Latest Updates
-
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
இந்த அறிகுறிலாம் இருக்கா உங்களுக்கு?... அப்போ தைராய்டு வர வாய்ப்பிருக்கு கவனமா இருங்க...
நமது உடலின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுவது தைராய்டு சுரப்பி தான். இது நமது கழுத்து பகுதியில் பார்ப்பதற்கு பட்டாம்பூச்சி வடிவில் அமைந்து இருக்கும்.
நமது உடலின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுவது தைராய்டு சுரப்பி தான். இது நமது கழுத்து பகுதியில் பார்ப்பதற்கு பட்டாம்பூச்சி வடிவில் அமைந்து இருக்கும்.

இதிலிருந்து சுரக்கப்படும் தைராய்டு ஹார்மோன் தான் உடலின் மெட்டா பாலிசத்திற்கும் பல்வேறு உடலுறுப்புகள் செயலாக்கத்திற்கும் உதவுகிறது.

தைராய்டு சுரப்பி
இந்த சுரப்பி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. உடல் செல்களின் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் ஹார்மோனை சுரக்கிறது. எனவே இந்த சுரப்பு சரி வர நடைபெற வில்லை என்றால் நமது உடல் மிகவும் சோர்வுற்று வீக்காக மாறி விடும்.
இந்த தைராய்டு சுரப்பி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரந்தால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அவற்றின் அறிகுறிகளை பற்றி இப்பொழுது காணலாம்.

எடையில் மாற்றம்
எடை இழப்பு அல்லது அதிகரிப்பு தைராய்டு பிரச்சினையின் முக்கியமான அறிகுறியாகும். திடீரென எந்த காரணமும் இல்லாமல் உடல் எடை கிடுகிடுவென எகிறும். சிலருக்கு உடல் எடை மிக வேகமாகக் குறையவும் ஆரம்பிக்கும்.

மன அழுத்தம், அனிஸ்சிட்டி
நீங்கள் மன அழுத்தம் மற்றும் அனிஸ்சிட்டி போன்ற பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தால் தைராய்டு பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் மன அழுத்தமும் தைராய்டு நோயும் கைகோர்த்த வண்ணம் உள்ளது.

நகங்கள் உடைத்தல், வறண்ட கூந்தல் மற்றும் சருமம்
நீங்கள் தைராய்டு பிரச்சினையில் இருந்தால் நகங்கள் உடைதல், வறண்ட கூந்தல் மற்றும் சருமம் ஏற்படும். முடி உதிர்தல் மற்றும் முடி உடைதல் தைராய்டு பிரச்சினையில் உள்ள முக்கிய பிரச்சனை ஆகும். ஏன் புருவத்தின் வெளிப்புற முடிகளில் கூட இழப்பை சந்திக்கலாம்.

மெட்டா பாலிக் பிரச்சினை
மலம் வெளியேறுவதில் எரிச்சல், மலச்சிக்கல் மற்றும் மெட்டா பாலிக் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மலச்சிக்கல் பிரச்னை இருப்பதற்கு செரிமானக் கோளாறு என்பது மட்டுமே காரணமாக இருக்கக்கூடாது. மலச்சிக்கலுக்கு காரணமாக இருப்பது தைராய்டு சுரப்பியில் உண்டாகும் பிரச்னை கூட காரணமாக இருக்கலாம்.

சோம்பல்
ரொம்ப களைப்பாக தென்படுவீர்கள். இதுவும் தைராய்டு பிரச்சினை இருக்க அறிகுறிகளில் ஒன்று. சிலர் அடிக்கடி சோம்பலாக உணர்வதுண்டு. எந்த சின்ன வேலையை செய்தாலும் அதில் மிக வேகமாக சோர்வடைந்து விடுவார்கள்.

அதீத குளிர் மற்றும் வெப்பம்
ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் உடம்பில் அதிகப்படியான வெப்பம் மற்றும் குளிரை சந்திப்பார்கள். லேசாக குளிர் அடித்தாலும் அதிகமாக குளிரை உணர்வார்கள்.

மூட்டு வலி
மூட்டுகள் மற்றும் தசைகளில் வலிகள் ஏற்படும். இது அப்படியே வளர்ந்து கை கால்களில் நமநமப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும். மூட்டுவலி வருவது வெறும் கால்சியம் குறைபாட்டால் என்று மட்டும் நினைத்து தினமும் 2 கிளாஸ் பால் குடித்துக் கொண்டிருப்போம். ஆனால் அந்த மூட்டுவலிக்குப் பின்னால் இப்படியொரு காரணமும் உண்டு.

மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மை
பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை இருந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். அதிகமான இரத்த போக்கு ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறியாகும். குறைந்த இரத்த போக்கு ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறியாகும்.

இதர பிரச்சினைகள்
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
படபடப்பு
முறையற்ற மாதவிடாய் சுழற்சி
வெப்பத்தை தாங்க முடியாமல் இருப்பது
எரிச்சல்
அசாதாரண வியர்வை
நடுக்கம்
தூக்கமின்மை
பசி அதிகரித்தல்

அபாயம்
இந்த தைராய்டு பிரச்சினையை கண்டு கொள்ளலாமல் விட்டு விட்டால் தீவிர பிரச்சினைகளுக்கு இழுத்து சென்று விடும். தைராய்டு நோய் அப்படியே படி படிப்படியாக வளர்ந்து இதயம் மற்றும் மற்ற உடலுறுப்புகளை பாதிக்கத் தொடங்கி விடும். எனவே மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது நல்லது. இது உங்களையும் உங்கள் உடலையும் பாதுகாக்கும் செயலாக அமையும்.



Click it and Unblock the Notifications