For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கால்களில் இப்படி தேங்கியிருக்கிற இறந்த செல்களை ஒரே வாரத்தில் நீக்குவது எப்படி?...

கால்களில் தேங்கி நிற்கும் இறந்த செல்களை எப்படி நீக்கி அழகான வழவழப்பான கால்களை பெறலாம். அதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பற்றி தான் இங்கே விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

|

சில சமயம் கால்களில் இறந்த செல்கள் எல்லாம் சேர்ந்து திட்டு திட்டாக காணப்படும். இதற்கு ஸ்ட்ராபெர்ரி கால்கள் என்று பெயர்.

Strawberry

இது நாம் கால்களில் உள்ள முடிகளை நீக்கும் போது துவாரங்கள் அடைபடுவதால், வளர முடியாத முடிகள் மற்றும் ரேசர் காயங்கள் இவற்றால் ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ட்ராபெர்ரி லெக்ஸ் என்றால் என்ன?

ஸ்ட்ராபெர்ரி லெக்ஸ் என்றால் என்ன?

கால்களில் உள்ள முடித் துவாரங்களில் சிறிய புடைப்புகள் மற்றும் கருப்பான துளைகள் காணப்படும். இது பார்ப்பதற்கு கரும்புள்ளிகள் போன்று அதில் இறந்த செல்கள், பாக்டீரியா மற்றும் எண்ணெய் பசை இவை சேர்ந்து உண்டாகிறது.

இந்த கரும்புள்ளிகள் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும் நல்ல நிறமான சருமத்தின் அழகை கெடுக்கும். இதனாலவே வெளியவே கால்களை காட்ட சிலர் தயங்குவார்கள்.

MOST READ: சிவன் ருத்ர தாண்டவம் ஆடும்போது என்ன சொல்லிக்கிட்டு ஆடுவார்னு தெரியுமா?

காரணங்கள்

காரணங்கள்

இது ஏற்பட முக்கிய காரணம் முடியிழைகளில் எண்ணெய் பசை அடைத்து விடுவது தான்.

அதே மாதிரி முடியை நீக்க பயன்படுத்தும் ரேசரை ஆல்கஹால் கொண்டு பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் கழுவாமல் இருத்தல். சூடான நீரில் குளித்தல் போன்றவை சரும துளைகளை திறந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது.

சரும துளைகள் பெரிதாகுதல்

சரும துளைகள் பெரிதாகுதல்

ஏற்கனவே நம் சரும துளைகள் அதிகப்படியான எண்ணெய் பசை, பாக்டீரியாவால் அடைத்து விடுகிறது. மேலும் ஷேவிங் செய்யும் போது ஆக்ஸைடு விளைவு ஏற்பட்டு அந்த இடம் கருப்பாக மாறத் துவங்குகிறது.

ஃபோலிகுலிடிஸ்

ஃபோலிகுலிடிஸ்

ஷேவிங் செய்யும் போது மயிர்த்துளைகளில் ஏற்படும் எரிச்சல் ஃபோலிகுலிடிஸை உண்டாக்குகிறது. எனவே ஷேவிங் செய்த பிறகு முடிகள் அந்த துளை வழியாக ஊடுருவ கடினமாக இருக்கும். இதனால் அந்த துளைகளில் அடைப்பு, சிவத்தல், கொப்புளங்கள், எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.

MOST READ: இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...

கெரடோசிஸ் பிலாரிஸ்

கெரடோசிஸ் பிலாரிஸ்

இதற்கு சிக்கன் ஸ்கின் என்ற பெயரும் உண்டு. இதில் நமது சருமம் அதிகப்படியான கெரோட்டினை உற்பத்தி செய்து மயிர்த்துளைகளை அடைத்து கொப்புளங்களை ஏற்படுத்துகிறது.

நீக்கும் முறைகள்

நீக்கும் முறைகள்

கால்கள், பிட்டும் இவற்றில் காணப்படும் கருப்பு சரும துளைகளை எளிதாக நீக்கி அழகு பெறலாம். தினமும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதன் மூலம் இதை ஓரளவுக்கு குறைத்து விடலாம்.

பாடி ஸ்க்ரப் ரெசிபி

பாடி ஸ்க்ரப் ரெசிபி

2 டீ ஸ்பூன் உப்பு அல்லது சர்க்கரை

1 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சில துளிகள் எஸன்ஷியல் ஆயில்

1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்

1 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல்

1/2 லெமன் ஜூஸ்

பயன்படுத்தும் முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக கலக்குங்கள். இப்பொழுது இந்த பேஸ்ட்டை 2-3 நிமிடங்கள் கால்களில் அப்ளே செய்து வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யுங்கள்.

மற்றொரு முறை

அடைத்த சரும துளைகளை திறக்க முதலில் வெதுவெதுப்பான நீரில் கால்களை நனையுங்கள். இப்படி செய்யும் போது கால்களில் உள்ள துவாரங்கள் திறக்கப்பட்டு தூசிகள், எண்ணெய் பசைகள் எல்லாம் வெளியேறி விடும். கால்களும் பளபளப்பாகி விடும்.

இறந்த செல்களை நீக்குதல்

இறந்த செல்களை நீக்குதல்

வீட்டிலேயே சுகர் ஸ்க்ரப் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். இது சருமத்தில் மற்றும் சரும துளைகளில் உள்ள அழுக்குகள், தூசிகள், எண்ணெய் பிசுக்குகள், இறந்த செல்களை நீக்கி சுத்தமாக்குகிறது. இதனால் துளைகள் கருப்பாக மாறுவது தவிர்க்கப்படுகிறது.

MOST READ: உங்க கால்ல இப்படி இருக்கா? அது நோயின் அறிகுறி தெரியுமா? எப்படி சரிசெய்யலாம்?

குளிர்ந்த நீரில் கழுவுங்கள்

குளிர்ந்த நீரில் கழுவுங்கள்

இறந்த செல்களை ஸ்க்ரப் கொண்டு நீக்கிய பிறகு குளிர்ந்த நீரில் கால்களை கழுவுங்கள். இது சரும துளைகளை மூடி திரும்பவும் எண்ணெய் பசை, அழுக்குகள் இவைகள் உள்ளே செல்லாமல் காக்கிறது.இதனால் சரும துளைகள் அனைத்து கருப்பாக மாறுவது தவிர்க்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of Strawberry Legs In 5 Easy Steps

If you dread the so-called strawberry legs, you’re not alone. Unfortunately, having smooth legs isn’t an easy task to attain as depicted by our society. Shaving leaves our legs covered with clogged pores, ingrown hairs or razor burn
Story first published: Monday, June 17, 2019, 17:09 [IST]
Desktop Bottom Promotion