For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 10 வேலை செய்றவங்கதான் குண்டாகிட்டே போவாங்களாம்... நீங்களும் இதான் செய்றீங்களா?

|

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஓடியாடி வேலை செய்தால் தான் மன அழுத்தம் அதிகமாகிறது. உட்கார்ந்தபடியே வேலை செய்வது மனதை இலகுவாக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

these ten jobs that cause people to gain weight

ஆனால் நாள் முழுக்க உட்கார்ந்து கொண்டே இருந்தால்தான் மன அழுத்தம் (stress) அதிகமாகும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலை பாதுகாத்தல்

உடலை பாதுகாத்தல்

நம்முடைய உடலை பாதுகாப்பது, கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதை மாலை 3 மணிக்கு நாம் தேவையில்லாத நொறுக்குத் தீனி சாப்பிடுவதற்கு முன்பு (ஸ்நாக்ஸ்) கட்டாயமா மறந்துவிடுகிறோம்.

MOST READ: வித்தியாசமா காதலை சொல்றதுல இந்த 4 ராசிகள் தான் கில்லாடிகளாம்... யார் யார்னு தெரியுமா?

வேலையும் எடையும்

வேலையும் எடையும்

பொதுவாக நாம் எல்லோருமே உடல் எடை கூடிப்போகாமல் இருப்பதற்காக தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறோம். அதில் நாம் நம்முடைய பழக்க வழக்கம் மற்றும் உணவை மட்டுமே காரணமாகச் சொல்கிறோம். ஆனால் நாம் பார்க்கிற வேலையும் எடை அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. அதிலும் கீழே குறிப்பிடப்படுகிற பத்து வேலைகளைச் செய்பவர்களுடைய உடல் எடை தான் கூடிக்கொண்டே போகிறது என்று ஒரு ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செவிலியர்

செவிலியர்

பொதுவாக மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் தங்களுடைய எடையை பராமரிப்பதிலும் ஆரோக்கிய விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்களும் முழு ஊட்டச்சத்துக்களோடு சாப்பிட வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் நிம்மதியாக அவர்களுக்கு சாப்பிட நேரமோ கிடையாது. மேலும் வேலையில் மன ரீதியான சில அழுத்தங்களை அடைகிறார்கள். இது ஒருவகையில், இந்த வகையான மன அழுத்தங்கள் அவர்களுடைய எடை அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காரணமாக அமைகின்றது.

சாஃப்ட்வேர் என்ஜினியர் (sofeware engineer)

சாஃப்ட்வேர் என்ஜினியர் (sofeware engineer)

ஆய்வு அறிக்கையின் படி, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகின்றவர்கள் குறிப்பாக, சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் தங்களுடைய வேலைகளில் தங்களையே மறந்துதான் மூழ்கிப் போயிருப்பார்கள். அதனால் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, காலையில் தாமதமாக எழுந்துவிட்டு காலை உணவைத் தவிர்த்துவிட்டு ஓடுவது, இடையில் பசியை சரிகட்டுவதற்கான துரித உணவுகளையும் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவது ஆகியவற்றைச் செய்கிறார்கள். ஒரு நாளின் மிக அதிக நேரத்தை கணினியின் முன் செலவிடுவோர் நிச்சயமாக உணவு விஷயத்தில் கோட்டை விடுகிறார்கள். அதனால் அவர்கள் உடல் எடை தானாகவே அதிகரிக்கத் தொடங்குகிறது.

MOST READ: பொடுகு அரிப்பை முதல்முறையே போக்கும் 4 அற்புத மூலிகைகள்... வீட்டிலயே தயார் செய்வது எப்படி?

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

என்ன ஆசிரியர் பணியிலும் பிரச்சினையா என்று நீங்கள் ஆச்சர்யமடையலாம். ஆனால் அதுதான் உண்மை. மன அழுத்தமும் பொறுப்பும் நிறைந்த வேலைகளில் ஒன்று தான் இந்த ஆசிரியப்பணி. மன அழுத்தத்தின் காரணமாக அவர்கள் உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதில் மிக மோசமாகிவிடுகிறார்கள். இவர்களுடைய பணி வெறுமனே வகுப்பறைகளில் மட்டும் நிகழ்வதல்ல. அதையும் தாண்டி நிறைய பொறுப்பும் அக்கறையும் இவர்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு மாணவனுக்குமான தேவையை வெளியில் இருந்து சிந்திக்க வேண்டிய கடமை இருப்பதால், பள்ளியில் மட்டுமல்லாது தன்னுடனேயே தன்னுடைய வேலையையும் வீட்டுக்குச் சுமந்து செல்கிறார்கள். இதுபோன்ற மன அழுத்தத்தினாலும் மோசமான உணவுப் பழக்கத்தாலும் இடுப்பில் சதை போட ஆரம்பித்து குண்டாகிவிடுகிறார்கள்.

நெட்வொர்க் அட்மினிஸ்டேட்டர் (network administrator)

நெட்வொர்க் அட்மினிஸ்டேட்டர் (network administrator)

இதுவும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த ஒரு பணி தான். இதில் ஈடுபடுபவர்கள் எப்போதும் ஈடுபாட்டுடன் மிகவும் ஆக்டிவ்வாக இருக்க வேண்டியது அவசியம். குறைந்தது 10 மணி நேரத்துக்கு மேல் கணினித் திரையோடு வாழ வேண்டியிருப்பதால், அது அவர்களுடைய உணவு உண்ணும் நேரம், உடற்பயிற்சி நேரத்தையும் வேலைக்காக எடுத்துக் கொள்கிறது. வேலை பார்த்துக் கொண்டே எதையாவது வயிறை நிரப்ப உள்ளுக்குள் தள்ளுகிறார்களே ஒழிய, என்ன மாதிரியான உணவு சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம், என்ன ஊட்டச்சத்து போன்ற கலோரி விஷயங்கள் இவர்களுடைய மூளைக்கு எட்டுவதில்லை. அதனால் அவர்களைக் கேட்காமலேயே, இவர்களுக்குத் தெரயாமலேயே எடையும் கூடிக்கொண்டே போய்விடுகிறது.

நீதிபதிகள்

நீதிபதிகள்

பெரும்பாலும் நீதிபதியாக இருப்பவர்களை கவனித்தீர்கள் என்றால், கொஞ்சம் பூசினாற் போல தான் இருப்பார்கள். எப்போதும் தங்களுடைய மூளையைப் போட்டுக் கசக்கிக் கொண்டே இருக்க வேண்டியவர்கள் தான். உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்கிறபோது கூட, ஏன் திரட்மில்லில் ஏறி நடந்து கொண்டிருக்கும்போது தன்னுடைய உடலைத் தாண்டி, வேறு ஏதாவது ஒரு பிரச்சினை குறித்துதான் யோசித்துக் கொண்டிருப்பார்கள். இதுபோன்ற மன அழுத்தங்கள் கொண்ட நிலையில், போதிய உடற்பயிற்சி இல்லாமையால் இவர்களுடைய எடை கூடுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள்

தாங்கள் வேலை செய்கின்ற இடத்தைவிட்டு கொஞ்சமும் நகர முடியாத ஒரு பணியைத் தங்கள் வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து கொண்டே இருப்பவர்கள் தான் விஞ்ஞானிகள். ஆராய்ச்சியைப் பொருத்தவரையில் எவ்வளவு மோசமான நிலை வரையில் மன அழுத்தத்துக்குக் கொண்டு போய் விடும் நமக்கு நன்றாகத் தெரிந்ததுதான். எப்போதும் தங்களுடைய ஆய்வைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இரவு, பகல் வித்தியாசம் தெரியாது. உணவு உண்ணும் நேரம் தெரியாது. அவற்றின் மீதெல்லாம் அக்கறை கொள்ள ஆரம்பித்தால் அவர்களுடைய வேலையை இழக்க வேண்டி நேரிடும். இப்படி ஒரு மன இறுக்கத்தில் இருப்பதால் இயல்பாகவே அவர்களுடைய உடல் எடையில் மாற்றங்கள் ஏற்டுகின்றன.

MOST READ: பரு வந்த இடத்துல வடுவா மாறிடுச்சா? இத தடவுங்க... இருந்த இடம் தெரியாம போயிடும்

போலீஸ்

போலீஸ்

போலீஸ் வேலையைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். எப்போதும் வெயில் மழை பார்க்காமல் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டிய பணி. கிடைக்கிற இடத்தில் கிடைக்கிற நேரத்தில் தான் சாப்பிடவே முடியும். அதில் எங்கிருந்து ஊட்டச்சத்தை தேடுவது... அதனால் கிடைக்கிற இடத்தில் கிடைப்பதைக் கொரித்துத் தின்று வாழ்க்கை நடத்துவதால், போலீஸ் வேலையில் சேருகின்ற புாது இருந்த உடல்கட்டும் துடிப்பும் பணிக்கு சேர்ந்த பின்பு இருப்பதில்லை. மிக வேகமாகவே உடல் எடை கூடி, தொந்தியும் தொப்பையும் அலைகிறார்கள்.

ஆர்க்கிடெக்

ஆர்க்கிடெக்

கட்டிடங்களின் டிசைன்களை வரைவது, அதை எப்படி வர்த்தகப்படுத்துவது போன்ற பல மூளையைக் கசக்கும் வேலை செய்கிற ஆர்க்கிடெக்குகளுக்கு இயல்பாகவே எடை தாறுமாறாக ஏறிப்போகிறது. பொதுவாக இவர்கள் ஒரே இடத்தில் பல மணிநேரம் உட்கார்ந்து ஒரு கட்டிடத்தின அமைப்பை டிசைன் செய்ய வேண்டியிருக்கிறது. அங்கிங்கும் நகரமால் ஒரே இடத்தில் அதிக நேரத்தை செலவழிப்பதால் இவர்கள் எடை கூடுகிறது.

மெசின் ஆபரேட்டர்கள்

மெசின் ஆபரேட்டர்கள்

மெசின் ஆபரேட்டர் வேலை செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு பொதுவாக குனிந்து நிமிதுவது, வளைவது போன்ற சின்ன சின்ன உடல் அசைவுகள் கொண்ட வேலைகள் இருக்கும். அதிகபட்சமாக ஓரிடத்தில் இருந்து இரண்டு மூன்று அடிகள் தூரம் வரை தான் நகர்ந்து வேலை பார்ப்பார்கள். ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றுகொண்டே வேலை பார்ப்பதன் அவசியம் அவர்களுக்கு இருப்பதால் ஒரு வேலையை பாதியில் விட்டுவிட்டு சாப்பிடவோ வேறு எங்கும் செலல் முடியாது. அதுவும்கூட இவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

MOST READ: எந்த நிற பழங்களைச் சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் குணமாகும்னு தெரியுமா? இத படிங்க...

அட்மின் மற்றும் எச்ஆர் (admin and HR)

அட்மின் மற்றும் எச்ஆர் (admin and HR)

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு, மிக எளிமையாக வேலைகளைச் செய்து கொண்டிருப்பவர்கள் தான் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். எல்லா அலுவலகங்களிலும் இப்படி சிலர் பணியமர்த்தப்பட்டு இருப்பார்கள். நமக்கு நிறைய நேரங்களில் சந்தேகங்கள் வரும். சும்மாவே இருக்கிறார்களே இவர்கள் என்னதான் வேலை செய்வார்கள் என்று. உடல் எடையைக் குறைப்பதற்கான மருத்துவரைச் சந்திக்க வருபவர்களில் பெரும்பாலானோர் இந்த அட்மின் வகை பணியாளர்கள் தானாம். அதோடு சில சமயங்களில் உண்டாகிற மன அழுத்தம், நிநைய காபி, டீ போன்ற பானங்களை அடிக்கடி குடிப்பது, மாலை நேரங்களில் நிறைய ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவது ஆகியவை உடல் எடையைக் கூட்டிக் கொண்டே போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

these ten jobs that cause people to gain weight

here we discuss about the causes of weight gain according to you profession.
Story first published: Tuesday, December 4, 2018, 16:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more