For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழுத்துல இப்படி அசிங்கமா சதை தொங்குதா?... இத சாப்பிட்டா வேகமா குறைஞ்சிடும்...

உங்கள் கழுத்தைச் சுற்றி கொழுப்பு தங்கிக் கொண்டு பார்ப்பதற்கே அசிங்கமாக காட்சி தருகிறதா? கவலையை விடுங்க. அதற்காக நாங்க சில வீட்டு முறைகளை உங்களுக்காக கூற உள்ளோம்.

|

கழுத்தில் தொங்கும் சதையை எப்படி குறைப்பது எனத் தெரியுமா? இதோ இருக்கு எளிய வழிகள் இருக்கு. நம்முடைய வீட்டில் இருக்கிற சில பொருள்களைக் கொண்டே மிக வேகமாக கழுத்துக்குக் கீ்ழ் தொங்கும் சதையை எளிதாகக் குறைத்துவிட முடியும். அதற்கு ஆர்வமும் முயற்சியும் தான் தேவை.

health

உங்கள் கழுத்தைச் சுற்றி கொழுப்பு தங்கிக் கொண்டு பார்ப்பதற்கே அசிங்கமாக காட்சி தருகிறதா? கவலையை விடுங்க. அதற்காக நாங்க சில வீட்டு முறைகளை உங்களுக்காக கூற உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழுத்து சதை

கழுத்து சதை

கழுத்தைச் சுற்றி காணப்படும் தொங்கும் தசைகள் உங்கள் உடல் பருமனால் ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி இது போல காணப்படும் கொழுப்புகள் வயதாகுதல், நீர் தேக்கம், ஹைப்போ தைராய்டிசம், பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது.

இந்த மாதிரியாக கழுத்தில் தொங்கும் கொழுப்புகளை உடனே கரைக்க வேண்டும். இல்லையென்றால் இதய நோய்கள், டயாபெட்டீஸ் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

சரி இதற்கு என்னதான் செய்வது என்று யோசிக்கிறீர்களா? அதற்கு நாங்கள் சில எளிய வீட்டு டிப்ஸ்களை இங்கே கூற உள்ளோம். அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

க்ரீன் டீ

க்ரீன் டீ

இந்த க்ரீன் டீயில் கேட்சின் என்ற பாலிபினோல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே இந்த கேட்சின் உடல் எடையை குறைக்க உதவுகிறது. எனவே நீங்கள் க்ரீன் டீயை தொடர்ந்து எடுத்து வந்தால் உங்கள் உடல் எடை குறைந்து விடும். ஒரு நாளைக்கு 21/2 கப் க்ரீன் டீ குடிச்சாலே போதும் உங்கள் கழுத்தில் தொங்கும் சதையை போக்கி சங்கு போர் அழகான கழுத்தை பெறலாம்.

தயாரிக்கும் முறை

1 டீ ஸ்பூன் க்ரீன் டீ தூளை 1 கப் தண்ணீரில் சேர்த்து கொள்ளுங்கள்

நன்றாக 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்

பிறகு வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்

அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து பருகவும்.

முலாம்பழம்

முலாம்பழம்

இதில் விட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் குறைந்த கலோரி, குறைந்த கொழுப்பு கொண்ட ஏராளமான விட்டமின்கள், தாதுக்கள் அடங்கிய பழமாகும். இவைகளும் கழுத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

தயாரிக்கும் முறை

1 பெளல் ப்ரஷ் முலாம் பழ ஜூஸ் தயாரிக்கவும்

2-3 கிளாஸ் வரை ஒரு நாளைக்கு பருகி வரவும்.

தண்ணீர்

தண்ணீர்

தண்ணீர் உங்கள் கழுத்தை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. நீர் உங்கள் உடல் எடையை குறைக்கா விட்டாலும் உங்கள் உடம்பில் உள்ள அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றுகிறது. பசி மற்றும் உங்கள் உடல் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைக்கிறது

பயன்படுத்தும் முறை

ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் வரை தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். காபி மற்றும் சோடா பானங்களை தவிர்க்கவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் உங்கள் கழுத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது. நீங்கள் தேங்காய் எண்ணெய்யை உணவில் எடுத்துக் கொள்ளும் போது தங்கியுள்ள கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட்டு உடம்புக்கு எனர்ஜி கொடுக்கின்றன. அதே நேரத்தில் உடம்பில் உள்ள மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

சமையலில் ஆலிவ் ஆயில் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். கழுத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு தினமும் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸ் கழுத்தில் உள்ள கொழுப்பை கரைக்க பயன்படும் மற்றொரு பொருள். லெமன் ஜூஸ் குடித்து வந்தால் உங்கள் உடல் எடையும் வேகமாக குறையும். இதிலுள்ள விட்டமின் சி ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

பயன்படுத்தும் முறை

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் பாதி லெமன் பழம் பிழிந்து ஜூஸ் தயாரிக்கவும். அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். கழுத்தில் உள்ள தொங்கும் சதைகள் நீங்கி கழுத்து ஒன்னு போல் அழகாக மாறும்.

ஆளி விதைகள்

ஆளி விதைகள்

இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் உடல் எடையை குறைத்து உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து விடுகிறது. எனவே இந்த ஆளி விதைகளை உங்கள் ஸ்மூத்தி மற்றும் சாலட் போன்ற உணவுகளில் சேர்த்து பயன் பெறுங்கள்.

பயன்படுத்தும் முறை

1 டேபிள் ஸ்பூன் ஆளி விதை பொடியை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து குடிக்கவும்.

குடை மிளகாய்

குடை மிளகாய்

உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க விரும்பினால் குடைமிளகாயை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதில் 37 கலோரிகள் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

பயன்படுத்தும் முறை

உங்கள் சாலட் மற்றும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்.

தினமும் இதை எடுத்து கொள்ளுங்கள்.

கேரட்

கேரட்

கேரட்டில் நிறைய நார்ச்சத்துகள் மற்றும் விட்டமின் ஏ போன்றவை உள்ளது. இதிலுள்ள நார்சத்தால் இது சீரணிக்க வெகு நேரம் ஆகும். எனவே உங்களுக்கு நீண்ட நேரம் வயிறும் பசிக்காது. இதன் மூலம் உங்கள் உடல் எடையை வெகுவாக குறைக்க இயலும்.

பயன்படுத்தும் முறை

தினசரி உங்கள் உணவில் கேரட்டை சேர்த்து கொள்ளுங்கள்.

சூரிய காந்தி விதைகள்

சூரிய காந்தி விதைகள்

சூரிய காந்தி விதைகளில் விட்டமின் ஈ மற்றும் விட்டமின் பி போன்ற பொருட்கள் உள்ளன. இவை கழுத்தில் தொங்கும் சதையை போக்குவதோடு வயதாகுவதையும் தடுக்கிறது. எனவே தினசரி உணவுப் பழக்கத்தில் சூரிய காந்தி விதைகளை சேர்ப்பது மிகவும் முக்கியம்.

பயன்படுத்தும் முறை

தினமும் 1 டேபிள் ஸ்பூன் சூரிய காந்தி விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல வாழைத்தண்டு போன்ற அழகான கழுத்தை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Lose Neck Fat Overnight?

Excess fat around the neck is not only unsightly, it can be a sign of obesity. Some natural ways get rid of these problems. Green Tea, Flax Seeds, water and so on.
Story first published: Tuesday, June 5, 2018, 19:01 [IST]
Desktop Bottom Promotion