For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா? அப்போ இந்த பயிற்சியை தினமும் செய்தாலே போதும்..!

|

பெரிய பெரிய பிரச்சினைகளை எல்லாம் சர்வ சாதாரணமாக தீர்த்து விடும் நாம் தான் இந்த சின்ன தொப்பை மற்றும் உடல் எடை சார்ந்த பிரச்சினைகளை பெரிய அளவில் எடுத்து கொள்கிறேன். தொப்பை என்கிற பெயரை சொன்னாலே சிலருக்கு ஏதோ பெரிய வியாதியை போல தோன்றுகிறது. ஆனால், உண்மையில் இவை மிக சிறிய ஒன்று தான். இதற்கு மிக விரைவிலே தீர்வையும் நம்மால் கண்டறிய முடியும்.

தொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா? அப்போ இந்த பயிற்சியை தினமும் செய்தாலே போதும்!

ஒரு சில பயிற்சிகள், ஆரோக்கியமான டயட் உணவுகள் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்தாலே உடல் எடை மற்றும் தொப்பை பிரச்சினைக்கு கூடிய விரைவிலே தீர்வு கட்டி விடலாம். இதே பயிற்சிகளை தான் நம் முன்னோர்களும் கடைபிடித்து வந்தார்கள். எப்படிப்பட்ட பயிற்சிகளின் மூலம் உடல் எடை மற்றும் தொப்பையை 4 வாரங்களில் குறைக்க முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன்னோர்களின் முறை

முன்னோர்களின் முறை

இன்றைய நவீன காலத்தில் நாம் செய்கின்ற பல பயிற்சிகள் நம் முன்னோர்களின் வழியாகவே நமக்கு வந்தவை. இது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்ததால் தான் அன்றைய கால கட்டத்தில் நீண்ட ஆண்டுகள் நோய்கள் இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.

பயிற்சி #1

பயிற்சி #1

இது மிகவும் எளிமையான பயிற்சி முறை தான். இதை செய்வதற்கு முதலில் எழுந்து நின்று கால்களை அகற்றி வைத்து கொள்ள வேண்டும். அடுத்து, முதுகை முன்னோக்கி சாய்த்த படியே தரைக்கு அழுத்தத்தை கொடுக்கவும். கிட்டத்தட்ட நாற்காலி போன்ற நிலையில் 2 நிமிடம் வரை இருக்க வேண்டும்.

பயன்கள்

பயன்கள்

இந்த பயிற்சி முறையை செய்து வருவதால் முதுகு எலும்பு பாதிக்கப்படாமல் நீண்ட காலம் வலிமையாக இருக்கலாம். மேலும், கால், முதுகு, இடுப்பு, கழுத்து போன்ற பகுதிகளில் இனி உங்களுக்கு வலியும் ஏற்படாது.

MOST READ: உடலில் இந்த 8 அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக உயிருக்கு ஆபத்துண்டு!

பயிற்சி #2

பயிற்சி #2

இரண்டாவது பயிற்சியை ஆரம்பிக்க முதலில் குப்பற படுக்க வேண்டும். அடுத்து கால் விரல்களின் நுனி பகுதியைதரையில் படும்படி வைத்து கொண்டு, கைகளை 90 டிகிரியில் தரையில் அழுத்தம் தரும் படி வைக்க வேண்டும்.இந்த நிலையில் 1 முதல் 3 நிமிடங்கள் இருப்பது அவசியம்.

பயன்கள்

பயன்கள்

இவ்வாறு செய்வது உடல் முழுக்க ஆரோக்கியத்தை தரும். தொப்பையை குறைப்பதோடு உடல் எடையையும் இந்த பயிற்சி குறைத்து விடும். மேலும் கை, கால், தசை பகுதி, போன்ற பலவித உறுப்புகளும் வலிமை பெற்று விடும். நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க இந்த பயிற்சி முறை உங்களுக்கு உதவும்.

பயிற்சி #3

பயிற்சி #3

இந்த பயிற்சியானது பறவை மற்றும் நாயின் கோணத்தில் செய்ய வேண்டும். அதாவது, முதலில் முட்டி போட்டு கொண்டு, அதன் பின் ஒரு காலை மட்டும் பின்னோக்கி நீட்டி கொள்ள வேண்டும்.

இந்நிலையில் கைகளை தரையை நோக்கி அழுத்தம் கொடுத்த படி இருக்க வேண்டும். பிறகு ஒரு கையை மட்டும் நேராக நீட்ட வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இடது வலது என கை, மற்றும் கால்கள் மாறி இருக்க வேண்டும்.

பயன்கள்

பயன்கள்

இது மிக சிறந்த பயிற்சி முறையாகும். இதை தொடர்ந்து செய்து வருவதால் உடல் வலு பெறும். மேலும் தசைகள், எலும்புகள் போன்றவற்றில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. உடல் எடையை குறைக்கவும், தொப்பையின் பாதிப்பு இல்லாமல் வாழவும் இந்த பயிற்சி முறை உதவும்.

MOST READ: வெறும் 10 நொடிகள் இப்படி உட்காருந்திருந்தா, என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

பயிற்சி #4

பயிற்சி #4

இது பலருக்கும் தெரிந்த பயிற்சி முறை தான். அதாவது ஆங்கிலத்தில் புஷ் அப் என்று கூறுவார்கள். குப்பற படுத்து கொண்டு உடலை மேல் நோக்கி எழுந்தும், தரையில் படும்படியும் தொடர்ந்து செய்து வருவதே இந்த பயிற்சியாகும். இந்நிலையில் கை மற்றும் கால்களை தரையை நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பயன்கள்

பயன்கள்

தொப்பையை குறைக்க மிக சிறந்த பயிற்சி இது தான். தினமும் 10 முதல் 20 புஷ் அப்ஸ்களை செய்து வந்தால் தொப்பை பிரச்சினைக்கு பாய் பாய் சொல்லி விடலாம். அத்துடன் உங்களின் உடல் எடையையும் குறைத்து விடலாம்.

மேற்சொன்ன பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் மட்டுமே 4 வாரங்களில் உடல் எடை மற்றும் தொப்பைக்கு தீர்வு கட்ட இயலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Tricks That Can Transform Your Entire Body in One Month

Here we listed some of the tricks that can helps to transform your body in month.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more