For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதெல்லாம் சாப்பிட்டாகூட பல் சொத்தையாயிடுமா?... அப்போ இனி சாப்பிடாதீங்க...

பற்சொத்தை வந்து விடமோ என்று குழந்தகளை சாக்லெட் சாப்பிடாத, இரண்டு தடவை பல் துலக்கு, அந்த பேஸ்ட் தான் தேய்க்கனும், இப்படி தான் வாயை கொப்பளிக்கனும் என்று குழந்தைகளை படாத பாடு படுத்திவிடுகிறோம். உண்மையில்

By Suganthi Rajalingam
|

இப்பொழுது எல்லாம் டிவியில் எங்கு பார்த்தாலும் ஒரே டூத் பேஸ்ட் விளம்பரம் தான் வருகிறது. அதிலும் குழந்தைகளின் பற்சொத்தை பற்றிய விளம்பரம் தான் அதிகம். "ப்ரஷ் ப்ரஷ் டூ டைம்ஸ் ஏ டே" யிலிருந்து" சாக்லேட் சாப்பிடாத பல் சொத்தை ஆகிடும்" என்று அம்மா கண்டிக்கும் பாணியில் நிறைய விளம்பரங்களை நம்மால் பார்க்க முடியும்.

Cavities

உண்மையில் பற்சொத்தைக்கு சாக்லெட் மட்டும் தான் காரணமா? இதற்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன என்று என்றாவது நாம் யோசித்து இருக்கோமா? கிடையவே கிடையாது. உடனே குழந்தகளை சாக்லெட் சாப்பிடாத, இரண்டு தடவை பல் துலக்கு, அந்த பேஸ்ட் தான் தேய்க்கனும், இப்படி தான் வாயை கொப்பளிக்கனும் என்று குழந்தைகளை படாத பாடு படுத்திவிடுகிறோம். உண்மையில் பார்த்தால் சில உணவுகளும் உங்கள் பற்சொத்தை காரணமாக அமைகிறது. அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரையின் ஸ்பெஷலே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்சொத்தை

பற்சொத்தை

பற்சொத்தை என்பது உங்கள் பற்களில் ஒரு குழி போன்ற அமைப்பில் கருப்பு, ப்ரவுன் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். இது கண்டிப்பாக நமக்கு வலியை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். பற்களில் உள்ள எனாமல் சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உணவுகளால் வெளியாகும் அமிலத் தன்மையால் அரித்து விடுகிறது. இந்த உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் சென்று மாட்டிக் கொள்வதாலும் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த நிலையால் அந்த பகுதியில் பாக்டீரியாக்களின் காலனி பெருகி வெள்ளை நிற படலத்தை ஏற்படுத்தி பற் சொத்தையை ஏற்படுத்துகிறது. எந்த உணவுகளில் எல்லாம் அதிகப்படியான சர்க்கரை சத்து இருக்கிறதோ அவைகளால் பற்களுக்கு அபாயம் தான் விளையும்.

சாக்லெட்

சாக்லெட்

உங்கள் குழந்தை சாக்லெட் சாப்பிட்டா உடனே நீங்கள் என்ன செய்வீர்கள். அவர்களை பயமுறுத்த ஆரம்பித்து விடுவீர்கள். பற்சொத்தை வந்துவிடும் பற்கள் பாழாகி விடும் என்றெல்லாம் அவர்களை பயமுறுத்த ஆரம்பித்து விடுவோம். உண்மையில் உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? சாக்லேட் பற்சொத்தையை எதிர்த்து போராடும் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆமாங்க நம்ம ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆராய்ச்சி கூறுவது என்னவென்றால் சாக்லேட் தயாரிக்க பயன்படும் கோக்கோ பீன்களில் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. இவைகள் நமது பற்களில் ஏற்படும் பற்சொத்தையை எதிர்த்து போரிடுகிறது. ஏன் பற்சொத்தைக்கு சில மருத்துவர்கள் சாக்லெட் பால் கூட பரிந்துரை செய்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

செயற்கை குளிர்பானங்கள்

செயற்கை குளிர்பானங்கள்

குளிர்ந்த செயற்கை குளிர்பானங்கள், சோடா, மாக்டைல்ஸ் போன்ற பானங்களில் அதிகமான இனிப்பு சுவை, பாஸ்பரஸ், கார்பனேஷன் போன்றவைகள் உள்ளன. இவைகள் நமது பல் எனாமல் எளிதாக அரித்து விடும்.

டேஃபிஸ், லாலி பாப்

டேஃபிஸ், லாலி பாப்

நீங்கள் சில உணவு விடுதிகளில் பார்த்தால் தெரியும். நாம் சாப்பிட்ட பிறகு லாலி பாப் போன்றவற்றை மவுத் ப்ரஷனராக கொடுப்பார்கள். டோஃபிஸ் போன்றவற்றில் நகட், கேரமல் போன்றவை சேர்க்கப்படுவதால் அவை பற்களில் ஒட்டிக் கொண்டு சீக்கிரம் பற்களை விட்டு போகாது. நீங்கள் அழுத்தி பல் துலக்கினால் மட்டுமே அதை நீக்க முடியும். நீங்கள் லாலி பாப் சாப்பிட்டாலும் கண்டிப்பாக உங்கள் வாயையும் பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால் இதை மெதுவாக சப்பி சாப்பிடுவதால் பற்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஸ்டார்ச் உணவுகள்

ஸ்டார்ச் உணவுகள்

பிரெஞ்ச் ப்ரை, ப்ரைடு ரைஸ், ப்ரட் ஜாம், ஆலு பூரி போன்ற உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளும் பற்களில் சொத்தையை ஏற்படுத்தும். இதிலுள்ள கார்போஹைட்ரேட் சர்க்கரையாக உடைவதே இதற்கு காரணம். அதே மாதிரி வறுத்த பிரட் துண்டுகளும் உங்கள் மேல் பற்களில் ஒட்டிக் கொண்டு பற்சொத்தையை ஏற்படுத்தும்.

பழ ஜூஸ்கள்

பழ ஜூஸ்கள்

ப்ரூட் டி, ஸ்லைஸ் போன்ற பழ ஜூஸ்களில் கூட நிறைய இனிப்பு சுவைகள் சேர்க்கப்படுகிறது. இவைகளும் உங்களுக்கு பற்சொத்தையை உருவாக்கும்.

பர்கர் மற்றும் பீட்சா

பர்கர் மற்றும் பீட்சா

பர்கர், பீட்சா அதனுடன் நீங்கள் தக்காளி கெட்ச்அப் இதெல்லாம் சேர்த்து சாப்பிடும் போது இதிலும் சர்க்கரை அதிகமாக இருக்கும். மேலும் இந்த மாதிரியான பிரட் துகள்கள் பற்களில் ஒட்டிக் கொண்டு எளிதாக பற்சொத்தையை ஏற்படுத்தி விடும்.

ஜெல்லி

ஜெல்லி

இதில் அடர்ந்த பழச்சாறுகள் கலக்கப்படுவதோடு அதிக சர்க்கரை சத்தும் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டாலும் இந்த மாதிரியான உணவுகளை அடிக்கடி கொடுக்காதீர்கள்.

கேக் மற்றும் பேஸ்ட்ரீஸ்

கேக் மற்றும் பேஸ்ட்ரீஸ்

இந்த மாதிரியான பொருட்களில் சுகர் சிரப்பை லேயர் லேயராக பயன்படுத்தி அலங்காரம் செய்து இருப்பார்கள். கண்ணை கவரும் விதத்தில் இருப்பதால் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். சாக்லேட் சிப்ஸ், பட்டர் ஸ்காட்ச், துருவிய சாக்லேட் துகள்கள், சில்வர் பால்ஸ் என்று அதிகப்படியான சர்க்கரை பொருளைக் கொண்டு குழந்தைகளை வெகுவாக கவர்ந்து விடுவார்கள்.

ப்ரைடு ஸ்வீட்ஸ்

ப்ரைடு ஸ்வீட்ஸ்

குளோப் ஜாமூன், ரசகுல்லா, சாம்சாம்ஸ், டபுள் சாக்லெட் நட்ஸ் இதெல்லாம் உங்கள் வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவீர்கள் அல்லவா. இதில் சேர்க்கப்படும் சர்க்கரை பாகு, அதிகமான சர்க்கரை பொருட்கள், அதன் மேல் ஊற்றப்படும் சர்க்கரை சிரப் போன்றவற்றாலும் பற்சொத்தை ஏற்படும்.

க்ரீம் பிஸ்கட்

க்ரீம் பிஸ்கட்

குழந்தைகளுக்கு பிடிக்கும் விதத்தில் விதவிதமான பொம்மை வடிவில், கலர் கலராக என்று நிறைய க்ரீம் பிஸ்கட்கள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன. அதில் சேர்க்கப்படும் க்ரீமில் நிறைய சர்க்கரை உள்ளன. இவைகளும் குழந்தைகளுக்கு பற்சொத்தை ஏற்படக் காரணமாக அஜித். மேலும் அவர்கள் இதை மென்று சாப்பிடும் போது பற்களின் ஓரங்களில் ஒட்டிக் கொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது.

சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஜூஸ்

சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஜூஸ்

கொஞ்சம் இளைய வயதில் இருக்கும் குழந்தைகள் டேங்கி சுவை அடங்கிய லெமன், ஆரஞ்சு மற்றும் புளிப்பு சுவை கொண்ட பழ ஜூஸை விரும்புகின்றனர். அதிலும் கோடை என்றால் போதும் இந்த மாதிரியான பழ ஜூஸ் டின்களை எப்பொழுதும் தங்கள் கையுடனே வைத்து வைத்து இருக்கின்றனர். இவைகளில் அமிலத் தன்மை அதிகமாக இருப்பதால் எளிதாக பற்களிலுள்ள எனாமலை அழித்து விடும்.

எப்படி தடுப்பது?

எப்படி தடுப்பது?

முதலில் பற்களில் சுத்தமாக வைக்கும் பழக்கத்தை உங்கள் குழந்தைகளிடம் உற்சாகப்படுத்துங்கள். ஏனெனில் இதை குழந்தையிலிருந்தே பழக்கப் படுத்தினால் மட்டுமே அவர்கள் அதை எளிதாக கடைப்பிடிப்பார்கள். அது அவர்கள் சாப்பிட்ட பிறகு ப்ரஷ் பண்ணும் பழக்கமாக இருக்கலாம், ஓரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம். மவுத் வாஷ் பயன்படுத்தி வாயை கொப்பளிக்கலாம். ப்ளோரைடு பேஸ்ட் பயன்படுத்துங்கள். இது கிருமிகளை எதிர்த்து போரிடும்.

குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை கொஞ்சமாக கொடுத்து பழக்கப்படுத்துங்கள்.

உங்களுக்கு பற்சொத்தை இருக்கும் சமயத்தில் உங்கள் எச்சிலை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை நாடி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். பற்சொத்தையை எதிர்த்து போராடும் உணவுகளை அவர்களுக்கு கொடுங்கள்.

இனிப்பில்லாத ஸ்வீங்கம்

இனிப்பில்லாத ஸ்வீங்கம்

இனிப்பில்லாத ஸ்வீங்கத்தை உணவு சாப்பிட்ட பிறகு மெல்லுவதால் பற்களின் இடுக்குகளில் உள்ள உணவுகள் வெளியேறுவதோடு பற்சொத்தைக்கு காரணமான அமிலத் தன்மையை நீக்கி பல் எனாமலை காக்கிறது.

க்ரீன் டீ

க்ரீன் டீ

இனிப்பு இல்லாத க்ரீன் டீ மற்றும் பிளாக் டீ போன்றவை பற்சொத்தையை எதிர்த்து போரிடுகிறது. நீங்கள் தேநீர் தயாரிக்க பயன்படுத்தும் நீரை பொருத்தும் இது செயல்படுகிறது.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைய நார்ச்சத்துகள் உள்ளன. இவை அதிகளவு நமது உமிழ்நீர் சுரப்பை தூண்டி பல் இடுக்குகளில் உள்ள உணவுகளை அலசி வெளியேற்றுகிறது. மேலும் பற்சொத்தைக்கு காரணமான அமிலத்தன்மையை சமநிலையில் வைக்கிறது.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

சீஸ், பால், யோகார்ட் மற்றும் இதர பால் பொருட்களில் கால்சியம், பாஸ்பேட்ஸ் மற்றும் விட்டமின் டி இருப்பதால் பற்களின் ஆரோக்கியத்திற்கு இவை உதவுகிறது. இவை பற்சொத்தை ஏற்படுவதை தடுக்கிறது.

ட்ரிக்

ட்ரிக்

இப்பொழுது கடைகளில் அழகான கார்டூன் பொம்மை, கார்டூன் கேரக்டர் போட்ட டூத் பேஸ்ட்கள், ப்ரஷ்கள் கிடைக்கின்றன. இவைகளை வாங்கி கொடுத்தால் போதும் உங்கள் குழந்தையின் பல் துலக்கும் ஆர்வத்தை எளிதாக ஊக்கப்படுத்தலாம். ப்ரஷ் செய்யும் முறையை பற்றிய நிறைய கார்டூன் பாடல்களும் இருக்கின்றன. இவைகளும் உங்கள் குழந்தைகளுக்கு பல் துலக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தி நல்வழிப்படுத்தும். என்ன பெற்றோர்களே நீங்க ரெடியா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Foods That Cause Cavities In Children

Kids are highly prone to developing cavities and other dental problems due to their diet, which is high in sugar! So is it only the chocolates that cause cavities or there are more hidden culprits? Read below to know more about cavities and the foodstuffs behind cavities in children.
Story first published: Tuesday, June 5, 2018, 13:16 [IST]
Desktop Bottom Promotion