For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடல்வால் பிரச்சினைக்கு இனி அறுவை சிகிச்சை வேண்டாம்... இந்த 10 பொருள்களை சாப்பிட்டாலே போதும்

குடல் வால் அழற்சி என்பது நாள்பட்ட அழற்சி நோயாகும். இந்த குடல் வால் என்பது பெருங்குடலில் இருந்து விரல் போல் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு பகுதி ஆகும். இந்த வால் பகுதியில் அழற்சி ஏற்பட்டு பெரும் பாதி

|

குடல் வால் அழற்சி என்பது நாள்பட்ட அழற்சி நோயாகும். இந்த குடல் வால் என்பது பெருங்குடலில் இருந்து விரல் போல் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு பகுதி ஆகும். இந்த வால் பகுதியில் அழற்சி ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த குடல் வால் அழற்சி பொதுவாக 10-30 வயதை அடைந்த மக்களுக்கு ஏற்படுகிறது அதிலும் இது பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது. அமெரிக்க போன்ற நாடுகளைப் பொருத்த வரை 250,000 மக்கள் குடல் வால் அறுவை சிகிச்சை செய்துள்ளனர் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது.

appendicitis

குடலில் இருக்கும் கிருமிகளால் இந்த குடல் வாலில் நோய்த்தொற்று ஏற்பட்டு அழற்சி ஏற்படுகிறது. அந்த பகுதி அப்படியே வீக்கமடைந்து, சீழ் உருவாகிறது. லிம்போயிட் நுண்குழாய்கள், குடல் புழுக்கள், மற்றும் கட்டிகள் போன்றவையும் காரணமாகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

அடிவயிற்றில் கீழ் பகுதியில் வலது பக்கம் வலி உண்டாகுதல், பசியின்மை, குமட்டல், வாந்தி, வயிற்று போக்கு, மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை, அடிவயிற்று வீக்கம், காய்ச்சல் போன்றவை ஏற்படும்.

சரியான நேரத்தில் சிகச்சை அளிக்கா விட்டால் குடல் வால் வெடித்து விட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. சரியான அறுவை சிகிச்சை மூலம் குடல் வாலை நீக்கி விடலாம். இந்த குடல் வால் அழற்சியை சில எளிய வீட்டு பக்குவம் கொண்டும் சரி செய்யலாம். அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

MOST READ: கர்ப்பமாக இருக்கும்போது தொண்டையில் வலி வந்தால் என்ன அர்த்தம்? உடனே என்ன செய்யவேண்டும்?

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் குடல் வால் அழற்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது அந்த பகுதியில் உள்ள அடைப்பை நீக்கி வீக்கத்தை போக்கி அழற்சியை குறைக்கிறது. எனவே இதை நீங்கள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி குடல் வால் அழற்சியை யும் போக்கி விடும்.

பயன்படுத்தும் முறை

ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் யை ஊற்றி கொள்ளுங்கள்.

பழைய துண்டின் மீது படுத்து கொண்டு அந்த எண்ணெய் துணியை உங்கள் அடிவயிற்றில் போட்டு கொள்ளுங்கள்.

இதை வாரத்திற்கு 3 முறை என 2-3 மாதங்கள் செய்து வாருங்கள். விளக்கெண்ணெய் வயிற்றின் வழியாக இறங்கி குடல் வால் அழற்சியை போக்கி விடும்.

பூண்டு

பூண்டு

பூண்டு ஒரு அழற்சி எதிர்ப்பு பொருளாக உள்ளது. இது அழற்சியை யும் வலியையும் குறைக்கிறது.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2-3 பூண்டு பற்களை சாப்பிட்டு வாருங்கள். அதே மாதிரி உங்கள் உணவிலும் பூண்டை சேர்த்து கொள்ளுங்கள்

பூண்டு மாத்திரைகளை கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுகி கொள்வது நல்லது.

இஞ்சி

இஞ்சி

இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை அப்பண்டிஸ் பிரச்சினைக்கு உதவுகிறது. இது வலி மற்றும் அழற்சியை போக்குகிறது. வாந்தி, குமட்டல் போன்றவற்றை போக்குகிறது.

எனவே தினமும் 2-3 தடவை இஞ்சி டீயை குடித்து வாருங்கள். 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சியை கொதிக்கின்ற நீரில் போட்டு 5-10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அதே மாதிரி அடிவயிற்று பகுதியை இஞ்சி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.

இஞ்சி மாத்திரைகளை எடுப்பதற்கு முன் மருத்துவரை அணுகி கொள்ளுங்கள்.

MOST READ: இப்படி உருளைக்கிழங்குலயே ரோஜா செடி வளர்க்கலாம் தெரியுமா? ரொம்ப ஈஸி... ட்ரை பண்ணிப்பாருங்க

வெந்தய விதைகள்

வெந்தய விதைகள்

வெந்தய விதைகள் குடல் வால் அழற்சிக்கு சிகச்சை அளிக்கிறது. இது குடலில் தேங்கியுள்ள தேவையற்ற கசடுகளை வெளித் தள்ளி பிரச்சினையை குறைக்கிறது. மேலும் அழற்சியால் ஏற்படும் வலியை குறைக்கிறது.

1 கப் நீரில் 2 டீ ஸ்பூன் வெந்தய விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் அந்த நீரை கொதிக்க விடவும். அதை வடிகட்டி கொள்ளுங்கள்.இந்த நீரை வெதுவெதுப்பாக பயன்படுத்தி வந்தால் அழற்சியின் தீவிரம் குறையும்.

அதே மாதிரி இந்த வெந்தய விதைகளை உணவில் சேர்த்து வந்தாலும் அழற்சி சரியாகி விடும்.

லெமன்

லெமன்

லெமன் குடல் வால் அழற்சியை போக்க சிறந்த பொருளாகும். இந்த சிட்ரஸ் ஜூஸ் வயிற்றில் ஏற்படும் வலி மற்றும் சீரணமின்மை யை சரி செய்கிறது. இதிலுள்ள விட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பயன்படுத்தும் முறை

1 லெமன் ஜூஸில் இருந்து சாற்றை பிழிந்து கொள்ளுங்கள்

அந்த பழச்சாற்றுடன் கொஞ்சம் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்

இதை நன்றாக கலக்கவும். இதை சில வாரங்களுக்கு செய்து வாருங்கள்.

துளசி

துளசி

குடல் வால் அழற்சி இருப்பவர்களுக்கு லேசான காய்ச்சல் இருக்கும். இது உடலில் உள்ள வெப்பநிலையை குறைக்கிறது. மேலும் சீரணமின்மை, வாய்வுத் தொல்லை பிரச்சினையை சரி செய்கிறது.

எனவே குடல் வால் அழற்சியால் ஏற்படும் காய்ச்சலை குறைக்க 1 கப் நீரில் 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்த்து பாதியளவு தண்ணீர் வரும் வரை வற்ற வையுங்கள். அதை வடிகட்டி அதனுடன் தேன் கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு 2 தடவை என குடித்து வாருங்கள்.

வாய்வுத் தொல்லை நீங்க 5 துளசி இலைகளை கசக்கி 1/4 டீ ஸ்பூன் கடல் உப்பு, கருப்பு மிளகுத்தூள் 2-3 டேபிள் ஸ்பூன் யோகார்ட் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதை தினமும் இரண்டு தடவை சாப்பிட்டு வாருங்கள். 3-4 துளசி இலைகளை சாப்பிட்டு வாருங்கள் குடல் வால் அழற்சி அறிகுறிகள் குறைந்து விடும்.

MOST READ: இந்த பேப்பரை காலில் இப்படி சுற்றி வைத்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா

புதினா

புதினா

புதினா குடல் வால் அழற்சிக்கு மற்றொரு மருந்தாகும். இது வாய்வு, வாந்தி, குமட்டல் போன்றவை குணப்படுத்துகிறது. மேலும் குடல் வால் வலியை குறைக்கிறது.

1 டேபிள் ஸ்பூன் புதினா இலைகளை தண்ணீரில் போட்டு 5-10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி தேன் சேர்த்து கொள்ளுங்கள். இதை சில வாரங்களுக்கு என 2-3 தடவை குடித்து வரவும்.

புதினா இலைகளை வாயில் போட்டு மென்று வந்தால் குமட்டல், வாந்தி போன்றவை இருக்காது.

ஜின்செங்

ஜின்செங்

ஜின்செங்கின் அழற்சி எதிர்ப்பு தன்மை அழற்சி மற்றும் வலியை போக்குகிறது.

பயன்படுத்தும் முறை

6-8 ஜின்செங் துண்டுகளை வெட்டி 3 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க விடுங்கள்

15 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து காய்ச்சுங்கள்.

தேன் சேர்த்து கலந்து வடிகட்டி கொள்ளுங்கள்.

இந்த டீயை ஒரு நாளைக்கு இரண்டு முறை என சில மாதங்கள் குடித்து வாருங்கள் நன்மை கிடைக்கும்.

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து உணவுகள்

மலச்சிக்கல் குடல் வால் அழற்சியை ஏற்படுத்த பெரிதும் காரணமாகிறது. எனவே நார்ச்சத்து அதிகமான உணவுகளை எடுத்து வருவது நல்லது.

2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இண்டர்நேஷனல் ஃபுட் சைன்ஸ் நாளிதழ் படி நார்ச்சத்து குறைந்த உணவுகள் குடல் வால் அழற்சியை ஏற்படுத்துகிறது

நார்ச்சத்து அதிகமான உணவுகளான பீன்ஸ், வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட், காரட், பிரக்கோலி, ப்ரவுன் ரைஸ், கோதுமை, பூசணிக்காய் விதைகள், சூரிய காந்தி விதைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து கொள்ளுங்கள்.

நார்ச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது மருத்துவரை அணுகுவது நல்லது.

தண்ணீர் குடியுங்கள்

தண்ணீர் குடியுங்கள்

தினமும் தண்ணீர் குடிப்பது உங்கள் குடல் வால் அழற்சியை போக்கும். போதுமான தண்ணீர் மலச்சிக்கல் போன்றவற்றை போக்கி உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

வெதுவெதுப்பான நீர் குடல் வால் அழற்சியை போக்க பெரிதும் பயன்படுகிறது. எனவே தினசரி நிறைய தண்ணீர் குடியுங்கள். பழங்கள், காய்கறிகள் ஜூஸ் எடுத்து கொள்ளுங்கள்.

ஆல்கஹால், காஃபைன் அதிகமான உணவுகள் வேண்டாம்.

MOST READ: எப்படி இருந்த ஊர்லாம் இப்ப எப்படி மாறியிருக்குனு நீங்களே பாருங்க... புகைப்படங்கள் உள்ளே...

டிப்ஸ்கள்

டிப்ஸ்கள்

ஒரு கிளாஸ் பட்டர் மில்க்கில் கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு நாளைக்கு 2-3 தடவை குடித்து வர வேண்டும்.

மலச்சிக்கலை தவிர்க்க முற்படுங்கள்

காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து உங்கள் உணவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்

பால் பொருட்கள், சர்க்கரை போன்ற சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை தவிருங்கள்

விட்டமின் பி, சி, இ போன்றவை குடல் வால் அழற்சி மாத்திரைக்கு பயன்படுகிறது. எந்த மாத்திரையை எடுப்பதற்கு முன்பும் மருத்துவரை அணுகுவது நல்லது.

குடல் வால் அழற்சி இருக்கும் போது அடிவயிற்றில் அழுத்தம் தரக் கூடிய உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள். சில வாரங்களுக்கு உடற்பயிற்சியை மேற்கொள்ளாதீர்கள்.

இருமல், தும்மல் மற்றும் சிரிக்கும் போது அடிவயிற்றில் ஏற்படும் வலியை குறைத்து கொள்ளுங்கள்

அவசர அவசரமாக வேலையில் ஈடுபடாதீர்கள்.

நீங்கள் களைப்பாக இருக்கும் போது ஒவ்வொரு இரவும் நன்றாக தூங்குங்கள்.

மேற்கண்ட முறைகள் உங்கள் குடல் வால் அழற்சியை குறைக்க பெரிதும் பயன்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 home remedies for appendicitis

Appendicitis is an inflammation of the appendix, which can be acute or chronic. The appendix is a small protrusion of the colon, located in the lower right quadrant of the abdomen.Here are the top 10 home remedies for appendicitis. We use castor oil, lemon, ginger, fenugreek seeds and so on.
Story first published: Wednesday, March 13, 2019, 13:19 [IST]
Desktop Bottom Promotion