For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'அந்த' இடத்தில் அரிப்பும் தொற்றும் அடிக்கடி வருதா? நீங்க செய்ய வேண்டிய கை வைத்தியம் இதுதான்...

|

பிறப்புறுப்பு ஹெர்பெஸை அதன் அறிகுறிகளைக் கண்டவுடன் மேலும் பரவி மோசமடையாமலிருக்கச் செய்ய உடனடியாகக் குணப்படுத்துவது கடினம். ஜெனிடல் ஹெர்பெஸ் என்பது ஒரு வைரஸ். தொடுதல் மற்றும் உடல் உறவுகளின் மூலமாக இவை பரவுகின்றன. பிறப்புறுப்பு மண்டலத்தில் அரிப்பு மற்றும் வலி ஏற்படுத்தும் புண்கள் மற்றும் கொப்புளங்களே இதன் அறிகுறிகளாகும். துரதிருஷ்டவசமாக, இது மிகவும் தொற்றக்கூடிய வைரஸ் எனவே நீங்கள் இதன் மூலம் மற்ற சுகாதாரப் பிரச்சினைகள் உருவாவதைத் தடுக்க விரைவில் அதற்குச் சிகிச்சையளிக்க வேண்டும்.

The Four Best Remedies for Treating Genital Herpes

இந்தக் கட்டுரையில், இயற்கையாகவே பிறப்புறுப்பு ஹெர்பெஸ்க்கு சிகிச்சையளிக்கும் சிறந்த வீட்டு வைத்தியங்களை பகிர்ந்துள்ளோம். பேக்கிங் சோடா, காய்கறி எண்ணெய்கள், ஆலி ஈஸ்ட், மற்றும் புரோபோலிஸ் போன்ற பொருட்கள் இந்த வைரஸ் சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜெனிடல் ஹெர்பெஸ் என்றால் என்ன?

ஜெனிடல் ஹெர்பெஸ் என்றால் என்ன?

ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஷால் (ஹெச்எஸ்வி) ஏற்படுகின்ற நிலையே " ஜெனிடல் ஹெர்பெஸ்" ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது பாலியல் ரீதியாகப் பரவுகிறது, அது ஆண்களைப் போலவே பல பெண்களையும் பாதிக்கிறது.

பிறப்புறுப்பு மண்டலம், பிட்டம், ஆசனவாய் மற்றும் தொடைகள் ஆகியவற்றில் எரியும் உணர்வு,வலி மற்றும் அரிப்பு ஆகியவையே இந்த நோயின் பொதுவான அறிகுறிகள்.

MOST READ: கல்லீரல் கொழுப்பையும் வீக்கத்தையும் கரைக்கும் அற்புத பழம்... எப்படி சாப்பிட வேண்டும்?

பிறப்புறுப்பு மண்டலம்

பிறப்புறுப்பு மண்டலம்

உங்கள் தோலில் கொப்புளங்கள் அல்லது புண்களை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்றால், நேராக உங்கள் மருத்துவரிடம் உடனடியாகச் செல்ல வேண்டும். நீங்கள் ஹெர்பெஸுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கவில்லையெனில் நாளடைவில் இது வர்செல்லா அல்லது முகப் பக்கவாதம் போன்ற மிகவும் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

எனினும், ஆரம்ப அறிகுறிகளைச் சமாளிக்க அல்லது உங்கள் மருத்துவர் வழங்கிய சிகிச்சையுடன் இணைந்து பிறப்புறுப்பு ஹெர்பெஸுக்கு சிகிச்சையளிக்க சில இயற்கை வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.

ஈஸ்ட்

ஈஸ்ட்

அநேக மக்கள் நாள்தோறும் ஊட்டச்சத்து நிரப்பியாக எடுத்துக்கொள்ளும் ஒரு ஆரோக்கியமான உணவாக ப்ரூவரின் ஈஸ்ட் இருக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது மற்றும் நிறைய B வைட்டமின்கள் உள்ளன.

இந்த ஊட்டச்சத்துக்கள் காரணமாக, இந்த சூப்பர்ஃபுட் நரம்பு மண்டலத்தை சமநிலையில் வைக்கிறது. இதுவே ஹெர்பெஸின் திடீர் தாக்குதலில் நம்மைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கூடுதலாக, ப்ரீவரின் ஈஸ்ட் நன்மை பயக்கும் லைசினைக் கொண்டிருக்கிறது. இந்த அமினோ அமிலம் ஹெர்பெஸ் வைரஸ் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது, எனவே தொடர் நிலை திடீர் தாக்குதலைத் தடுக்கிறது. நீங்கள் ஹெர்பெஸ்ஸால் முன்னரே பாதிக்கப்பட்டிருந்தால் இதை தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

புருவரின் ஈஸ்டைப் பயன்படுத்த சிறந்த வழி ஒவ்வொரு நாளும் அதைச் சாப்பிட வேண்டும். நீங்கள் உங்கள் உணவு அல்லது ஒரு பானத்தில் (தயிர், சாறு, சூப், பாஸ்தா, சாலட்) அதைக் கலந்து எடுத்துக்கொள்ள முடியும். இது ஒரு இனிமையான வறுக்கப்பட்ட சுவையைத் தருகிறது.

MOST READ: கணுக்கால் சுளுக்கிடுச்சா? இத செய்ங்க... உடனே சரியாகிடும்...

பேக்கிங் சோடா மற்றும் நியாலி எண்ணெய் :

பேக்கிங் சோடா மற்றும் நியாலி எண்ணெய் :

Niauli அத்தியாவசிய எண்ணெய் (Melaleuca viridiflora) தொற்றுக்கு எதிராகப் போராடும் மற்றும் தோல் மீளுருவாக்கம் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இது ஹெர்பெஸைத் தடுக்கும் மற்றும் எதிர்த்து போராடும் சிறந்த எண்ணெய்களில் ஒன்றாகும்.

நீங்கள் பேக்கிங் சோடாவுடன் இதைக் கலந்து உங்கள் தோலின் பிஹெச் சமநிலையைப் பராமரிக்கக்கூடிய ஒரு தீர்வாகப் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

* 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா (9 கிராம்)

* 5 துளிகள் Niauli அத்தியாவசிய எண்ணெய்

* 1/2 க்ளாஸ் வெதுவெதுப்பான நீர் (100 மிலி)

தயாரிப்பு மற்றும் பயன்படுத்தல்:

அனைத்துப் பொருட்களையும் ஒன்றிணைக்க அவைகளை நன்றாகக் கலக்க வேண்டும்.

கொஞ்சம் பருத்திப் பஞ்சின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு இந்தக் கலவையை தடவவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ரவிந்த்ஸ்ரா எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் மற்றும் ரவிந்த்ஸ்ரா எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் மற்றும் ரவிந்த்ஸ்ரா எண்ணெய் கலந்த (இலவங்கப்பட்டை காம்போரா) கலவை பிறப்புறுப்பு ஹெர்பெஸ் சிகிச்சையில் மற்றொரு பெரிய தீர்வாக உள்ளது. இது கொண்டிருக்கும் லாரிக் அமிலத்தின் காரணமாக, தேங்காய் எண்ணெய் அனைத்து வகை நோய்க்கிருமிகளுக்கும் தீர்வாகப் பயன்படுகிறது.

இதற்கிடையில், ரவிந்த்ஸ்ரா எண்ணெய் இதை மேலும் அதிகரிக்கிறது, ஏனென்றால் ரவிந்த்ஸ்ரா ஒரு சிறந்த நச்சுயிரிக்கு எதிரான மரம்.

தேவையான பொருட்கள்:

* 1 தேக்கரண்டி கூடுதல் விர்ஜின் தேங்காய் எண்ணெய் (15 கிராம்)

* 10 சொட்டு ரவிந்த்ஸ்ரா அத்தியாவசிய எண்ணெய்

தயாரிப்பு மற்றும் பயன்படுத்தல்:

இரண்டு எண்ணெய்களையும் நன்றாகக் கலந்து, சிறிது பருத்தி கம்பளி அல்லது பருத்தி மொட்டு உதவியுடன் பாதிக்கப்பட்ட பகுதியில் அவற்றைப் பயன்படுத்துங்கள்.

MOST READ: எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பானிபூரி சாப்பிடலாமா? எத்தனை சாப்பிடலாம்?

ஆலிவ் ஆயில் மற்றும் ப்ரோபோலிஸ்:

ஆலிவ் ஆயில் மற்றும் ப்ரோபோலிஸ்:

பிறப்புறுப்பு ஹெர்பெஸ் சிகிச்சையளிப்பதற்கு இன்னொரு எளிமையான எளிய தீர்வு ஆலிவ் எண்ணெய் மற்றும் புரோபோலிஸ் கலவையாகும்.

ஆலிவ் எண்ணெய் ஆழமாக ஊட்டமளிக்கிறது மற்றும் இது கொண்டிருக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் தோலை சரிசெய்யும். இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும் .

இதற்கிடையில், புரோபிலிஸ் என்பது பூஞ்சை, வைரஸ்கள், மற்றும் பாக்டீரியா ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் இயற்கையான ஆண்டிபயாடிக் ஆகும். இது தோல் புண்களைக் குணப்படுத்தும் வேகத்தை அதிகரிக்கிறது.

தேவையான பொருட்கள்:

* 1 தேக்கரண்டி கூடுதல் விர்ஜின் ஆலிவ் எண்ணெய் (16 கிராம்)

* ஆல்கஹால் இல்லாத புரோபிலஸ் சாறு 3 சொட்டு

பிரேசிலிய பசுமையான புரோபிலஸ் என்பது இதில் மிகவும் நன்றாக குணப்படுத்தும் வகைகளில் ஒன்றாகும்.

தயாரிப்பு மற்றும் பயன்படுத்தல்:

இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து, சிறிது பருத்தி கம்பளி அல்லது பருத்தி மொட்டு உதவியுடன் பாதிக்கப்பட்ட பகுதியில் அவற்றைப் பயன்படுத்துங்கள்.

தோல் நன்கு குணமடையும் வரை அதை தொடர்ந்து பயன்படுத்தவும் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Four Best Remedies for Treating Genital Herpes

there are a few home remedies that can help you for Treating Genital Herpes through this article.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more