For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் மூக்கடைப்புக்கு மட்டுமா விக்ஸ்? இன்னும் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா? இதோ...

|

இந்த உன்னதமான Vicks VapoRub, ஒரு நூற்றாண்டுகளாக சுற்றி வருகிறது மற்றும் பல குடும்பங்களில் நீங்கா இடம் கொண்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சளி, காய்ச்சல் மற்றும் பிற பொதுவான உடல் தொந்தரவுகளை எதிர்த்துப் போராட ஒரு வீட்டுத் தீர்வாக இதன் வாழ்க்கை தொடங்கியது. 80 -களில் பிராக்டர் & காம்பிளால் கொண்டுவரப்பட்ட விக்சின் பயன்பாடு உலகளாவிய அளவில் பரவியது.

How To Use Vicks VapoRub in 11 Unique Ways

மென்தால், கற்பூரம், மற்றும் தைம், யூகலிப்டஸ், ஜாதிக்காய் போன்ற எண்ணெய்கள், இதனுடன் salve cools, soothes கலந்த கலவையே இந்த விக்ஸ் தைலம். தனித்தனியாக, இந்த பொருட்கள் வலி நிவாரணம், நமைச்சல் குறைப்பு, பூஞ்சை எதிர்ப்பு, சுழற்சி அதிகரிப்பு, மற்றும் முகப்பரு தடுப்பு உட்பட பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விக்ஸ்

விக்ஸ்

ஓகே, இன்றைய தினத்திற்கு ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்து பார்த்தால், பல நம்பகமான பயனர்கள் இருமலில் இருந்து வரி தழும்பு வரை அனைத்திற்கும் பூசும் அளவிற்குப் பிரபலமாக இருக்கிறது. இந்த பிரதான தயாரிப்பின் மற்ற பலன்களை புத்திசாலித்தனமாக மறுபரிசீலனை செய்வதற்கான வழிகளை விட்டுவிடுங்கள். விக்ஸ் VapoRub - ன் அனைத்து ஒருங்கிணைந்த பண்புகளால் நாம் ஒரு decongestant -ஐ விட இதை அதிகம் பயன்படுத்துவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உலகின் மிகவும் பொதுவான மருத்துவ உதவியாளனான இதில் ஒன்று உங்கள் பெட்டிகளில் கூட அமர்ந்திருக்கலாம். மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் விக்சை பயன்படுத்தும் ஒரு சில புத்திசாலித்தனமான வழிகளை பட்டியலிட்டுள்ளோம். அதைத் தெரிந்து கொள்ள கீழே பாருங்கள்,

பிம்பிள் பஸ்டர்

பிம்பிள் பஸ்டர்

எல்லோரும் குறுகுறுவென்று பார்க்கிறார்கள் என்று கவலைப்பட்டிருக்கிறீர்களா? VapoRub-ல் உள்ள சில பொருட்கள் ஆண்டிசெப்டிக் மற்றும் தோல் சிகிச்சைக்கான பண்புகளைக் கொண்டுள்ளன. அதை உங்கள் பருவை காயவைத்து விரட்ட அதன்மேல் சிறிதளவு பொட்டுப் போல வைத்து முயற்சிக்கவும்.

எவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா?

தலைவலி

தலைவலி

உங்களுக்கு சைனஸ் தலைவலி இருந்தால், மூச்சுப் பாதை அடைப்பை நீக்க இதன் சிறிய ஆவியே போதும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் மூக்கின் கீழ் ஒரு சிறிய அளவு விக்ஸை தேய்க்கவேண்டியதே. சைனஸ் அல்லாத தலைவலிக்கு உங்கள் கன்னப் பொறி/ நெற்றியில் சிறிதளவு தேய்க்க வேண்டும். இது உங்கள் தலைவலியிலின் அழுத்தத்திலிருந்து விடுவிப்பதை உணரலாம்.

 நகப் பூஞ்சை

நகப் பூஞ்சை

இங்கே மீண்டும், Vicks களிம்பில் உள்ள பல கலவைகள் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் உங்கள் நகங்களில் தோன்றும் பூஞ்சை வளர்ச்சிக்கு எதிராக வேலை செய்யலாம். உங்கள் கால்விரல்கள் அல்லது கை விரல் நகங்களில் இதைப் பயன்படுத்துவதற்கு ஒரு பருத்தி துணியைப் பயன்படுத்தவும். படுக்கைக்கு செல்லும் போது சாக்ஸ் அணிந்து கொள்வதால் விரைவான குணம் கிடைக்கலாம்.

குழந்தைகளுக்கு பல் விழுந்தா தூக்கி வீசுறோமோ ஏன்? அத பத்திரப்படுத்தினா என்ன ஆகும்?

மார்க்ஸ் (வரி தழும்பு)/ செல்லுலைட்

மார்க்ஸ் (வரி தழும்பு)/ செல்லுலைட்

நீங்கள் நினைத்தது எங்களுக்குத் தெரியும். "உண்மையில்? மார்க்ஸ் போகுமா ? "சத்தியம் செய்யும் நபர்களும் இருக்குகிறார்கள். இது எவ்வாறு செயல்படுகிறது, அதை எப்படிச் செய்வது என்பது பற்றி இணையத்தில் வீடியோக்களை இடுகையிடுபவர்களும் இருக்கிறார்கள். உங்கள் cellulite மற்றும் மார்க்ஸ் மீது இதன் முழு செயல் முறைகளைப் பார்க்கும் போது, ​​அதை தைலம் அல்லது லோஷன் போல பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து குணமடையலாம்.

அரிப்பு மற்றும் ஸ்டிங் நிவாரணம்

அரிப்பு மற்றும் ஸ்டிங் நிவாரணம்

உலகெங்கிலும் உள்ள பாட்டிகள் விஷச் செடிகள், தேனீ கடிகள், கொசுக்கடிகள் ஆகிய வெளிப்புற தாக்குதல்களிருந்து அரிப்பு மற்றும் வலியைத் தடுக்க விக்ஸைப் பயன்படுத்த முற்பட்டுள்ளனர். VapoRub- ஐ அந்த தாக்குதல்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால், பூச்சிகள் அழிந்து போகும் என்றும் கூறப்படுகிறது. விக்ஸை அந்தத் தாக்குதல் இடத்தின் மேல் தேய்த்து, அதிலுள்ள மாயாஜால பொருட்கள் அவற்றின் காரியத்தை செய்ய விடுங்கள்.

தூங்கி எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய்யை முகத்துல தேய்ச்சுக்கோங்க... எதுக்குனு தெரியுமா?

உலர் பாதம்

உலர் பாதம்

செதில் போன்ற, சாம்பல் படிந்த உங்கள் பாதங்களால் உங்களுக்கு கவலையாக இருக்கிறதா? உங்கள் வெடித்த பாதங்களின் உள்ளங்கால் பகுதியில் சிறிது வேப்பரப்பை வெண்ணை போலத் தேய்த்து விடவும். குதிகால் போன்ற பிரச்சனைக்குரிய பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கால்களைப் பருத்தி சாக்ஸ் கொண்டு இரவு முழுதும் மூடி வையுங்கள். காலையில் மித சூடான தண்ணீரைப் பயன்படுத்தி கழுவவும்.

 குமட்டல்

குமட்டல்

குமட்டலை விரட்ட மின்ட்டைப் பயன்படுத்துவது பிரபலமான ஒன்று. சில மக்கள் தங்கள் மூக்கின்கீழ் ஒரு சிறிய அளவைத் தேய்த்தல் அல்லது உள்ளிழுக்க நீராவியாக உருவாக்கி விக்ஸைப் பயன்படுத்துகின்றனர். புதினா / மென்தால் வாசனை சென்ட்கள் குமட்டலை உருவாக்கும் வயிற்றை குணப்படுத்த உதவுகின்றன.

இந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு ஏதாவது ஒரு கோவிலுக்கு போயிட்டு வாங்க...

 பர்ன்ஸ் (வெந்த புண்கள்)

பர்ன்ஸ் (வெந்த புண்கள்)

Ouch! சூடான துணி தேய்க்கும் பெட்டியை தெரியாமல் தொடும் போது அல்லது கொதிக்கும் பாத்திரத்திலிருந்து நீராவி தப்பிப் படும்போது அது நம்மை காயப்படுத்துகின்றது. சிறிய காயங்களை VapoRub கொண்டு குணப்படுத்தலாம். விக்ஸில் உள்ள கற்பூரம் மற்றும் மற்ற உறுப்புகள், தீக்காயங்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. அதன் காரணமாக ஏற்படும் வலியைக் குறைக்கும் திறனும் கொண்டவை.

கிரீச்சிடும் கதவுகள்

கிரீச்சிடும் கதவுகள்

ஆண்கள் மற்றும் பெண்களே கவனியுங்கள்: Vicks விரைவாக உங்கள் கிரீச்சிடும் கதவுகளைச் சரி செய்கிறது. நீங்கள் எண்ணெய் அல்லது WD40 -ஐ உடனே பெற முடியாது. எனவே இதை முயற்சி செய்து பாருங்கள்.

ஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது? என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்?

ஷவர் பாம்ஸ்

ஷவர் பாம்ஸ்

உங்கள் உடலில் சுவாச நெரிசலை எளிதாக்க விக்ஸை ஹுமிடிபயர் மூலம் சுவாசிக்காமல் உங்கள் சொந்த ஷவரை (fizzies) உருவாக்கி பயன்படுத்தலாம். விக்ஸை ஷவர் புளோரில் வைத்து சூடான நீரைப் பயன்படுத்தி உருக்கி நீராவியை உருவாக்கிப் பயன்படுத்தவும்.

காயங்கள்

காயங்கள்

இது 1920 களில் இருந்து பழைய விக்ஸ் விளம்பரத்தில் பட்டியலிடப்பட்ட பயன்பாடுகளில் ஒன்றாகும். கற்பூரம் மற்றும் மென்தால் ஆகியவை சுழற்சியை அதிகரிக்க உதவும் தனிமங்களைக் கொண்டிருக்கின்றன, இது காயங்களைக் குணப்படுத்த உதவுகிறது. சிறு காயங்களை குணப்படுத்துவதில் உதவி செய்ய காயங்களின் மீது சிறிதளவு இந்த தைலத்தைப் பூசவும்.

இந்த முறைகளில் பெரும்பாலானவை அறிவியல் ஆய்வுகள் மூலம் ஆதரிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள். எந்தவொரு வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கும் போதும், உங்கள் குறிப்பிட்ட பிரச்சனைக்கு மருத்துவ கவனிப்பை எப்பொழுது நாட வேண்டுமென்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பல பயன்பாடுகளுக்காக கையில் VapoRub வைத்திருக்கிறீர்களா? நீங்கள் அதை வேறு பயன்களுக்கு பயன்படுத்துகிறீர்களா ? கமெண்ட்ஸ் பகுதியில் எங்களுக்கு சொல்லுங்கள்.

இந்த மாத பௌர்ணமிக்கு பின் பாதிக்கப்படப் போகும் நான்கு ராசிகள் எவை? எப்படி தப்பிக்கலாம்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Vicks VapoRub in 11 Unique Ways

here we are discussing about some intresting facts and How To Use Vicks VapoRub in 11 Unique Ways.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more