For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா? வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...

கையில் முள் போன்ற கூர்மையான செதில் குத்தி வெளியே எடுக்க முடியாமல் சிரமப்படுகிறவர்களுக்கு எளிதாக நீக்க சில வீட்டு வைத்திய முறைகள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. படித்துப் பயன்பெறுங்கள்.

|

சில சமயங்களில் கால்ல கைல எதாவது முள்ளு, மரக்குச்சி இடிச்சிட்டா போதும் வலி உயிரே போய்விடும். அதிலும் நீங்க அதை கண்டுக்காமல் விட்டால் சில பேருக்கு நீர்கோர்த்து வீங்கக் கூட ஆரம்பித்து விடும்.

கையில குத்தின முள்ள எடுக்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. வலிக்காமல் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் சில வகை இயற்கை பொருட்களை பயன்படுத்த வேண்டியிருக்குது. அதைப் பற்றி தான் நாம் இக்கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குத்தக் கூடிய பொருட்கள்

குத்தக் கூடிய பொருட்கள்

மரப் பொருட்களான : முட்கள், மரக்குச்சிகள், பல் குத்தும் குச்சி போன்றவைகள்

உலோக பொருட்கள் : புல்லட்ஸ், தையல் ஊசிகள், நகங்கள், பின்ஸ், கூர்மையான பொருட்கள்

பென்சில் முனைகள் (லெட்டுகள்)

கூர்மையான பிளாஸ்டிக் பொருட்கள்

மீன் முள்கள்

கண்ணாடி துண்டுகள்

பைபர் கிளாஸ் போன்றவை.

MOST READ: எப்ப பார்த்தாலும் எதாவது சாப்பிடணும்னு தோணுதா? அப்போ உங்களுக்கு இந்த மாதிரி இருக்குமே...

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

ரொம்ப சின்ன கண்ணுக்கே தெரியாத முட்களை நீக்க பேக்கிங் சோடா பயன்படுகிறது. முள் குத்திய இடத்தில் பேக்கிங் சோடாவை அப்ளே செய்வதன் மூலம் அங்கிருந்து முள்ளை எளிதாக வெளியே தள்ளிடலாம்.

பயன்படுத்தும் முறை

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பேஸ்ட்டை முள் குத்திய இடத்தில் அப்ளே செய்யுங்கள். அதன் மேல் நீங்கள் பேண்டேஜ் போட்டு கூட சில மணி நேரம் வையுங்கள்.

பிறகு பேண்டேஜை ரிமூவ் செய்து விட்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.பேண்டேஜை வேகமாக இழுக்கும் போது குத்திய முள்ளும் வெளியே வந்திருப்பதை நீங்கள் காணலாம். பிறகு ஆன்டி செப்டிக் லோசனை அப்ளே செய்து கொள்ளுங்கள்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

கை மற்றும் காலில் இருக்கும் முள்ளை நீக்க ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுகிறது. இது குத்திய முள்ளை எளிதில் வெளியே தள்ளி விடும். ஒரு காட்டன் பஞ்சில் கொஞ்சம் ஹைட்ரஜன் பெராக்சைடை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அப்ளே செய்து அப்படியே சில மணி நேரம் விட்டு விடுங்கள். இப்பொழுது அந்த காட்டன் பஞ்சை மெதுவாக ரிமூவ் செய்யுங்கள். காலில் குத்திய முள் வெளியே வந்து விடும்.

எஸன்ஷியல் ஆயில்

எஸன்ஷியல் ஆயில்

லாவண்டர் ஆயிலில் அனலெஸிக், ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. இது முள்ளை எடுப்பதோடு தொற்று வராமலும் தடுக்கிறது.

MOST READ: இந்த தானியத்தை சுண்டல் மாதிரி சாப்பிட்டா இவ்ளோ வியாதியும் உங்க நெருங்கவே முடியாதாம்?

ஷெல் எண்ணெய்

ஷெல் எண்ணெய்

ஷெல்வ் என்ற களிம்பு நிலத்தடியில் இருந்து பெறப்படும் எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பொருளும் முட்களை நீக்க பயன்படுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. இந்த களிம்பை முள் குத்திய இடத்தில் தடவி பேண்டேஜ் போட்டு கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு அப்புறம் பேண்டேஜை ரிமூவ் செய்யுங்கள். முள் வெளியே வந்து விடும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

எப்சம் உப்பும் குத்திய முள்ளை எடுக்க பெரிதும் பயன்படுகிறது. இதிலுள்ள என்சைம் முள்ளால் ஏற்படும் தொற்றை நீக்குகிறது.

பயன்படுத்தும் முறை

முள் குத்திய காலை எப்சம் உப்பு கலந்த நீரில் 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பிறகு முள்ளை எளிதாக எடுத்து விடலாம்.

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோலில் உள்ள என்சைம் கூட முள்ளை நீக்க பயன்படுகிறது. தோலில் உள்ள வெள்ளைப் பகுதி முள் குத்திய இடத்தில் படுமாறு 10 நிமிடங்கள் வையுங்கள். இப்பொழுது முள்ளை வலிக்காமல் நீக்கிடலாம்

MOST READ: இந்த குழந்தைகளுக்கு இவங்க ரெண்டுபேரும் தான் அப்பா அம்மாவாம்... ரெண்டுபேரும் பால் கொடுக்கலாமா?

டிப்ஸ்கள்

டிப்ஸ்கள்

முள் குத்திய இடத்தை தொடுவதற்கு முன் நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவிக் கொள்ளுங்கள்.

அந்த பகுதியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதனால் தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம்.

முள் குத்திய இடத்தை சுற்றி இருக்கும் பகுதியை அமுக்கியோ, கிள்ளியோ விட வேண்டாம்.

முள் குத்திய பகுதி சிவந்து போய் வீக்கத்துடன் சூடாக காணப்பட்டால் முள் ஆழமாக குத்தி உள்ளது என்று அர்த்தம். உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Natural Ways to Remove a Splinter

Taking the splinters out from your skin can be extremely painful and need to be dealt with quickly to bring relief from the pain and irritation. So, in this article, we will tell you some quick remedies to remove a splinter.
Story first published: Friday, July 12, 2019, 15:17 [IST]
Desktop Bottom Promotion