அன்னாசி, எள், பப்பாளி தவிர வேற என்ன சாப்பிட்டா உடனே மாதவிடாய் வரும்?

மாதவிடாயை இயற்கையாகத் தூண்டக்கூடிய சில உணவுகளை இங்கே பரிந்துரைத்துள்ளோம். அதைப் பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் மாதவிடாயை சரிசெய்யலாம்.

By Suganthi Rajalingam

பெண்கள் கருவுறுதலில் மாதவிடாய் சுழற்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் சுழற்சியால் கருவுறுதலில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Top Foods for Induce Menstruation

மேலும் பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் போன்ற பிரச்சினைகளையும் அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. மாதவிடாய் தள்ளிப் போக அல்லது முன் கூட்டியே ஏற்பட ஹார்மோனில் ஏற்படும் மாற்றமே காரணமாக அமைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய்

மாதவிடாய்

சில சமயங்களில் மன அழுத்தம், அதிக சாப்பாடு அல்லது வயிற்றில் ஏற்படும் அழுத்தம் போன்றவை முறையற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்துகிறது. இந்த முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சில மருந்துகள் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மூலம் சரி செய்யலாம். அப்படி இல்லையென்றால் நமது உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றுவதன் மூலம் இதை ஒழுங்குபடுத்தலாம்.

உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளல், தினசரி உடற்பயிற்சி என்று மேற்கொள்ளுவதன் மூலம் உங்கள் முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்யலாம். சில உணவுகளும் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.

மாதவிடாய் சுழற்சி சரியாக அமைய வேண்டும் என்றால் பெண்களின் இனப்பெருக்க மண்டலமும் ஆரோக்கியமாக அமைய வேண்டும். இதற்கு சில வகையான உணவுகள் மாதவிடாய் சுழற்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

காபி

காபி

காபியில் உள்ள காஃபைன் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பை தூண்டுகிறது. இதனால் மாதவிடாய் முன்னதாக ஏற்பட வழி வகை செய்கிறது. மேலும் காஃபைன் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் வலியை குறைக்கிறது. இதை டாக்டர் குப்தா அவர்கள் கூறுகிறார். அது மட்டுமல்லாமல் காபி தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்சினைகளையும் சரி செய்யக் கூடியது.

நட்ஸ்

நட்ஸ்

பாதாம் பருப்பு மற்றும் வால்நட் போன்றவை மாதவிடாய் சுழற்சிக்கு மிகவும் சிறந்தது. இதில் நிறைய நார்ச்சத்துகள் மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. இவை உடம்பில் சூட்டை உண்டாக்கி மாதவிடாய் சுழற்சியை சரி செய்கிறது. எனவே மாதவிடாய் சுழற்சிக்கு முன்னதாக ஒரு கைப்பிடியளவு நட்ஸ் எடுத்து வாருங்கள். இது கருவுறுதலுக்கும் உதவி செய்யும்.

பழங்கள்

பழங்கள்

பப்பாளி பழத்தில் கரோட்டீன் என்ற பொருள் உள்ளது. இது ஈஸ்ட்ரோஜன் சுரப்பை உருவாக்கி மாதவிடாய் சுழற்சியை சீக்கிரமாக ஏற்படுத்துகிறது. அன்னாசி பழத்தில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது. இது பெண்களின் இடுப்பு பகுதியில் சூட்டை உண்டாக்கி கருப்பையை சுருங்கச் செய்து சரியான முறையில் மாதவிடாயை வரச் செய்கிறது.

மாம்பழமும் விட்டமின் சி கொண்டு இருப்பதால் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரித்து புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனை குறைக்கிறது. இது தான் கருப்பை சுருங்குவதற்கும் மாதவிடாய் ஏற்படவும் காரணமாக அமைகிறது.

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழம் இயற்கையாகவே உடலுக்கு சூட்டை கொடுக்க கூடியது. அதனால் தான் குளிர் காலங்களில் இதை உண்ண சொல்கின்றனர். வெதுவெதுப்பான பேரீச்சம்பழம் கலந்த பாலை உண்டு வந்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி குறையும். மேலும் உங்கள் இனப்பெருக்க மண்டல ஆரோக்கியத்திற்கும், மாதவிடாய் சுழற்சிக்கும் உதவுகிறது.

வெல்லம்

வெல்லம்

குளிர்காலத்தில் உடம்பை சூடாக வைக்க வெல்லம் பயன்படுகிறது. இதுவும் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் வேலையை செய்கிறது.

மாதவிடாய் சுழற்சியின் போது வெல்லம் சாப்பிட நிறைய டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் இரத்த போக்குக்கு உதவுகிறது. எனவே மாதவிடாய் காலங்களில் சிறுதளவு வெல்லம் எடுத்து வந்தால் உடலில் இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்படாது என்று டாக்டர். ரித்திகா கெளசிக் கூறுகிறார்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் ஒரு எமனகோக்கு மாதிரி செயல்பட்டு கருப்பை மற்றும் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இதன் ஆண்டிஸ்பாஸ்மோடிவ் விளைவுகள் கருப்பையை விரிவுபடுத்துகின்றன. இதை பற்றி சைனீஸ் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கூறப்பட்டுள்ளது. சூடான மஞ்சள் பால் போன்றவை மாதவிடாய் சுழற்சி முன்னதாக ஏற்பட உதவுகிறது.

இஞ்சி

இஞ்சி

இது மற்றொரு எமனகோக்கு ஆகும். இயற்கையான இந்த பொருள் மாதவிடாய் சுழற்சியை தூண்டுகிறது. இந்த இஞ்சியை டீ போட்டு குடித்தோ அல்லது தேனில் கலந்து சாப்பிட்டோ வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேனும் இஞ்சியும் கலந்த கலவை உடல் சூட்டை அதிகரித்து மாதவிடாய் முன்னதாக ஏற்படச் செய்கிறது.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களிலும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இவை மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் வலியை குறைக்கிறது. எனவே இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்து ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, August 23, 2018, 17:30 [IST]
Desktop Bottom Promotion