For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா? வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...

தொடையில் தேங்கியிருக்கும் செல்லுலாய்டு கொழுப்புகளை எப்படி கரைத்து எடுக்கலாம் என்பதற்கான குறிப்புகளை தான் உங்களுக்கு இங்கே கொடுத்திருக்கிறோம். அதிலும் நம்முடைய வீட்டில் உள்ள ளியைமான பொருள்கள் மூலம் எப்

|

செல்லுலைட் என்பது பொதுவாக தொடைப் பகுதி, கால்கள், வயிறு மற்றும் பிட்டப் பகுதிகளில் உண்டாகும் கொழுப்புத் தேக்கம் ஆகும். பெரும்பாலான பெண்கள் எந்த உடல் வடிவத்தில் எந்த உயரத்தில் இருந்தாலும் இந்த செல்லுலைட்டால் பாதிக்கப்படுகின்றனர். தோல் பகுதிக்கு அடியில் எளிதில் மிதக்கும் கொழுப்பு அணுக்கள் தேக்கப்படுவதால் செல்லுலைட் உருவாகிறது. ஆரஞ்சு தோலில் காணப்படும் குழி போல் இதன் தோற்றம் இருக்கும். ஹார்மோன், மரபணு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை போன்றவை செல்லுலைட் ஏற்பட முக்கியக் காரணமாக உள்ளன.

How to Get Rid of Cellulite in Thighs

உங்களுக்கு செல்லுலைட் ஏற்பட்டவுடன் அவற்றைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . வயது அதிகரிக்க அதிகரிக்க இந்த நிலை மோசமடையும். பல சிறப்பான தீர்வுகள் மூலம் இதன் உருவாக்கத்தைக் குறைக்கவும் தாமதிக்கவும் முடியும். செல்லுலைட் பாதிப்பை நிர்வகிக்க மற்றும் கட்டுப்படுத்த சில எளிய வழிமுறைகள் மற்றும் வீட்டுத் தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி இதனைக் கட்டுப்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமத்தை தேய்ப்பது

சருமத்தை தேய்ப்பது

தொடையில் உண்டாகும் செல்லுலைட் பாதிப்பை எளிய வழியில் விரட்ட தேய்த்துக் குளிக்கும் முறையைப் பின்பற்றலாம். இதனைப் பலரும் முன்மொழிந்தாலும், அறிவியல் பூர்வமான ஆதாரம் எதவும் இதன் சிறப்பை வெளியிடவில்லை.

தேய்த்துக் குளிப்பதால் இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் வடிகால் மேம்படுகிறது. இதனால் உடலில் இருக்கும் நச்சுகள் எளிய முறையில் வெளியேறுகிறது.

மேலும், இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சருமம் அதிக புத்துணர்ச்சியுடன் இருப்பதால், செல்லுலைட் மறைகிறது.

1. இதனைத் தொடங்குவதற்கு ,முன்னர், உங்கள் சருமம் மற்றும் பிரஷ் ஆகிய இரண்டும் ஈரமின்றி வறண்டு இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவும்.

2. உங்கள் பாதம் முதல் தோள்பட்டை வரை மென்மையாக தேய்க்கவும். குறிப்பாக செல்லுலைட் அதிகம் உள்ள இடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தேய்க்கவும். உடலின் இடப்புறம் இருந்து வலப்புறம் தேய்க்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இதயத்தில் கவனம் செலுத்தி தேய்க்க வேண்டும்.

3. சுமார் ஐந்து நிமிடங்கள் இப்படி தேய்க்கலாம்.

4. இறுதியாக, இறந்த அணுக்கள் மற்றும் அழுக்கைப் போக்க நன்றாகக் குளிக்கலாம்.

5. தினமும் குளிப்பதற்கு முன்னால் இப்படி பிரஷ் கொண்டு தேய்த்து வரலாம். உங்கள் சருமத்தில் செல்லுலைட் பாதிப்பு குறையும்வரை இதனைப் பின்பற்றலாம்.

குறிப்பு

இயற்கையான நார்கள் கொண்டு தயாரிக்கப்படும் பிரஷ்ஷை வாங்கி பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

MOST READ: இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்... 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது...

மிளகு

மிளகு

மிளகு என்பது கொழுப்பை எரிக்கும் ஒரு உணவுப்பொருள். உடலுக்கு இயற்கை முறையில் வெப்பத்தைக் கொடுக்கும் திறன் மிளகிற்கு உண்டு. இதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து வளர்சிதை மாற்றம் ஊக்குவிக்கப்படுகிறது. கூடுதலாக, சருமத்தில் உள்ள கெட்ட சரும அணுக்கள் வெளியேற்றப்பட்டு வலிமையான ஆரோக்கியமான அணுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கிறது. மேலும் கூடுதலாக, தொடர்ச்சியாக மிளகு எடுத்துக் கொள்வதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு, தொடையில் தோன்றும் செல்லுலைட் பாதிப்பு குறைய உதவுகிறது.

1. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் மிளகு தூள் சேர்க்கவும்,

3. ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்க்கவும்,

4. ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அந்தக் கலவையில் சேர்க்கவும்.

5. எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.

6. இந்த நச்சுகளை வெளியேற்றும் பானத்தை ஒரு நாளில் ஒருமுறை அல்லது இரண்டு முறை பருகவும்.

7. இப்படி ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் பின்பற்றவும்.

காபி பொடி

காபி பொடி

கொரகொரப்பாக அரைத்த காபி கொட்டைகள், சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை அகற்றி சருமத்தை தளர்த்தி, புதிய ஆரோக்கியமான அணுக்களை மறு உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், காபி பருகுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

1. கால் கப் அரைத்த காபி கொட்டையில் , மூன்று ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.

2. இதனுடன் இரண்டு ஸ்பூன் உருக்கிய தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

3. இவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.

4. இந்த பேஸ்டை ஒரு சிறு அளவு எடுத்து பாதிக்கபட்ட இடத்தில் சில நிமிடங்கள் அதிக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யவும்.

5. இறுதியாக வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

6. தகுந்த தீர்வு ஏற்படும் வரை, ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைப் பின்பற்றவும்.

இந்த கலவை அதிகமாக இருந்தால், ஒரு கண்ணாடி ஜாரில் அதனை சேமித்து வைத்து வருங்கால பயன்பாட்டிற்கு சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு மாற்றாக காபி மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தயாரிக்கும் ஒரு கட்டை உருவாக்கலாம்.

1. அரை கப் அரைத்த காபி கொட்டையுடன் ஒரு சிறு அளவு சுத்தமான ஆலிவ் எண்ணெய் சேர்த்து 20 நொடிகள் ஓவனின் சூடாக்கவும்.

2. இந்த வெதுவெதுப்பான கலவையை செல்லுலைட் பாதிப்பு இருக்கும் இடகளில் தடவி, ஒரு பிளாஸ்டிக் உறை கொண்டு சுற்றிக் கொள்ளவும்.

3. அரை மணி நேரம் அப்படியே விடவும்.

4. பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும்.

5. ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றி வித்தியாசத்தை உணரவும்.

ஜுனிபர் எண்ணெய்

ஜுனிபர் எண்ணெய்

ஜூனிபர் எண்ணெய் சிறந்த நச்சகற்றும் பண்புகளைக் கொண்டது . இது உடலில் உண்டாகும் நீர்தேக்கத்தைக் குறைத்து, செல்லுலைட்டை சிறந்த முறையில் குறைக்க உதவுகிறது.

1. கால் கப் ஆலிவ் எண்ணெயுடன் 10 முதல் 15 துளி ஜுனிபர் எண்ணெயைச் சேர்த்து கலக்கவும்.

2. பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த கலவையைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யவும்

3. பத்து நிமிடங்கள் மசாஜ் செய்தவுடன் அப்படியே விடவும்.

4. ஒரு நாளில் இரண்டு முறை இதனைப் பின்பற்றவும்.

5. ஒரு மாதத்திற்கு பின் உங்கள் சருமம் மென்மையாகவும் உறுதியாகவும் இருப்பதை உங்களால் உணர முடியும்.

MOST READ: நிறைய பால் குடிப்பீங்களா? உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா?

கடற்பாசி

கடற்பாசி

இயற்கை முறையில் உடலைத் தளர்த்தும் ஒரு பொருளாக இருப்பது கடற்பாசி. இது இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, சரும தோற்றத்தை மேம்படுத்துகிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால் செல்லுலைட் பாதிப்பு சருமத்தில் குறைய நேருகிறது.

1. மூன்று ஸ்பூன் அரைத்த கடற்பாசி எடுத்துக் கொள்ளவும். இது மருந்து கடைகளில் கிடைக்கும்.

2. இதனுடன் கால் கப் கடல் உப்பு மற்றும் கால் கப் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.

3. இவற்றுடன் அத்தியாவசிய எண்ணெய்யில் ஏதாவது ஒன்றை சில துளிகள் சேர்த்துக் கொள்ளவும்.

4. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, குளிப்பதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் பத்து நிமிடம் மசாஜ் செய்யவும்.

5. குளித்து முடித்தபின், மாயச்ச்சரைசர் தடவவும்.

6. பல வாரங்கள் தொடர்ந்து தினமும் ஒரு முறை இதனைப் பின்பற்றவும்.

7. இந்தக் கலவையை அதிகமாகத் தயாரித்து ஒரு ஜாரில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

கடற்பாசியைக் கொண்டு குளிப்பதாலும் செல்லுலைட் பாதிப்பு குறையலாம்.

1. வெதுவெதுப்பான நீரில் 4 கடற்பாசி அட்டைகளை சேர்த்து ஊற வைக்கலாம்.

2. பின்னர் 20 நிமிடம் கழித்து, இந்த நீரில் குளிக்கலாம்.

3. சிறந்த தீர்வுகளுக்கு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகரில் கனிமங்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை இருப்பதால் செல்லுலைட் பாதிப்பு சரி செய்யப்படுகிறது. இந்த எல்லாக் கூறுகளும்,தொடை மற்றும் வயிற்றுப் பகுதியில் நச்சுகள் மற்றும் நீர் தேக்கத்தை வெளியேற்ற முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் வயிறு வீக்கம் மற்றும் செல்லுலைட் போன்றவை குறைகிறது. கூடுதலாக, ஆப்பிள் சிடர் வினிகர் உங்கள் எடை குறையவும் உதவுகிறது. கொழுப்பு குறைவதால் செல்லுலைட் பாதிப்பும் குறைகிறது.

1. ஒரு பங்கு ஆப்பிள் சிடர் வினிகருடன் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

2. தேவைப்பட்டால் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளவும்.

3. இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.

4. அரை மணி நேரம் அப்படியே விட்டு, பின்பு தண்ணீரால் கழுவவும்.

5. சிறந்த தீர்வுகள் கிடைக்கும்வரை ஒரு நாளில் இரண்டு முறை இதே வழிமுறையைப் பின்பற்றவும்.

இதற்கு மாற்றாக, ஆப்பிள் சிடர் வினிகருடன் சம பங்கு தண்ணீர் சேர்த்தும் பயன்படுத்தலாம்

1. ஆப்பிள் சிடர் வினிகருடன் சம பங்கு தண்ணீர் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.

2. பிறகு அந்த இடத்தை பிளாஸ்டிக் உறை கொண்டு மூடி, ஒரு வெதுவெதுப்பான டவலை ஒரு மணி நேரம் அந்த இடத்தின் மேல் வைத்துக் கொள்ளலாம்.

3. இறுதியாக அந்த உறையை கழற்றி வெதுவெதுப்பான நீரில் அந்த இடத்தைக் கழுவவும்.

4. செல்லுலைட் முழுவதும் மறையும் வரை தினமும் இதே முறையைப் பின்பற்றவும்.

மற்றொரு வழி

மற்றொரு வழி

1. இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு நாளில் இரண்டு முறை பருகுவதை வழக்கமாகக் கொள்ளலாம்.

7. பச்சைக் களிமண் :

1. அரை கப் கடற்பாசி மற்றும் அரை கப் பச்சைக் களிமண் , கால் கப் புதிதாக பிழிந்து வைக்கப்பட்ட எலுமிச்சை சாறு , மூன்று ஸ்பூன் வெந்நீர் , ஒரு ஸ்பூன் ஆர்கானிக் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.

2. இந்த கலவையை பாதிக்கபட்ட இடத்தில் சுழல் வடிவத்தில் தடவவும்.

3. ஒரு பிளாஸ்டிக் உறை போட்டு அந்த இடத்தை மூடிக் கொள்ளவும்.

4. அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

5. சரியான தீர்வு கிடைக்கும்வரை தினமும் ஒரு முறை இந்த வழிமுறையைப் பின்பற்றவும்.

MOST READ: தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க... இந்த நோய் உடனே தீரும்...

தண்ணீர் பருகுங்கள்

தண்ணீர் பருகுங்கள்

பல ஆண்டுகள் உடலில் படிந்த கழிவுகள் அனைத்தின் தேக்கம் தான் இந்த செல்லுலைட். தண்ணீர் பருகுவதால் உடலின் நச்சுகள் எளிதில் வெளியாகின்றன. இதனால் உங்கள் உடல் நீர்ச்சத்தோடு இருக்க முடிகிறது. இதனால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் காணப்படுகிறது.

தினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் பருகுவதால் உடலுக்குத் தேவையான நீர் கிடைக்கிறது. காலையில் எழுந்தவுடன் காபி, டீ பருகுவதற்கு பதில் முதல் வேலையாக தண்ணீர் பருகலாம்.

வெறும் தண்ணீர் பருகுவதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து பருகலாம். தண்ணீர் சத்து அதிகம் நிறைந்த உணவுகளான தர்பூசனி, வெள்ளரிக்காய், மற்றும் இலையுடைய பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

மேலே கூறிய குறிப்புகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி செல்லுலைட் பாதிப்புகளை விரட்டி அடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Get Rid of Cellulite in Thighs

Cellulite is the dimpled-looking skin that commonly occurs in the thigh region. It forms when fatty tissue deep in the skin pushes up against connective tissue. This creates the dimpled appearance that cellulite is infamous for. It’s estimated that more than 85 percent of all women 21 years and older have cellulite. It’s not as common in men.
Desktop Bottom Promotion