்ணெய் குமட்டல், வாந்தி, வலிப்பு, இரத்தம் சம்பந்தமான நோய்கள், சிறிய குழந்தைகளுக்கு இறப்பு கூட நேரிட வாய்ப்புள்ளது.

கருவுற்ற பெண்கள் மற்றும் தாய்பாலூட்டும் பெண்கள் போன்றவர்கள் இதை எடுக்கக் கூடாது.

அதிகமாக பயன்படுத்துவது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்

எனவே டூத் பேஸ்ட்டை சிறுதளவு மட்டுமே பயன்படுத்தி வருவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Science-Backed Neem Toothpaste Benefits

neem toothpaste is anti-bacterial and anti-diabetic, a powerful antioxidant and astringent, with anti-inflammatory properties. Not only do neem oil’s antibacterial properties help control bad breath, fight infection, and prevent plaque from building up, but it may also help reverse the effects of gingivitis.
Story first published: Wednesday, May 15, 2019, 16:08 [IST]
Desktop Bottom Promotion