For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாயில இப்படி புண் அழற்சி வந்துச்சுனா சும்மா விட்றாதீங்க... அது இந்த நோய் வந்துடும்...

வாயின் ஓரங்களிலும் ஏற்படும் அழற்சியால் வலியால் புன்னகைப்பது என்பது முடியாத காரியம் ஆகி விடுகிறது. இந்த வாய் அழற்சி வலியோடு பார்க்க அருவருப்பையும் ஏற்படுத்தி விடும். இதனால் உங்களால் மற்றவர்கள் முன்னிலை

|

புன்னகை என்பது நமது முகத்திற்கு அழகுக்கு அழகு சேர்க்கும் விஷயமாகும். ஒரு ஆரோக்கியமான புன்னகையை உதிர்க்க வேண்டும் என்றால் அதற்கு நம் உதடுகளும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி இருப்பதில்லை. வாயின் ஓரங்களிலும் ஏற்படும் அழற்சியால் வலியால் புன்னகைப்பது என்பது முடியாத காரியம் ஆகி விடுகிறது.

Angular cheilitis

இந்த வாய் அழற்சி வலியோடு பார்க்க அருவருப்பையும் ஏற்படுத்தி விடும். இதனால் உங்களால் மற்றவர்கள் முன்னிலையில் இயல்பாகக் கூட இருக்க முடியாது. அதற்காகத்தான் இந்த புண்களை எளிதாக போக்க சில வீட்டு வைத்தியங்களை இங்கே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

வாயில் இருக்கும் உமிழ்நீர் வாயின் ஓரங்களில் தேங்கி பிளவுகளையும் புண்களையும் ஏற்படுத்துகிறது. அடிக்கடி உங்கள் உதடுகளை நாக்கால் வறுடும் பழக்கம் இருந்தால் அதை தவிருங்கள். இது தீவிர பாதிப்பை உண்டாக்கும்.

குளிர் காலத்தில் வறண்ட பருவநிலை காரணமாக கூட இந்த பிரச்சினை ஏற்படலாம்.

அழற்சி அல்லது எக்ஸிமா பாதிப்புகள் வாயின் ஓரங்களில் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

MOST READ: வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா? 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க?

யார் அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்?

யார் அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்?

மேல் உதடு தொங்குபவர்கள், உதடு ஓரங்கள் ஆழமான கோணங்களை கொண்டு இருந்தால் இந்த பிரச்சினை உண்டாகும்.

வாய் வெண்புண் கொண்டவர்கள்

கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் ஆன்டி பயாடிக் பயன்படுத்துபவர்கள் இதனால் பாதிப்படைகின்றனர்.

சென்ஸ்டிவ் சருமம் உள்ளவர்கள்

க்ரோன் நோய் உடையவர்கள்

பல் கட்டி இருப்பவர்கள்

புகைப் பிடிப்பவர்கள்

ரெட்டினாய்டு மருந்துகள் உட்கொள்பவர்கள்

டயாபெட்டீஸ், அனிமியா மற்றும் கேன்சர் உடையவர்கள்.

கண்டறிவது எப்படி

கண்டறிவது எப்படி

வாய் ஓரங்களில் வீக்கம், சிவந்து காணப்படுதல் போன்றவை வாய்ப்புண் அழற்சியின் அறிகுறியாகும். இந்த சிவந்த சருமம் ஒரு ஓரங்களில் அல்லது வாயின் இரு ஓரங்களிலும் காணப்படலாம்.

எரிச்சல், புண்கள் ஏற்படும். இரத்தம் கசிதல், பேட்ஜஸ், புண்கள், வலி, கொப்புளங்கள், அரிப்பு, சிவத்தல் போன்றவை ஏற்படும். வாய் வறண்டு போய் சாப்பிடக் கூட முடியாது.

தடுப்பது எப்படி

தடுப்பது எப்படி

இதை வருமுன்னே தடுப்பது நல்லது

நீர்ச்சத்துடன், ஈரப்பதத்துடன் உதடுகளை வைத்துக் கொள்ளுங்கள்

அடிக்கடி உதடுகளை எச்சியால் தடவுவதை தவிருங்கள்.

பெட்ரோலியம் ஜெல்லி அப்ளே செய்யுங்கள். சீக்கிரம் சரியாகி விடும்.

வாயின் ஓரங்களில் லேசான மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யும் போது வறண்ட பகுதி சரியாகலாம்.

டை மற்றும் நறுமணமான அழகு சாதனப் பொருட்களை உதடுகளில் அப்ளே செய்வதை தவிருங்கள். புண்கள் தீவிரமாக இருந்தால் ஸ்டீராய்டு க்ரீம்கள், ஆன்டி பயாடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

லிப் பாம் அல்லது களிம்புகளை பயன்படுத்தலாம். ஸ்டாபிலோகோகல் ஆண்டிபயாடிக் அல்லது மேற்பூச்சு மருந்துகளை பயன்படுத்தலாம்.

வாய்வழி பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள்

பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்

ஆன்டி செப்டிக் மருந்துகள்

ஊட்டச்சத்து மாத்திரைகள்

ஸ்டீராய்டு க்ரீம்கள்

ஊசிகள் அல்லது இம்பிளாண்ட்

பொட்டலினம் நச்சுகள்

MOST READ: வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் அடர்த்தியான எண்ணெய் என்பதால் இது நல்ல பலனை தருகிறது. இதன் ஆன்டி பாக்டீரியல் தன்மை வாய் ஓரங்களில் ஏற்பட்டுள்ள பூஞ்சை அழற்சியை போக்குகிறது.

பயன்படுத்தும் முறை

ஒரு காட்டன் பஞ்சில் சிறுதளவு விளக்கெண்ணெய்யை நனைத்து கொள்ளுங்கள். அதை பாதிக்கப்பட்ட வாய்ப் பகுதியில் தடவி 1/2 மணி நேரம் கழித்து கழுவுங்கள்.

கற்றாழை

கற்றாழை

இதன் அழற்சி எதிர்ப்பு பொருள், பூஞ்சை எதிர்ப்பு தன்மை, ஆன்டி செப்டிக் தன்மை வாய்ப் புண்ணை விரட்ட உதவியாக இருக்கும்.

பயன்படுத்தும் முறை

கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்து பிரிட்ஜில் வைத்து கூலாக்குங்கள். இப்பொழுது இந்த ஜெல்லை 15-20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

யோகார்ட்

யோகார்ட்

இதன் புரோபயோடிக் தன்மை சரும அழற்சியை எதிர்த்து போரிடுகிறது.

பயன்படுத்தும் முறை

தூங்கப் போவதற்கு முன் யோகார்ட்டை எடுத்து வாயின் ஓரங்களில் தடவுங்கள். அடுத்த நாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

இது ஒரு மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்பட்டு சரும வறட்சியை போக்குகிறது.

பயன்படுத்தும் முறை

பாதிக்கப்பட்ட இடத்தில் 15 நிமிடங்கள் இதை அப்ளே செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

MOST READ: உங்க ராசிக்கு எந்த திசையில இருந்து அதிர்ஷ்டம் வரப்போகுதுனு தெரிஞ்சிக்க இத படிங்க...

லிஸ்ட்ரைன்

லிஸ்ட்ரைன்

இதில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை உள்ளது.

பயன்படுத்தும் முறை

ஒரு காட்டன் பஞ்சில் சிறுதளவு லிஸ்ட்ரைன் எடுத்துக் கொள்ளுங்கள். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

மேற்கண்ட டிப்ஸ்கள் உங்கள் வாய்புண்ணுக்கு பை பை சொல்லி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Angular cheilitis: Causes, symptoms, treatment

Angular cheilitis is a skin condition that causes painful inflammation in one or both corners of your mouth,” says Dr. Sonia Batra, a dermatologist and co-host of the television show The Doctors. Batra estimates that angular cheilitis affects about 0.7% of the population, so while it's not exactly super common, it's not rare, either.
Story first published: Monday, May 13, 2019, 14:31 [IST]
Desktop Bottom Promotion