For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மென்ஸ்சுரல் கப் ஒருமுறை வாங்கினா எத்தனை முறை பயன்படுத்தலாம்?... என்ன நன்மை இருக்கு?

அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்களுக்கு நம் சமூகம் கற்றுக் கொடுத்த ஒரு விஷயம் என்னவென்றால் மாதவிடாய் என்பது வெட்கப்பட வேண்டிய ஒளித்து மறைத்து வைக்க கூடிய ஒரு விஷயம் என்று.

|

அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்களுக்கு நம் சமூகம் கற்றுக் கொடுத்த ஒரு விஷயம் என்னவென்றால் மாதவிடாய் என்பது வெட்கப்பட வேண்டிய ஒளித்து மறைத்து வைக்க கூடிய ஒரு விஷயம் என்று. இந்த உணர்வை கண்டிப்பாக மாற்ற வேண்டும். இதை மாற்றுவதற்காக தற்போது பேட், டேம்ப்போன் போன்றவை உதவுகிறது. அதில் ஒன்று தான் மாதவிடாய் கப்கள். மாதவிடாய் கப்கள் மிகவும் சௌகரியமானது, பயன்படுத்த எளிதானது.

Menstrual Cup

எல்லா பெண்களுமே இந்த மாதவிடாய் காலங்களில் வலிகளை அனுபவிக்கிறார்கள். இது சீக்கிரம் முடிந்து விட வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உதவ இப்போது பல விதமான பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்போது மார்க்கெட்டுகளில் உள்ள சானிட்டரி நாப்கின் மற்றும் டேம்ப்போன் போன்ற காட்டன் அதிகமாக பெண்களால் பயன்படுத்தப்படுகிறது. இதே போன்றே மார்க்கெட்டுகளில் புதிதாக வந்துள்ள மாதவிடாய் கப்கள் வித்தியாசமானவை. இது மட்டும் தான் திரும்ப திரும்ப உபயோகப்படுத்த ஏதுவான ஒன்றாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மென்ஸ்சுரல் கப்

மென்ஸ்சுரல் கப்

மாதவிடாய் கப்கள் சிறியதாகவும், வளையக்கூடியதாகவும் உள்ளது. இது லேட்டெக்ஸ் ரப்பர் அல்லது சிலிகானால் செய்யப்படுகிறது. இதை ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும் பெண்ணுறுப்பில் வைக்க வேண்டும். இது இரத்தத்தை உறிஞ்சுவதற்கு பதிலாக சேமித்து வைக்கிறது. இந்த மாதவிடாய் கப்கள் பெண்ணுறுப்பில் கச்சிதமாக பொருந்துமாறு தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள ஸ்பிரிங் போன்ற அமைப்பு இதை உறுதி செய்யும். அதனால் இரத்தம் கசிந்து விடுமோ என்ற பயம் தேவையற்றது. பெரும்பாலான மாதவிடாய் கப்கள் மறுபடியும் பயன்படுத்த ஏதுவாகவே உள்ளது. இதை திரும்ப பயன்படுத்தும் போது நன்றாக கழுவி சுத்தம் செய்து பயன்படுத்தலாம். இது மிகவும் எளிதானது. வலிகள் அற்றது.

எத்தனை துறை பயன்படுத்தலாம்?

எத்தனை துறை பயன்படுத்தலாம்?

மாதவிடாய் கப்கள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் எண்ணற்றது. ஏனென்றால் இதை ஒரு முறை வாங்கினாலே பலமுறை பயன்படுத்தலாம். சானிட்டரி நாப்கின் மற்றும் டேம்ப்போன் போல இது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. மாதம் மாதம் சானிட்டரி நாப்கின் வாங்கும் அவசியமும் இல்லை என்பதால் பொருளாதார ரீதியாகவும் இது நல்லது. மாதவிடாய் வந்தவுடன் நாப்கின் வாங்க கடைகளை தேடி அலையாமல் வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுக்கலாம். ஒரு கப் வாங்கினால் அதை இரண்டரை ஆண்டுகள் வரை பயன்படத்தலாம் என்று கூறப்படுகிறது.

சிக்கனமானது

சிக்கனமானது

மாதவிடாய் கப்களை பலமுறை பயன்படுத்தலாம். எனவே மாதம் தோறும் சானிட்டரி நாப்கின் வாங்கும் செலவு மிச்சமாகும். நாம் கணக்கு செய்து பார்த்தால் இதனால் நாம் நிறைய பணம் சேமிக்கலாம்.

நேர சேமிப்பு

நேர சேமிப்பு

சானிட்டரி நாப்கின் மற்றும் டேம்ப்போன் போன்றவைகளை பயன்படுத்தும் போது சில மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றி கொண்டே இருக்க வேண்டும். இந்த தொல்லை மாதவிடாய் கப்களை பயன்படுத்தும் போது இருக்காது. ஏனென்றால் இந்த கப்களை குறைந்தபட்சம் 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

எல்லா பெண்களுக்கும் ஏற்றது

எல்லா பெண்களுக்கும் ஏற்றது

டேம்ப்போன் உறிஞ்சும் இரத்தத்தை விட 5 மடங்கு அதிகமான அளவு மாதவிடாய் கப்களால் சேமித்து வைக்க முடியும். அதனால் அதிக உதிர போக்கு பிரச்சினை கொண்ட பெண்களுக்கு இது வரப்பிரசாதம்.

சுத்தமானது, சுகாதாரமானது

சுத்தமானது, சுகாதாரமானது

சானிட்டரி பேட் மற்றும் டேம்ப்போனில் உள்ளது போன்ற எந்த கெமிக்கலும் இந்த மாதவிடாய் கப்களில் கிடையாது. அதனால் இது உடலுக்கு எந்த கேடுகளையும் ஏற்படுத்தாது.

கறை இல்லை

கறை இல்லை

இந்த கப்களை பெண்ணுறுப்பில் வைத்த உடனே இது சரியான முறையில் பொருந்தி கொள்ளும். அதனால் இரத்தம் கப்களில் மட்டும் தான் விழும். கறை பட்டு விடுமோ என்ற கவலை இந்த கப்களை பயன்படுத்தும் போது இருக்காது.

டி.எஸ்.எஸ் நோயிலிருந்து பாதுகாப்பு

டி.எஸ்.எஸ் நோயிலிருந்து பாதுகாப்பு

டாக்ஸிக் சாக் ஸின்றோம் (டி.எஸ்.எஸ்) என்பது பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு நோய் ஆகும். சானிட்டரி பேட்கள் மற்றும் டேம்ப்போன்களில் உள்ள பஞ்சுகளில் இருக்கும் சிறிய வெட்டுகள் பாக்டீரியா தொற்றுக்கு காரணமாகிறது.

ரேசஸ்

ரேசஸ்

சானிட்டரி பேட் மற்றும் டேம்ப்போன் பயன்படுத்துவது சில பெண்களுக்கு ஒத்துக்காது. அவர்களுக்கு அரிப்பு, எரிச்சல் போன்றவைகள் ஏற்படும். மாதவிடாய் கப்கள் பயன்படுத்தினால் இந்த பிரச்சினை இருக்காது.

எல்லா சூழ்நிலைக்கும் பொருத்தமானது

எல்லா சூழ்நிலைக்கும் பொருத்தமானது

இந்த கப்களால் நிறைய உதிரத்தை பிடித்து வைக்க முடியும். அதனால் உங்களுக்கு உதிர போக்கு அதிகமாக இருந்ததாலும் சரி, கொஞ்சமாக இருந்தாலும் சரி. இந்த கப்கள் மிகவும் பயனுள்ளது.

அமைதியான உறக்கம்

அமைதியான உறக்கம்

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலங்களில், இரவு உறங்கும் போது பெட் சீட் கறையாகி விடுமோ என்ற கவலையுடனே பெண்களுக்கு கழியும். இந்த கறைக்கு பயந்து நடு இரவில் பேட்களை மாற்றுவார்கள். மென்சஸ் கப்களை பயன்படுத்தும் போது இந்த பயமின்றி நிம்மதியாக உறங்கலாம்.

நீங்கள் நீங்களாக இருக்கலாம்

நீங்கள் நீங்களாக இருக்கலாம்

மாதவிடாய் காலங்களில் கூட இனி நீங்கள் நீச்சல் அடிக்கலாம், குதிக்கலாம், ஓடியாடி விளையாடலாம். கறை படும் பயம் இனி கிடையாது. மாதவிடாய் காலங்களுக்கும் மற்ற நேரங்களுக்கும் இனி வித்தியாசம் கிடையாது. ஆனாலும் நிறைய பெண்களுக்கு இதை பயன்படுத்தும் போது பயம், சந்தேகம் வரலாம். இந்த கப்கள் பாதுகாப்பானது. ஆனாலும் மன அமைதிக்காக இதை முதலில் பயன்படுத்தும் போது, கூடுதல் பாதுகாப்புக்காக சானிட்டரி நாப்கின் அணியலாம். நீங்கள் இந்த கப்களை பயன்படுத்தினால் கூட விஸ்பர் அல்ட்ரா கிளீன் பேட்டை எப்போதும் கைப்பையில் வைத்து கொள்வது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health
English summary

Learn What Is Menstrual Cup & 10 Benefits Of Using It

Learn What Is Menstrual Cup & 10 Benefits Of Using It
Story first published: Wednesday, May 16, 2018, 17:19 [IST]
Desktop Bottom Promotion