Latest Updates
-
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தவெக மாநாடு வெற்றிக்கு பின் விஜய் - த்ரிஷா பற்றி பரவும் வதந்தி: ரசிகர்கள் ஏன் இப்படி முடிச்சுப் போடுறாங்க? -
உங்க இதயம் ஆபத்திலிருப்பதை வீட்டிலேயே கண்டறியும் 5 நொடி சோதனை - செஞ்சு பார்த்து உயிரை காப்பதிக்கோங்க
பனியில உதடு வெடிச்சிருக்கா? ஒரே நாளில் எப்படி ஈஸியா சரி பண்ணலாம்?
இந்த குளிர்காலம் வந்துட்டாலே போதும் ஏகப்பட்ட சரும பிரச்சினைகளும் நம்மை தொற்றிக் கொள்ளும். அதில் ஒன்று தான் வாயை சுற்றி புண்கள் ஏற்படுவது. இது பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பதோடு மிகுந்த வலியையும் ஏற்படு
இந்த குளிர்காலம் வந்துட்டாலே போதும் ஏகப்பட்ட சரும பிரச்சினைகளும் நம்மை தொற்றிக் கொள்ளும். அதில் ஒன்று தான் வாயை சுற்றி புண்கள் ஏற்படுவது. இது பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பதோடு மிகுந்த வலியையும் ஏற்படுத்தும். எனவே இந்த குளிர்கால புண்களை உடனே விரட்டுவது நல்லது. அதற்கு சில எளிய இயற்கை முறைகளை இங்கே கூற உள்ளோம். வாங்க பார்க்கலாம்.

குளிர்கால வாய்ப்புண்
இந்த குளிர்கால புண்கள் காய்ச்சல் கொப்புளங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு சிறிய வடிவில் தண்ணீர் கொப்புளங்கள் போன்று உதட்டை சுற்றி காணப்படும். இது வெடித்தவுடன் அதன் மேல் ஒரு தோல் உருவாகிறது.
இந்த வாய்ப்புண் பரவக் கூடியது. ஒருத்தரிடமிருந்து ஒருத்தருக்கு முத்தம் கொடுப்பதாலோ எச்சில் வழியாகவோ பரவக் கூடியது. இதை எச்எஸ்வி1, எச்எஸ்வி2 என்ற வைரஸ்கள் உருவாக்குகின்றன. வாய்வழி செக்ஸில் ஈடுபடுபவருக்கு இது எளிதாக பரவுகிறது. இந்த புண்களை சில இயற்கை வழிகளைக் கொண்டு நான்கே வாரத்தில் குணப்படுத்தி விடலாம்.

டீ ட்ரி ஆயில்
தேவையான பொருட்கள்
டீ ட்ரி ஆயில்
காட்டன் பஞ்சு
பயன்படுத்தும் முறை
காட்டன் பஞ்சை எடுத்து அதில் டீ ட்ரி ஆயிலை லேசாக தொட்டு வாயை சுற்றியுள்ள புண்களில் தடவுங்கள். இதை படுப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன் என்று ஒரு நாளைக்கு பல தடவை செய்து வாருங்கள்.
இதில் ஆன்டி வைரல் தன்மை உள்ளது. எனவே புண்களை ஏற்படுத்தக் காரணமான வைரஸை அழிக்கிறது. எனவே புண்கள் சீக்கிரம் குணமாகிவிடும்.

ஐஸ் கட்டிகள்
தேவையான பொருட்கள்
ஐஸ் கட்டிகள்
பயன்படுத்தும் முறை
ஐஸ் கட்டியைக் கொண்டு புண்களின் மீது லேசாக ஒத்தடம் கொடுக்கவும். இது வீக்கத்தையும் அரிப்பையும் போக்கும். ஐஸ் கட்டியை அதன் மேல் தேய்க்க வேண்டாம். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வாருங்கள்.
இது புண்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை போக்கி சீக்கிரம் குணமாக்கி விடுகிறது.

தேங்காய் எண்ணெய்
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய்
காட்டன் பஞ்சு
பயன்படுத்தும் முறை
ஒரு காட்டன் பஞ்சில் தேங்காய் எண்ணெய்யை நனைத்து புண்களில் தடவுங்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என பல தடவை செய்து வாருங்கள்.
தேங்காய் எண்ணெய்யில் ஆன்டி மைக்ரோபியல் ஏஜெண்ட் இருக்கிறது. இதில் ட்ரைகிளிசரைடு, லாரிக் அமிலம் மற்றும் ஓலியிக் அமிலம் போன்றவை வைரஸ்களை அழித்து வாய்ப்புண்களை குணமாக்குகிறது.

ஆப்பிள் சிடார் வினிகர்
தேவையான பொருட்கள்
ஆப்பிள் சிடார் வினிகர்
காட்டன் பஞ்சு
பயன்படுத்தும் முறை
ஒரு காட்டன் பஞ்சில் ஆப்பிள் சிடார் வினிகரை நனைத்து புண்களில் போட்டு வர விரைவில் மறைந்து விடும். கொஞ்சம் நேரம் காய விடுங்கள். ஒரு நாளைக்கு மூன்று முறை என செய்து வரலாம்.
இது ஒரு சிறப்பான ஆன்டி மைக்ரோபியல் ஏஜெண்ட். இது வைரஸை அழித்து சீக்கிரம் புண்களை குணப்படுத்துகிறது.

பெப்பர்மின்ட் ஆயில்
தேவையான பொருட்கள்
பெப்பர்மின்ட் ஆயில்
காட்டன் பஞ்சு
பயன்படுத்தும் முறை
காட்டன் பஞ்சில் பெப்பர்மின்ட் ஆயிலை எடுத்து புண்களில் தடவுங்கள்
15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு நீரில் கழுவவும்
இதை ஒரு நாளைக்கு மூன்று முறை என செய்து வந்தால் சீக்கிரமே குணமாகிவிடும்.
இது அந்த வைரஸ்க்கு எதிரான தீவிரத்தை காட்டுகிறது. இந்த ஹெர்பஸ் வகை வைரஸ் தொற்றுக்கு பெப்பர்மின்ட் ஆயில் சிறந்தது. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் குளிர்கால வாய்ப் புண்ணிலிருந்து தப்பிக்கலாம்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு
தேவையான பொருட்கள்
ஹைட்ரஜன் பெராக்ஸைடு
காட்டன் பஞ்சு
பயன்படுத்தும் முறை
ஒரு காட்டன் பஞ்சை எடுத்து அதில் ஹைட்ரஜன் பெராக்ஸைடில் நனைத்து புண்களில் அப்ளே செய்யுங்கள். 2-3 மணி நேரம் இதை அப்ளே செய்து வாருங்கள்.
இது வைரஸ்களால் ஏற்படும் தொற்றை போக்குகிறது. புண்களில் கசியும் இரத்தத்தை நிறுத்தி சீக்கிரம் புண்களை காய வைத்து குணமாக்குகிறது.

பூண்டு
தேவையான பொருட்கள்
பூண்டு பற்கள்
பயன்படுத்தும் முறை
பூண்டு பற்களை நசுக்கி அந்த புண்களில் அப்ளே செய்யுங்கள்
அதே மாதிரி காலையில் வெறும் வயிற்றில் பூண்டு பற்களை சாப்பிட்டு வரலாம்.
ஒரு நாளைக்கு 2-3 முறை இதை பயன்படுத்தி வரலாம்
இது ஹெர்பஸ் டைப் 1 வைரஸை அழிக்க கூடியது. இது எளிய முறை பலனளிக்க கூடிய ஒன்று.

லெமன் பாம் ஆயில்
தேவையான பொருட்கள்
லெமன் பாம் ஆயில்
காட்டன் பஞ்சு
தேவையான பொருட்கள்
காட்டன் பஞ்சில் ஆயிலை எடுத்து புண்களில் அப்ளே செய்யுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும். இதை ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்து வாருங்கள்.
இதன் ஆன்டி வைரல் பொருட்கள் பூஞ்சைத் தொற்று க்கு காரணமான வைரஸை அழித்து நிவாரணம் அளிக்கிறது.

வெண்ணிலா
வெண்ணிலா எஸன்ஸ்
காட்டன் பஞ்சு
பயன்படுத்தும் முறை
காட்டன் பஞ்சில் வெண்ணிலா எஸன்ஸை எடுத்து வாயைச் சுற்றியுள்ள புண் களில் அப்ளே செய்யுங்கள். சில நிமிடங்கள் வைத்து இருந்து பின் கழுவி விடவும். இதை ஒரு நாளைக்கு 4-5 தடவை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதில் 35 % ஆல்கஹால் இருப்பதால் வைரஸ் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

கடல் உப்பு
தேவையான பொருட்கள்
சிறுதளவு கடல் உப்பு
பயன்படுத்தும் முறை
கடல் உப்பை சுத்தமான கைகளில் எடுத்து புண்களில் தடவி விடுங்கள்
30 விநாடிகள் அப்படியே வைத்து இருக்கவும்
இதை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வாருங்கள்.
இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் செயல் புண் களுக்கு காரணமான வைரஸ்களை அழித்து விடுகிறது.

தேன்
தேவையான பொருட்கள்
1/2 டீ ஸ்பூன் தேன்
பயன்படுத்தும் முறை
தேனை கையில் எடுத்து வாய்ப்புண்களில் தடவிக் கொள்ளுங்கள்
5-7 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்கவும்
பிறகு நீரைக் கொண்டு கழுவி விடுங்கள்.
இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வாருங்கள்
வேலை செய்யும் விதம்
தேனில் ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் உள்ளது. இது புண்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலியை போக்கி நிவாரணம் தருகிறது.

அதிமதுரம் வேர்
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் அதிமதுர பொடி
1-2 டேபிள் ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி
பயன்படுத்தும் முறை
அதிமதுர பவுடரை ஜெல்லி பேஸ்ட்டில் சேர்த்து குழைத்து கொள்ளுங்கள்.
அப்படியே காய விடுங்கள். சில மணி நேரத்துக்கு ஒரு முறை திரும்பவும் செய்யவும்
அதிமதுர வேர்களில் கிளைசைரின் என்ற பொருள் உள்ளது. இது வைரஸ் பெருக்கத்தை தடுக்கிறது. அதே நேரத்தில் பெட்ரோலியம் ஜெல்லி புண்களை விரைவில் ஆற்றுகிறது.

யூகப்லிப்ட்ஸ் எண்ணெய்
தேவையான பொருட்கள்
யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய்
காட்டன் பஞ்சு
பயன்படுத்தும் முறை
காட்டன் பஞ்சில் எண்ணெய்யை எடுத்து புண் களில் அப்ளே செய்து கொள்ளுங்கள்.
பிறகு உலரும் வரை வைத்திருக்கவும். இதை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய் ஹெர்பஸ் வைரஸை அழித்து குளிர்கால புண்களை விரைவில் ஆற்றுகிறது.

பால்
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் பால்
காட்டன் பஞ்சு
பயன்படுத்தும் முறை
ஒரு காட்டன் பஞ்சில் பாலை நனைத்து கொள்ளுங்கள். அதை புண்களில் தடவுங்கள்
அப்படியே சில நிமிடங்கள் வைத்து இருக்கவும். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை செய்து வாருங்கள்.
பாலில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. இது தொற்றை நீக்குவதோடு சருமத்தையும் சரி செய்கிறது.

டூத் ப்ரஷ்
உங்கள் டூத்பிரஷ்யை கூட புதிதாக மாற்றுங்கள். அதில் இருக்கும் வைரஸ் தொற்றால் கூட வாயை சுற்றி புண்கள் ஏற்படலாம். எனவே புது டூத் ப்ரஷ்யை பயன்படுத்துங்கள்.

விட்டமின் ஈ
தேவையான பொருட்கள்
விட்டமின் ஈ ஆயில் அல்லது மாத்திரைகள்
காட்டன் பஞ்சு
பயன்படுத்தும் முறை
ஒரு காட்டன் பஞ்சை விட்டமின் ஈ ஆயிலில் நனைத்து வாயைச் சுற்றியுள்ள புண்களில் தடவுங்கள். விட்டமின் ஈ மாத்திரைகள் என்றால் உடைத்து அந்த எண்ணெய்யை எடுத்து கொள்ளுங்கள். சிறிது நேரம் காய விடவும்
அதே மாதிரி விட்டமின் ஈ உணவுகளை அதிகளவில் எடுத்து கொள்ளுங்கள்
ஒரு நாளைக்கு பல தடவை செய்து பாருங்கள், விரைவில் வாய்ப்புண் போய்விடும்.
விட்டமின் ஈ ல் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் வீக்கத்தையும் அழற்சியையும் போக்குகிறது. இதை மாத்திரை வடிவில் கூட நீங்கள் எடுத்து வந்தால் நல்ல பலனளிக்கும்.

கற்றாழை ஜெல்
தேவையான பொருட்கள்
கற்றாழை ஜெல்
காட்டன் பஞ்சு
பயன்படுத்தும் முறை
ஒரு காட்டன் பஞ்சில் சிறிது கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ளுங்கள்
அதை புண்களில் தடவுங்கள். உலரும் வரை காத்திருக்கவும்
இதை 2-3 முறை தினமும் செய்து வாருங்கள் வாயைச் சுற்றியுள்ள புண்கள் சீக்கிரம் சரியாகி விடும்.



Click it and Unblock the Notifications