For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாரடைப்பை ஏற்படுத்தும் குறட்டை..! தீர்க்கும் ஆயுர்வேத முறை..! எப்படி தெரியுமா..?

|

"குறட்டை" பலரின் நீண்ட நாள் பிரச்சினையாக தொடர்ந்து கொண்டே வருகின்றது. குறிப்பாக தம்பதியருக்குள் இந்த குறட்டை மகா பிரச்சினையாக உருவாகிய கதைகளும் நமக்கு தெரியும். குறட்டையால் விவாகரத்து கேட்ட தம்பதியரின் கதைகளும் கூட இங்குண்டு. இப்படி பலவிதங்களில் நம்மை பாடாய் படுத்தும் இந்த குறட்டை நல்லதா..? கெட்டதா..? என்கிற கேள்வி நமக்கு நிச்சயம் இருக்கும்.

எச்சரிக்கை! நீங்கள் குறட்டை விடுபவரா..? அப்போ இந்த நோய்களெல்லாம் வரிசையாக உங்களுக்கு வரும்..!

தும்மல், விக்கல், இரும்பல் போல இதுவும் இயல்பான ஒன்றா அல்லது மோசமான ஒன்றா... இப்படி பலவித கேள்விகள் நம்மில் இருக்கும். ஆனால், உண்மை என்னவென்றால் குறட்டை நமக்கு ஆபத்தானதே. இதனால் பலவித நோய்கள் ஒன்றன் பின் ஒன்றனாக நமக்கு ஏற்படும் என ஆய்வுகள் சொல்கிறது. வாங்க, குறட்டையால் ஏற்படும் நோய்களையும், எப்படி இது ஏற்படுகிறது என்பதையும், இதை எப்படி சரி செய்வது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இருவருக்குமே பிரச்சினைதான்..!

இருவருக்குமே பிரச்சினைதான்..!

குறட்டை யாருக்கு அதிகம் தொல்லை தருகிறது என்று கேட்டால், அதற்கு பதில் இருவருக்குமே தான். ஆண்களை போன்றே பெண்களுக்கும் இந்த குறட்டை பிரச்சினை பலவிதங்களில் பாடாய் படுத்துகின்றது. பலருக்கு தாங்கள் குறட்டை விடுவது கூட தெரிவதில்லை. இது போன்று ஏராளமானோர் இன்றும் உள்ளனர்.

ஆராய்ச்சியின் முடிவு..?

ஆராய்ச்சியின் முடிவு..?

குறட்டை நாம் நினைப்பது போன்று சாதாரண விஷயம் அல்ல. இதனால் பலவித அபாயங்கள் உடலுக்கு உண்டாகும் என ஆய்வுகள் சொல்கிறது.

இதில் நடுத்தர வயதுடையோர் 20 சதவீதமும், 40 வயதை கடந்தவர்கள் 60 சதவீதமும் குறட்டை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

குறட்டைக்கு காரணம்..?

குறட்டைக்கு காரணம்..?

குறட்டை வருவதற்கு சில முக்கிய காரணிகள் உள்ளன. அவற்றில் சில...

- உடல் பருமன்

- சைனஸ் பிரச்சினை, சுவாச கோளாறுகள்

- எடுத்து கொள்ளும் உணவு

- தூங்கும் நிலை

- மது பழக்கம், குடி பழக்கம்

செரிமான கோளாறுகள்...

செரிமான கோளாறுகள்...

குறட்டையால் உங்களுக்கு உண்டாகும் பிரச்சினைகளில் முதன்மையானது இந்த செரிமான கோளாறுகள்தானாம்.

காரணம், நாம் குறட்டை விடுவதால் அதிக படியான காற்று நுரையீரலுக்குள் சென்று வயிற்று பகுதிக்கு அழுத்தத்தை தருகின்றது. இதனால் இரவில் செரிமான கோளாறுகள் உங்களுக்கு ஏற்படுகின்றது.

MOST READ: மாதுளையை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா..? சாப்பிட்டால் என்னவாகும்..?

ரத்தத்தில் குறைந்த ஆக்சிஜென்..!

ரத்தத்தில் குறைந்த ஆக்சிஜென்..!

நீங்கள் குறட்டை விடுவதால் இந்த அபாயமும் உண்டாக்குகிறது. அதாவது, தொடர்ந்து இரவு முழுவதும் குறட்டை விடுவதால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜெனின் அளவு குறைந்து ரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்பட்டு உயர் ரத்த அழுத்தமாக கூட உருவாகலாம். இது பல நாட்கள் நீண்டால் உயிருக்கே ஆபத்து வரலாம்.

இதய நோய்கள்

இதய நோய்கள்

அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளது. அதில், நீண்ட நாட்களாக குறட்டை பிரச்சினை கொண்டோருக்கு இதயம் சார்ந்த நோய்கள் வரும் என கண்டறியப்பட்டுள்ளது. இவை மாரடைப்பை கூட ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

சுவாச பிரச்சினை

சுவாச பிரச்சினை

உங்களுக்கு ஏற்படும் சுவாச பிரச்சினைகளுக்கும், தலைவலி போன்றவற்றிற்கும் இந்த குறட்டையும் காரணமாக இருக்கலாம்.

ஆமாங்க, குறட்டை விடுவதால் காலையில் தலைவலிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், சில சமயங்களில் சுவாச பிரச்சினைகளும் ஏற்படும்.

எங்கே நிம்மதி..?

எங்கே நிம்மதி..?

குறட்டை பிரச்சினை கொண்டவர்களுக்கு மேலும் சில மோசமான நிலைகள் ஏற்படுகின்றன. முக்கியமாக தூக்கம் முழுமையாக பாதிக்கப்படுகிறதாம். தூக்கத்தில் அடிக்கடி எழுந்து கொள்ளுதல், மோசமான தூக்கம், போன்றவை ஏற்படும்.

MOST READ: புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் கருப்பு எள்..! எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா..?

தீர்வு #1

தீர்வு #1

குறட்டை பிரச்சினைக்கு எதிரியாக இந்த ஆலிவ் எண்ணெய் வைத்தியம் உள்ளது. இதற்கு தேவையானவை...

ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

வெது வெதுப்பான நீர் 1 கிளாஸ்

இஞ்சி சாறு சிறிது

தயாரிப்பு முறை...

தயாரிப்பு முறை...

முதலில் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை வெது வெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். தேவைக்கு சிறிது இஞ்சி சாற்றையும் சேர்த்து கொள்ளலாம்.

இவற்றை நன்றாக கலந்து தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால், குறட்டை பிரச்சினைக்கு பாய் பாய் சொல்லிடலாம்.

புதினா வைத்தியம்

புதினா வைத்தியம்

தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக 1 அல்லது 2 கப் புதினா டீ குடித்து வந்தால் குறட்டைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

அல்லது தூங்குவதற்கு முன்னர் ஏலக்காய் டீ குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பிறருடனும் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Serious Health Risks Associated With Snoring And How To Treat This

Here we list out some serious health risks associated with snoring and how to treat this.
Desktop Bottom Promotion