For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க தலையில இப்படி வந்தா அது என்ன நோயோட அறிகுறினு தெரியுமா? மொதல்ல தெரிஞ்சிக்கங்க

|

போலியோசிஸ் என்பது நமது உடலில் அல்லது முடிகளில் ஏற்படும் வெள்ளை நிறத் திட்டுகள் ஆகும். சிலருக்கு இந்த பிரச்சினை பிறக்கும் போதே இருக்கலாம் அல்லது எந்த வயதினரை வேண்டுமானாலும் தாக்கலாம்.

Poliosis

ஸ்வீனி டோட் இல் ஹாரி பாட்டர் அல்லது பெஞ்சமின் பர்க்கர் என்பவரின் பிரபலமான கற்பனைக் கதாபாத்திரங்களில் சிலவற்றை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த மாதிரியான முடி அமைப்புடன் தான் அவர்கள் வருவார்கள். இந்த பிரச்சினை மயிர்க்கால்களின் மெலனின் குறைப்பாட்டால் ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போலியோசிஸ் சர்கம் ஸ்கிரிப்

போலியோசிஸ் சர்கம் ஸ்கிரிப்

இந்த நிலையில் முடிகள் காணப்படும் இடங்களில் வெள்ளைப் படலங்கள் தோன்ற ஆரம்பித்து விடும். கண்களில் உள்ள இமைகள், தலைமுடிகள், புருவங்கள் மற்ற முடிகள் உள்ள இடங்கள். நெற்றிக்கு மேல் உள்ள பகுதிகளில் முடிகளில் இந்த மாதிரியாக வெள்ளை படலம் தோன்றுவது வொயிட் ஃபோர்லாக் என்று அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளை படலம் ஒரு இடத்திலோ அல்லது ஏகப்பட்ட இடத்தில் கூட வரலாம். இது குறுகிய காலமாகவோ அல்லது நிரந்தர தொந்தரவாக கூட ஏற்படலாம்.

இது நம் உடல் நலத்தை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. இருப்பினும் இது சில தீவிர பிரச்சினைகளை உண்டு பண்ணலாம். விட்டிலிகோ, வாக்-கோயநாகி-ஹராடா நோய், அலோப்சியா ஆரேட், சரோசிடோசிஸ் போன்றவை.

MOST READ: மொச்சைக்கொட்டை பத்தி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ... தெரிஞ்சிக்கங்க

அறிகுறிகள்

அறிகுறிகள்

வளர்ச்சி நிலையிலேயே இதைக் கண்டறிவது நல்லது. உடம்பில் எந்த பகுதியிலாவது முடிகள் உள்ள இடத்தில் வெண்மைப் படலம் தெரிகிறதா? இது ஆண், பெண் என யாரை வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் தாக்கலாம்.

வகைகள்

வகைகள்

இதை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்

மரபு சார்ந்த போலியோசிஸ்

இது பரம்பரை பரம்பரையாக வரக் கூடிய ஒன்றாகக் கூட இருக்கலாம். மரபணு பிறழ்ச்சி காரணமாக பிறக்கும் போதே இந்த வெள்ளைப்படலம் தோன்றி இருக்கலாம்.

அக்யூர்டு போலியோசிஸ்

இந்த நிலையில் சில மருத்துவ சிகச்சைக்கு பிறகு இது ஏற்படலாம். இதனால் அநத மருத்துவ விளைவு பின்னாளில் முடிகளில் வெள்ளைப் படலத்தை ஏற்படுத்தலாம்.

விளைவுகள்

விளைவுகள்

இந்த போலியோசிஸ் பொதுவாக உளவியல் ரீதியான சங்கடங்களையும், அதிர்ச்சி, மன அழுத்தத்தை உண்டு பண்ணுகிறது.

MOST READ: வடிவேலுவின் செம கெட்டப்பும் பட்டைய கிளப்பிய டயலாக்கும் (#வடிவேலு காமெடி கலெக்ஷன்ஸ்)

மரபணு கோளாறுகள்

மரபணு கோளாறுகள்

பைபால்டிசம், வார்வெர்ட்புஸ் சிண்ட்ரோம், மார்பனின் சிண்ட்ரோம், டைபிரோஸ் ஸ்களீரோசிஸ், வாக்-கோயானாகி-ஹராடா (வி.கே.ஹெச்) சிண்ட்ரோம், ஜெயண்ட் கான்ஜினலிட்டல் நெவஸ், மற்றும் அலெஸாண்ட்ரினி சிண்ட்ரோம் போன்ற விளைவை ஏற்படுத்துகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

விட்டிலிகோ, ஹைப்கோபிட்டாரிஸம் நியூரோஃபிப்ரோடோசிஸ், தைராய்டு நோய்கள், இணைப்புத்திசுப் புற்று, இனப்பெருக்க இயக்கக்குறை, தான் தோன்று யுவெயிட்டிஸ், தோல் நேவஸ் பிந்தைய அழற்சி, ஸ்கின் கேன்சர், டெர்மட்டோஸிஸ் , தோல் புற்றுநோய், ஹாலோ நேவஸ், GAPO குறைபாடு மற்றும் தீவிர இரத்த சோகை போன்ற விளைவை ஏற்படுத்துகிறது.

இதர விளைவுகள்

இதர விளைவுகள்

மெலனோமா, அலோப்சியா ஐரேடா, ரூபின்ஸ்டீன்-தைபி நோய்க்குறி, ஹெர்பெஸ் சோஸ்டர், கதிரியக்க சிகிச்சை, மெலனிசஸ் குறைபாடுகள், தோல் நோய், சிறுநீரகம், காயங்கள், வயதானவர்கள், மன அழுத்தம், ஹாலோ மோல்ஸ், கண்களில் ஏற்படும் ஹைபர் பிக்மண்டேஷன். லீப்ராஸி மற்றும் சில மருந்துகள்.

MOST READ: நியூமராலஜியில் 3 ஆம் எண்ணுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது?

நிபந்தனைகள்

நிபந்தனைகள்

இது உடம்புக்கு தீங்கு விளைவிக்கின்ற ஒன்றாக இல்லாவிட்டாலும் தீவிர நோயின் ஆரம்ப கால அறிகுறியாக கூட இருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

மெலனோமா (தோல் புற்றுநோய்) யுவேடிஸ் கிளௌகோமா மற்றும் கண்புரைகளுக்கு வழிவகுக்கலாம். தைராய்டு பிரச்சினைகளான சோர்வு , மனச்சோர்வு, நினைவக பிரச்சினைகள், அதிக கொழுப்பு, குறைந்த பாலியல் இயக்கம் மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்

கண்டறிதல்

கண்டறிதல்

முடிகள் உள்ள பகுதிகளில் காணப்படும் வெள்ளைப் படலமே இதன் அறிகுறியாக கருதப்படுகிறது. உங்கள் குழந்தைகளுக்கு இந்த பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. இது தைராய்டு பிரச்சினைகள், விட்டமின் பி12 குறைபாடா கூடியது இருக்கலாம்.

மருத்துவரை அணுகுதல்

மருத்துவரை அணுகுதல்

அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. உங்கள் குடும்பங்களில் இப்படி யாருக்காவது இந்த பிரச்சினை இருக்கிறதா என்பதை கேட்பார். ஊட்டச்சத்து கணக்கெடுப்பு, எண்டோரினல் ஆய்வு, இரத்த பரிசோதனை, தோல் மாதிரி மற்றும் நரம்பியல் காரணங்களின் பரிசோதனை போன்றவற்றின் மூலம் கண்டறியலாம்.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

இந்த பிரச்சினைக்கு என்று சரியான சிகிச்சை இல்லை. ஆனால் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க முடியும். கீழ்க்கண்ட செயல்கள் மூலம் தடுக்கலாம்.

ஆன்டிபாயாடிக் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சூரியனின் பற ஊதாக் கதிர்களில் இருந்த சருமத்தை காத்துக் கொள்ளுங்கள்.

அம்மி மஜஸ் மூலிகையை கூட தடவி வரலாம்.

வெள்ளைப்படல இடத்தில் நல்ல தோல்களை வைத்து ஒட்டுதல் போன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

MOST READ: மணிக்கட்டில் சுளுக்கிடுச்சா? வலிக்குதா? நீங்களே எப்படி சரிசெய்து கொள்ளலாம்?

சிறிய ஐடியாக்கள்

சிறிய ஐடியாக்கள்

பாதிக்கப்பட்ட முடிக்கு டை அடித்து கொள்ளலாம், தொப்பி மாட்டிக் கொள்ளுதல், ஹெட்பேண்ட்ஸ் போன்ற தலையை கவர் செய்யும் பொருட்களைப் பயன்படுத்தலாம். அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Poliosis: Symptoms, Types, Causes and Treatment

The condition is also called as poliosis circumscripta and affects your eyelashes, head hair, eyebrows and any other areas with hair. When the condition affects the head hair that is right above the forehead, it is called as white forelock.
Story first published: Tuesday, April 9, 2019, 13:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more