Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
முழங்கால் பக்கத்துல இப்படி இருந்தா அது எந்த புற்றுநோயின் அறிகுறி தெரியுமா? கவனமா இருங்க...
மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்றான லிப்போசர்காமா புற்றுநோய் பற்றியும் அதற்குரிய அறிகுறிகள் பற்றியும் இங்கே விளக்கமாகக் காணலாம்.
லிப்போசர்காமா என்பது ஒரு அரிதான திசுக்களில் வரும் புற்று நோயாகும். இது கொழுப்பு திசுக்களில் ஏற்படுகிறது. இந்த வகை புற்றுநோய் உடம்பில் எந்த பாகங்களில் வேண்டும் என்றாலும் வரும். இருப்பினும் குறிப்பாக தொடைகள், அடிவயிற்று பகுதியை அதிகமாக தாக்கக் கூடியது. இந்த புற்றுநோய் செல்கள் தொடை, கால்கள், அடிவயிறு, முழங்காலுக்கு பின்புறம் மற்றும் ரெட்ரோ பெட்ரியோனிம் பகுதிகளில் உள்ள இணைப்புத் திசுக்களை பாதிக்கக் கூடியது. இந்த மென்மையான திசு புற்றுநோய், சருமத்தை கூட பாதிப்படைய செய்யும் மேலும் புற்று நோய் செல்கள் வளர்ச்சி அடைந்து பெரும் பாதிப்பை உண்டு பண்ணுகிறது.

இதை மைக்ரோஸ்கோப் வழியாக பார்க்கும் போது கொழுப்பு செல்கள் மீது மென்மையான சர்காமா திசுக்கள் கண்ணாடி போல் காணப்படுகின்றன. இந்த லிப்போசர்காமா 40-60 வயதை உடையவர்களை அதிகளவில் பாதிக்கிறது. இருப்பினும் இது எல்லா வயதினரையும் பாதிக்க கூடிய ஒரு புற்றுநோய். டீன்ஏஜ் குழந்தைகளைக் கூட இது பாதிக்க வல்லது.

லிப்போசர்காமா வின் தன்மை
இது வலியில்லாதது, மெதுவாக நமக்கே தெரியாமல் வளரக் கூடியது. இதன் கட்டிகள் அல்சரரேட் இல்லாத ஒன்றாக இருந்தால் கூட வேகமாக வளரக் கூடியது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். லிப்போசர்காமா சப்மியூக்கோஸல் அல்லது சப்க்யூட்டனிஸில் கொழுப்பில் வளராமல் ரெம்ப ஆழமான ஸ்ட்ரோமாவில் வளரக் கூடியது. இயற்கையிலேயே வீரியம் மிக்கது, உடலுறுப்புகளில் லிப்போசர்காமா எளிதாக பரவக் கூடியது.

தடுப்பது எப்படி
லிப்போசர்காமா வருவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் ஆரம்ப காலத்திலயே இதைக் கண்டறிந்து அதன் வளர்ச்சியை தடுப்பது நல்லது. நீங்கள் சீக்கிரம் சிகச்சை எடுக்காவிட்டால் இந்த புற்றுநோய் செல்கள் சுற்றியுள்ள திசுக்களையும் அழித்து உயிருக்கே உலை வைத்து விடும்.

மையாக்ஸ்டு (அ) ரவுண்ட் செல் லிப்போசர்காமா
இது இரண்டாவதாக பொதுவாக காணப்படும் சர்காமா ஆகும். இு 30 - 35% வரை காணப்படும் புற்று நோய் வகையாகும். இதன் புற்று நோய் செல்கள் பார்ப்பதற்கு நீள்வட்ட அல்லது வட்ட வடிவில் காணப்படும். இந்த வகை சர்காமா பொதுவாக டீன்ஏஜ் குழந்தைகளை குறி வைத்து தாக்க கூடியது.

பிலோமோர்ஃபிக் லிப்போசர்காமா
இது ரொம்ப அரிதான ஹெட்ரோஜெனியஸ் வகையைச் சார்ந்த புற்று நோயாகும். இதன் புற்றுநோய் செல்களை மைக்ரோஸ்கோப் வழியாக பார்க்கும் போது இயல்பான செல்களை விட வித்தியாசமாக காணப்படும். இது இயற்கையாகவே வேகமாக வளரக் கூடியது. இதன் மென்மையான திசுக்கள் மேல்புறம் மற்றும் கீழ்புறம் வளரக் கூடியது.

டி-டிவரைன்ஸிடேட்டேடு லிப்போசர்காமா
டி-டிவரைன்ஸிடேட்டேடு லிப்போசர்காமா ஒரு உயர்வகை புற்று நோயாகும். இது அரிதாக வரக்கூடியது. இது வெல் டிவரைன்ஸிடேட்டேடு லிப்போசர்காமா செல்கள் வளர்ச்சி அடைந்து உயர்வகை செல்களாக மாறும் போது வரக் கூடியது.

லிப்போசர்காமாவின் அறிகுறிகள்
இந்த வகை புற்று நோயின் ஆரம்ப அறிகுறிகள் சரியாக தென்படாது. புற்றுநோய் செல்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்த பிறகே இதை கண்டறிய இயலும்.
இந்த புற்றுநோய் நோயாளிகள் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படுவதில்லை. மாறாக இந்த புற்றுநோய் செல்கள் மெதுவாக வளர்ச்சி அடைந்து வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

உடல் பாகங்களில் ஏற்படும் அறிகுறிகள்
கால்கள் மற்றும் கைகள்
வீக்கம்
வலி
கால்கள் பலவீனமாகுதல்
சருமத்திற்கு அடியில் திசுக் கட்டிகள் வளர்ச்சி அடைதல்
அடிவயிற்று பகுதி
அடிவயிற்றில் வீக்கம்
அடிவயிற்றில் வலி
மலச்சிக்கல்
இரத்தம் கலந்து மலம் கழித்தல்
சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை
உடல் எடை அதிகரித்தல்
வயிறு வீக்கம்

காரணங்கள்
இது ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் மருத்துவர்களுக்கே தெளிவாக தெரியவில்லை. டி. என். ஏ வில் ஏற்படும் மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று அவர்களின் ஆராய்ச்சி கூறுகிறது. இருப்பினும் இது தெளிவான கருத்தாக இல்லை எனலாம்.
லிப்போசர்காமா நமது உடலில் ஏற்படும் தவறுகளால் ஏற்படுகிறது. கொழுப்பு செல்களில் ஏற்படும் மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. கொழுப்பு செல்களின் வேகமான இந்த மாற்றம் மரபணு பிறழ்ச்சி யை உண்டாக்கி வேகமாக புற்றுநோய் செல்களை வளரச் செய்கிறது.

கண்டறிதல்
இதை முன்னரே கண்டறிந்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளைக் கொண்டு மருத்துவர் கீழ்க்கண்ட பரிசோதனைகளை மேற்கொள்ளுவார்.

உடல் பரிசோதனை
இந்த புற்றுநோயைக் கண்டறிய படிப்படியான உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பரிசோதனையின் போது மருத்துவர் உங்கள் புற்றுநோய் கட்டியின் விகிதத்தை காண்பார்.கட்டி 5 செ. மீக்கு அதிகமாக இருந்தால் அதை அவர் உறுதி செய்கிறார்.

ஸ்கேன் பரிசோதனை
ஸ்கேன் பரிசோதனை மிகச் சிறந்த உடல் பரிசோதனை ஆகும். எனவே இந்த புற்றுநோய் கட்டிகளை கண்டறிய x-ray, CT ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.

பயோப்ஸி
இந்த பரிசோதனையின் போது மருத்துவர் உங்கள் உடலில் உள்ள திசுப்பகுதியை சிறுது எடுத்து பரிசோதனை செய்வார். அறுவை சிகிச்சை மூலமோ அல்லது ஊசியின் மூலமோ இதைச் செய்வார்.

ஆய்வுக் கூட பரிசோதனை
ஆய்வுக் கூட பரிசோதனை புற்றுநோய் செல்களின் ஆழத்தை கண்டறிய உதவுகிறது. பேத்தாலாஜிஸ்ட் இரத்த பரிசோதனை, மாலிக்குலார் ஜெனிடிக் பரிசோதனை, சைட்டோஜெனிக் ஆய்வு, இம்பினோஹிஸ்டோகெமிஸ்ட்ரி மற்றும் ப்ளூரோசென்ஸ் போன்ற எண்ணற்ற பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.

சிகிச்சைகள்
புற்று நோய் கட்டிகள் அமைந்திருக்கும் இடம், வடிவம் மற்றும் தீவிரம் இவற்றை பொருத்து இதன் சிகிச்சைகள் வேறுபடுகின்றன.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாகும். இதன் ப்ரைமரி மற்றும் பொது அறுவை சிகிச்சை கட்டியை முற்றிலும் அகற்ற உதவுகிறது. அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் மற்ற பாகங்களுக்கு பரவாமல் தடுக்கலாம். அந்த பகுதியை முற்றிலுமாக அகற்றுவது ஒரு சிறந்த தீர்வாகும். கால், கைகளில் ஏற்படும் போது அதை அகற்றுவது நல்லது.அடிவயிற்று லிப்போசர்காமாவிற்கு அறுவை சிகிச்சை வித்தியாசமாக அமையும்.
சில தீவிர நோயாளிகளுக்கு உறுப்புகளில் புற்றுநோய் படர்ந்து அங்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது.

கதிரியக்க தெரபி
சக்தி வாய்ந்த எக்ஸ்ரே மற்றும் புரோட்டான்ஸ் போன்ற கதிரியக்க தெரபி மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கலாம். ஆனால் இந்த சிகச்சை தோல்வி அடைந்தால் மறுபடியும் கேன்சர் செல் வளர வாய்ப்புள்ளது. இந்த கதிரியக்க சிகிச்சை புற்றுநோய் செல்களை சுருக்கி எளிதாக மருத்துவர்கள் அதை அகற்ற உதவுகிறது.

கீமோதெரபி
இந்த சிகச்சையில் புற்றுநோய் செல்களை அழிக்க மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த சிகச்சை முழுத் தீர்வு தரும் என்று சொல்ல முடியாது. திரும்பவும் அவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அபாய விளைவுகள்
லிம்போடிக் மண்டலம் பாதிப்படைதல்
அடிவயிற்றில் அல்லது மற்ற பகுதிகளில் கதிரியக்க பாதிப்பு ஏற்படுதல்
மரபணு சார்ந்த புற்று நோய், நியூரோஃபிரோரோமாசிஸ் ஏற்படுதல்
டயாக்சின், வினைல் குளோரைடு போன்ற கெமில்களால் புற்றுநோய் ஏற்படுதல்.

லிப்போசர்காமா vs லிப்போமா
லிப்போசர்காமா மற்றும் லிப்போ இரண்டும் ஒன்று தான் என்ற தவறான கருத்து உள்ளது. அதாவது லிப்போமா படிப்படியாக வளர்ச்சி அடைந்து லிப்போசர்காமா என்ற புற்றுநோயாக வளர்ந்து விடுகிறது. இந்த இரண்டு நோய்களும் வித்தியாசமானவை. ஆனால் இயற்கையாக சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications











