For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திடீர்னு பரவும் குரங்கு காய்ச்சல் எனும் காட்டுநோய்... இந்த அறிகுறி வந்தா ஜாக்கிரதையா இருங்க

|

குரங்கு காய்ச்சல் அல்லது கியாசனுர் காட்டு நோய் (Kyasanur forest disease - KFD) கர்நாடக மாநிலம் சிவமுகா மாவட்டத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 6 பேர் இந்நோயினில் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த அறிக்கையின்படி சுமார் 15 நபர்களிடம் இந்த அபாயகரமான வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Monkey fever

இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் வேகமாக பரவிவரும் இந்த தோற்று நோயை தடுக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். அதேசமயம், இறந்த குரங்கு ஒன்றிலிருந்து குறைந்தது 50 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கியாசனுர் காட்டு நோய் அல்லது குரங்கு காய்ச்சல் என்றால் என்ன?

கியாசனுர் காட்டு நோய் அல்லது குரங்கு காய்ச்சல் என்றால் என்ன?

கியாசனுர் காட்டு நோய் (KFD) கர்நாடக மாநிலத்தில் மீண்டும் பரவி வரும் விலங்குகள் வழியாக பரவக்கூடிய ஒரு நோய் ஆகும். இந்த நோயானது ஃபிளவிவிரிடையே என்ற குடும்பத்தை சேர்ந்த கியாசனுர் காட்டு நோய் வைரஸினால் (KFDV ) ஏற்படுகிறது.

இந்த நோயானது 1957 ஆம் ஆண்டு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமுகா மாவட்ட கியாசனுர் காட்டு பகுதியில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. அந்த பகுதியில் கண்டறியப்பட்டதால், அப்பகுதியின் பெயரையே அந்த நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமிக்கு சூட்டியுள்ளனர். இந்த நோய்க்கும் குரங்குகளின் இறப்பிற்கும் சம்பந்தம் இருப்பதால், அப்பகுதியில் வாழும் மக்கள் இந்த நோயை குரங்கு காய்ச்சல் என்று அழைக்கின்றனர்.

MOST READ: "நான் ஒரு ஏமாந்த கோழி" தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா

நோய் பரவும் விதம்:

நோய் பரவும் விதம்:

கியாசனுர் காட்டு நோய் பாதித்த விலங்கு கடிப்பதன் மூலமாகவோ, நோயினால் பாதித்த அல்லது இறந்த குரங்குகளை தொடுவதின் மூலமாகவோ இந்நோய் மனிதருக்கு பரவுகிறது. அதேசமயம், ஒரு மனிதரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுவதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் தற்பொழுது இல்லை.

கியாசனுர் காட்டு நோயின் அறிகுறிகள்

கியாசனுர் காட்டு நோயின் அறிகுறிகள்

கியாசனுர் காட்டு நோயை பரப்பும் வைரஸ் கிருமியின் அடைகாக்கும் காலம் மூன்று முதல் எட்டு நாட்களாகும். இந்த காலத்தில் நோயின் அறிகுறிகள் ஒருவரிடம் தென்படுவதில்லை. இந்த அடைகாக்கும் காலம் முடிந்தவுடன், முதற்கட்ட அறிகுறியாக ஒருவருக்கு

முன்பக்க தலைவலி, குளிர் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் கடுமையான தசை வலியுடன் வாந்தி, வயிற்றுபோக்கு, மனத் தொந்தரவு போன்ற பல அறிகுறிகளும் நோய் பாதித்த ஒருவரிடம் தென்படும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு

அமைப்பின் (CDC) கருத்துப்படி, இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் குறைந்த இரத்த அழுத்தம், இரத்த தட்டுகள் குறைபாடு, சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் குறைபாடு போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

MOST READ: 40 வயதை தாண்டும் ஆண்கள் எந்த நோயும் அண்டாம இருக்க இந்த 5 பொருளையும் சாப்பிடணும்

சவால்கள்

சவால்கள்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நோய் பாதிக்கப்பட்டவர் ஒன்று முதல் மூன்று வாரங்களில் நோய் பாதிப்பிலிருந்து, எந்தவொரு பெரிய சிக்கலும் இல்லாமல் விடுபட்டுவிடுகிறார். ஆனால் நோய் முற்றிலும் குணமாக பல மாதங்கள் வரை ஆகலாம். இந்திய நாட்டின் தேசிய ஆரோக்கிய வலைதளத்தின் தகவல்படி KFD நோய் பாதித்தவர்களில் இரண்டு முதல் பத்து சதவீதம் பேர் இறந்துவிடுகின்றனர்.

எவ்வாறு குணப்படுத்துவது?

எவ்வாறு குணப்படுத்துவது?

துரதிர்ஷ்டவசமாக கியாசனுர் காட்டு நோயை குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் நோய் பாதிப்பு ஏற்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து ஆரம்பநிலை மருத்துவ பராமரிப்பு கொடுப்பதன் மூலம் நோயின்

தாக்கத்தை குறைக்க முடியும். முக்கியமாக உடல் நீர் இழப்பு மற்றும் நரம்பு சம்பத்தப்பட்ட அறிகுறிகளை நன்றாக பராமரித்து கட்டுக்குள் வைக்க வேண்டும்.

தடுக்க முடியுமா?

தடுக்க முடியுமா?

கியாசனுர் காட்டு நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி உள்ளது. இந்த தடுப்பூசியானது அடிக்கடி நோய் பரவும் முக்கியமான இடங்களில் வாழும் மனிதர்களுக்கு போடப்படுகிறது. கூடுதல் தடுப்பு நடவடிக்கையாக பூச்சி விரட்டியை உபயோகிப்பது, பாதுகாப்புள்ள ஆடையை

MOST READ: சிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்...

எச்சரிக்கை நடவடிக்கைகள்

எச்சரிக்கை நடவடிக்கைகள்

நோய் பாதித்த பகுதிகளில் இருக்கும் பொது அணிவது மற்றும் இறந்த குரங்கிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது போன்றவற்றை பின்பற்றலாம்.

எந்த ஒரு நோயையும் வரும் முன் காப்பதே சிறந்த செயலாகும். ஆகவே நீங்கள் இந்த நோய் பதித்த பகுதியில் இருந்தாலோ அல்லது நோயின் அறிகுறி உள்ள ஒரு நபரை காண நேர்ந்தாலோ, உடனடியாக மேற்கூறிய முன்னெச்செரிக்கை

நடவடிக்கைகளை பின்பற்றி இந்த நோயை பரவாமல் தடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Monkey fever in Karnakata: Symptoms of Kyasanur forest disease, causes and prevention

Monkey fever in Karnakata: Symptoms of Kyasanur forest disease, causes and prevention.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more