For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க மூக்கு இப்படிதான் இருக்கா? உங்களுக்கு என்னமாதிரி பிரச்சினை வரும் தெரியுமா?

செப்டோபிளாஸ்டி என்றால் என்ன, செப்டோபிளாஸ்டி பற்றிய அறிகுறிகள், செப்டோபிளாஸ்டி பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்பது பற்றி மட்டும் தான் இந்த கட்டரைத் தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

|

செப்டம் என்பது மூக்கில் உள்ள குருத்தெலும்பு. இந்த எலும்புச் சுவர் தான் மூக்கை இரண்டு நாசிகளாக பிரிக்கிறது. இது ஒரு பக்கத்திலிருந்து நகரும் போது செப்டமில் விலகல் ஏற்படுகிறது. சிலருக்கு பிறக்கும் போதே விலகிய செப்டம் இருக்கலாம். சிலருக்கு விபத்து காரணமாக மூக்கில் ஏற்படும் காயங்கள் விலகிய செப்டமை உருவாக்கலாம். இந்த மாதிரி விலகிய செப்டம் உடையவர்களுக்கு ஒரு மூக்குத் துவாரப்பாதை சிறியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு சுவாசிப்பதில் தடங்கல் ஏற்படக் கூடும். சரி இதை எப்படி சரி செய்யலாம் என்று பார்த்தால் அறுவை சிகிச்சை ஒன்றே சரியான வழி என்கிறார்கள் மருத்துவர்கள்.

Septoplasty

செப்டோபிளாஸ்டி என்ற அறுவை சிகிச்சை மூலம் மூக்குத் துவாரத்தில் உள்ள அடைப்பு மற்றும் விலகிய செப்டமை சரி செய்ய இயலும். அறுவை சிகிச்சை மூலம் செப்டமை நேராக்குவதன் மூலம் நீங்கள் தங்கு தடையின்றி எளிதாக சுவாசிக்க முடியும். சரி இதை எப்படி செய்கிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செப்டோபிளாஸ்டி என்றால் என்ன?

செப்டோபிளாஸ்டி என்றால் என்ன?

செப்டோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மூக்குத் துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நாள்பட்ட சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு, நாசல் பாலிப்ஸ் ரிமூவ் செய்வதற்கு, சுவாசப் பாதையில் அடைப்பு இருப்பவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதே மாதிரி மூக்கிலிருந்து இரத்தம் வடிபவர்களுக்கு கூட இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.

மூக்கில் அடைப்பு இருப்பவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்த அறுவை சிகிச்சையின் போது விலகிய செப்டமை நேராக்கி பழைய நிலைக்கு கொண்டு வருகிறார்கள். இதில் செப்டமை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் பழைய நிலையில் வைத்து பிக்ஸ் செய்து விடுகிறார்கள்.

MOST READ: ராமரே வந்து மண்டியிட்டு வழிபட்ட தமிழ்நாட்டு சிவன் கோவில் எது தெரியுமா?

செப்டோபிளாஸ்டி சிகிச்சை செய்யும் முறை

செப்டோபிளாஸ்டி சிகிச்சை செய்யும் முறை

அறுவை சிகிச்சை செய்யும் சில வாரங்களுக்கு முன்னரே சில மருந்துகள் எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். அஸ்பிரின், இபுஃப்ரோபென் மற்றும் மற்ற இரத்த அடர்த்தியை குறைக்கும் மாத்திரைகளை தவிருங்கள். ஏனெனில் அறுவை சிகிச்சையின் போது அதிகப்படியான இரத்தம் வெளியேறுவதை இதன் மூலம் தவிர்க்கலாம். எதாவது இரத்தக் கசிவு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

அறுவை சிகிச்சையின் போது நோயாளிக்கு அனஸ்தீசியா கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அறுவை சிகிச்சை செய்யப் போறப் பகுதி மரத்து போக வைக்கப்படுகிறது.

அறுவை சி‌கி‌ச்சைக்கு முந்தைய நாள் இரவு எந்த உணவும் எடுத்துக் கொள்ள கூடாது. ஏனெனில் அப்பொழுது தான் அனஸ்தீசியா கொடுக்கும் போது வாந்தி, குமட்டல் வராமல் இருக்கும்.

உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பரை உடன் இருக்க சொல்லலாம். மூக்கினுடையே போட்டோக்களை வெவ்வேறு கோணத்தில் இருந்து படம் பிடிக்கப்படுகிறது.

MOST READ: ஏ.எல்.விஜயக்கு ரெண்டாவது கல்யாணமாம்... பொண்ணு யார்னு தெரியுமா?

விளைவுகள்

விளைவுகள்

அதிகமான இரத்தக் கசிவு

அறுவை சிகிச்சை செய்த பிறகும் முன்னர் தோன்றிய அதே அறிகுறி தென்பட்டால்

செப்டம் திறந்து காணப்பட்டால்

மூக்கின் வடிவம் மாற்றம் பெற்று இருந்தால்

நுகரும் நறுமணத்தில் மாற்றம் தென்பட்டால்

மூக்கின் மேல் பகுதியில் உணர்ச்சியற்ற தன்மை இருந்தால்

மூக்கின் பகுதியில் இரத்தம் கட்டி இருந்தால்

இந்த மாதிரி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

கவனத்தில் வைக்க வேண்டியவை

மூக்கை ஊத வேண்டாம்

மூக்கை தேய்த்தால் போன்ற கடினமான செயல்களில் ஈடுபடாதீர்கள். இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகி இரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

தூங்கும் போது சற்று தலையை உயரமாக வைத்து உறங்குங்கள்.

தலைக்கு மேலாக ஆடையை கழற்றுவதை தவிருங்கள். இது மூக்கில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Everything You Need To Know About Septoplasty

A deviated septum occurs when the septum (the wall of cartilage and bone that divides the nose into two separate nostrils) moves to one side of the nose
Desktop Bottom Promotion