For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாய்ப்புண்ணை விரைவில் குணப்படுத்தும் எளிய வைத்தியங்கள்!!

வாயில் ஏற்படும் புண்ணால் சரியாக சாப்பிட முடியாத வலி உண்டாகிறது. உணவின் சுவையை முழுதும் ருசிக்க முடியாமல் போகிறது. ஆகவே வாய் புண்ணை உடனடியாக இயற்கை முறையில் குணப்படுத்த சில எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்

By Kripa Saravanan
|

Recommended Video

வாய்ப்புண்ணை விரைவில் குணப்படுத்தும் எளிய வைத்தியங்கள்!!- வீடியோ

வாய்புண் என்பது ஈறுகளுக்கு அடியில் உண்டாகும் புண்ணாகும். இதன் வலி மிகவும் அதிகம். நாள் முழுதும் இந்த வலி நம்மை சிரமப்படுத்திக் கொண்டே இருக்கும். எதையாவது சாப்பிடும்போதும் பருகும்போதும் வலி உண்டாகும்.

காரமான உணவை சாப்பிடும் போது, இன்னும் அதிகமான எரிச்சல் மற்றும் வலி ஏற்படும். இந்த வலி மற்றும் புண் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. ஆனால் புகை பிடித்தல், பல் கட்டுதல், பற்களில் க்ளிப் அணிதல், அதிக காரமான உணவை உண்ணுதல் போன்றவற்றால் இந்த வாய் புண் உண்டாகலாம்.

15 Amazing Ways As To How To Cure Mouth Ulcers Fast Naturally

அப்படி உண்டாகும் புண்ணை பற்றி இனி கவலை வேண்டாம். இவற்றை உடனடியாக போக்க சில இயற்கை வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன்

தேன்

வாய் புண்ணில் சிறிதளவு தேனை தடவி, இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று இரவுகள் இதனை செய்வதால் வாய்ப்புண் குணமாகிறது. தேன் ஒரு சிறந்த குணமளிக்கும் தன்மை கொண்ட பொருள்.

கிருமிகளை எதிர்க்கும் தன்மை தேனுக்கு உண்டு. இந்த தன்மை, வாய் புண்ணை எளிதில் குணமாக்க உதவுகிறது. இது மட்டுமில்லாமல், புண்ணால் உண்டாகும், வீக்கம் மற்றும் எரிச்சலை இது குறைக்க உதவுகிறது.

 பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா :

ஒரு டீஸ்பூன் அளவு, பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து ஒரு பேஸ்ட்டாக்கிக் கொள்ளவும். இந்த பேஸ்டை வாயில் புண் உள்ள இடத்தில் தடவவும். சில நிமிடம் கழித்து மறவாமல், வாயை கொப்பளிக்கவும்.

ஒரு நாளில் மூன்று முறை இதனை செய்யவும். இதனால் உங்கள் புண் எளிதில் குணமடைகிறது. பேக்கிங் சோடாவிற்கு, வலியை குறைக்கும் தன்மை உண்டு. மேலும், வேகமாக புண் ஆறுவதற்கான தன்மையும் உண்டு. இதன் அன்டி பேக்டீரியல் தன்மை, தொற்றுகளில் இருந்து வாயை பாதுகாக்கிறது.

 தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய்யின் மருத்துவ குணங்களை நாம் அனைவரும் அறிவோம். பலவிதமான தொற்றுகளை குணமாக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு உண்டு. வாயில் புண் இருக்கும் இடத்தில் சிறிதளவு, தேங்காய் எண்ணெய்யை தடவி அப்படியே விட்டு விடவும்.

வேகமான தீர்வுக்கு , ஒரு நாளில் பலமுறை இந்த எண்ணெய்யை தடவலாம். தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மையால், வாய் புண் வேகமாக குறைகிறது.

தேங்காய் எண்ணெய்யில் அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளதால், வாயின் புண் இருக்கும் இடத்தில் வீக்கம் மற்றும் எரிச்சலை குறைத்து, இதமான நிலையை தருகிறது.

 ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

1/2 கப் வெதுவெதுப்பான நீரில், 1 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்துக் கலக்கவும். இந்த நீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்கவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனை செய்யவும். வினிகரில் உள்ள அமில தன்மை, புண்ணில் இருக்கும் கிருமிகளை அழித்து புண்ணை ஆற்றும்.

 படிகாரம்:

படிகாரம்:

படிகாரத்தை சிறிய துகள்களாக உடைத்து கொள்ளவும். ஒரு பஞ்சை எடுத்து ஈரமாக்கி, அந்த துகளில் முக்கி எடுக்கவும். பின்பு அந்த பஞ்சை, புண் உள்ள இடத்தில் ஒத்தி எடுக்கவும். தினமும் இரண்டு முறை, புண் சரியாகும் வரை இதனை செய்து வரவும்.

படிகாரத்திற்கு, கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு . மேலும், செரிமான மண்டலத்தில் ஏற்படும் தொற்றுகளை நீக்கும் தன்மையும் படிகாரத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

உப்பு :

உப்பு :

இந்த சிகிச்சைக்கு தேவையான 2 பொருட்கள், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டம்ப்ளர் வெந்நீர். உப்பை, நீரில் சேர்த்து நன்றாக கலந்து, தொண்டைக்குள் ஊற்றி சில நிமிடங்கள் கொப்பளிக்கவும்.

ஒரு நாளில் நான்கு முதல் ஐந்து முறை இதனை செய்து வரலாம். இந்த திரவத்திற்கு, வாயில் இருக்கும் கிருமிகளை போக்கி, இதமான ஒரு உணர்வை தரும் தன்மை உண்டு. உப்பின் அன்டிசெப்டிக் தன்மை , தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

டூத் பேஸ்ட் :

டூத் பேஸ்ட் :

வாயில் புண் இருக்கும் இடத்தில் பேஸ்டை விரல்களால் தடவலாம். சில நிமிடம் கழித்து வாயை கொப்பளித்து கழுவலாம். டூத் பேஸ்டில் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது நாமனைவரும் அறிந்ததே. ஆகவே வாய் புண்ணையும் இது எளிதில் போக்குகிறது. இதே காரணத்திற்காகத்தான் பருக்கள் மீதும் பேஸ்டை தடவி வருகின்றனர்.

ஆரஞ்சு பழச்சாறு:

ஆரஞ்சு பழச்சாறு:

தினமும் 2 முறை ஆரஞ்சு பழச்சாறு பருகுவது, நல்ல தீர்வை கொடுக்கும். வைட்டமின் "சி" குறைப்பாடு ஏற்படுவதாலும் வாய்புண் ஏற்படலாம். ஆகவே உடலுக்கு இந்த சத்தை கொடுப்பதால் வாய்புண் குறையும். வைட்டமின் "சி", நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் உடலை தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

 கிராம்பு எண்ணெய் :

கிராம்பு எண்ணெய் :

பஞ்சை எடுது கிராம்பு எண்ணெய்யில் முக்கி எடுக்கவும். வாய்ப் புண் இருக்கும் இடத்தில் இந்த பஞ்சை ஒத்தி எடுக்கவும். இதனை செய்வதற்கு முன்னும் பின்னும் வெந்நீரில் வாயை சுத்தம் செய்து கொள்ளவும்.

இதனால் கிருமிகள் வாயில் இருந்து வெளியேறும். கிராம்பு எண்ணெய்யில் இருக்கு யுஜினால் என்னும் கூறு, வாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகிறது. கிராம்பில் உள்ள கிருமிகளை எதிர்க்கும் தன்மை, விரைவாக இந்த புண்ணை ஆற்றுவதற்கு உதவுகிறது.

மஞ்சள்:

மஞ்சள்:

கடைசியாக சொல்லப்பட்டாலும், மஞ்சள் ஒரு சிறந்த வலி நிவாரணி. மஞ்சளை சிறிதளவு நீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, புண்ணில் தடவலாம். அடிக்கடி இதனை செய்து வந்தால், புண் விரைவில் மறையும். மஞ்சளுக்கு கிருமிகளை எதிர்க்கும் தன்மை உண்டு. மேலும், இது வீக்கத்தை குறைப்பதில் சிறந்தது. ஆகவே வலியும் வீக்கமும் உடனடியாக மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Amazing Ways As To How To Cure Mouth Ulcers Fast Naturally

15 Amazing Ways As To How To Cure Mouth Ulcers Fast Naturally
Story first published: Friday, January 5, 2018, 13:08 [IST]
Desktop Bottom Promotion