For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாக்கு அடிக்கடி வறண்டு போகுதா? ஏதாவது மோசமான அறிகுறியா இருக்குமோ? இத படிங்க பீதி குறையும்...

நாக்கு வறண்டு போவது என்பது பொதுவாக நம் எல்லோருக்குமே இருக்க்ககூடிய பிரச்னை தான். ஆனால் அதே சமயத்தில் ஏன் அடிக்கடி ஒருவருக்கு நாக்கு வறண்டு போகிறது.

|

நாக்கு வறண்டு போவது என்பது பொதுவாக நம் எல்லோருக்குமே இருக்க்ககூடிய பிரச்னை தான். ஆனால் அதேசமயத்தில் அடிக்கடி ஒருவருக்கு நாக்கு வறண்டு போகிறது என்றால் அதையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது இல்லையா?

How to help ease a dry mouth yourself

நம்முடைய உடலில் வெளி உறுப்புகளில்ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொன்றும் நம்முடைய உடலில் தேவையையோ அல்லது பிரச்னையையோ நமக்குத் தெரியப் படுத்துவதற்கான அறிகுறிகளாகத் தான் பார்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாக்கு வறட்சி

நாக்கு வறட்சி

நாக்கு வறட்சி என்பது நாம் பயந்து கொள்ளக்கூடிய அளவுக்கு தீவிர நோயின் அறிகுறி எதுவுமில்லை. நாக்கு வறட்சி அடைவது என்பது இயல்பான நிகழ்வு தான். ஆனாலும் கூட அடிக்கடி அப்படி நிகழ்ந்தால், அது ஏதோ நம்மிடம் சொல்ல நினைக்கிறது என்று தானே அர்த்தம். ஆம். அடிக்கடி உண்டாகும் நா வறட்சி என்பது நம்முடைய உடலுக்கு தேவையான சில விஷயங்களை நமக்கு அறிவுறுத்துவதற்காகத் தான் இருக்கும். அப்படி என்னென்ன காரணங்களுக்காக நாக்கு வறட்சி உண்டாகிறது என்று பார்ப்போம்.

காரணங்கள்

காரணங்கள்

உடலின் நீர்த்தேவையை தெரியப்படுத்துகிறது. நம்முடைய உடலுக்குத் தேவையான தண்ணீரை நாம் குடிப்பதில்லை என்பதையும் வேர்வை நெிறைய வெளியேறுகிறது. அந்த தண்ணீர் தேவையை ஈடு செய்ய வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகிறது.

அதிக அளவில் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு நாக்கு உலர்ந்து வறட்சியடையும்.

இரவில் தூங்கும்போது மூக்கு அடைப்பு ஏற்பட்டு, வாயைத் திறந்து, வாய்வழியே மூச்சு விடுபவர்களுக்கும் நாக்கு வறட்சி உண்டாகும்.

புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அடிக்கடி நா வறட்சி ஏற்படும்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

நாள் முழுக்க அவ்வப்போது சிறிது சிறிதாக தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள். தூஙகும்போதும் படுக்கைக்கு அருகில் கொஞ்சம் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வப்போது ஐஸ்கட்டிகள் அல்லது ஐஸ் லாலிபாப்கள் சப்பிக் கொண்டிருந்தால் நாக்கு வறட்சியடைவது குறையும்.

சர்க்கரையில்லாத சுயிங்கம் அல்லது சுகர்-ஃப்ரி ஸ்வீட்ஸ் ஏதாவது அவ்வப்போது வாயில் போட்டுக் கொள்ளலாம்.

உதடும் வறண்டு போகிறது என்றால், அவ்வப்போது உதடுகளுக்கு லிப் பாம் பயன்படுத்துங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்குங்கள். ஆல்கஹால் இல்லாத மௌத்வாஷ் பயன்படுத்துங்கள். வாய் வறட்சியால் பல் வலி கூடு வரக்கூடும்.

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை

அதிகமாக ஆல்கஹால், காபி, டீ மற்றும் குளிரூட்டப்பட்ட பானங்கள் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

அமிலத் தன்மை வாய்ந்த பழங்கள் (குறிப்பாக எலுமிச்சை), காரம், உப்பு, இனிப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

சிலர் எப்போது பார்த்தாலும் உதடும் நாக்கும் வறண்ட போகிறது என்பதற்காக நாக்கால் உதட்டை ஈரம் செய்து கொண்டிருப்பார்கள். இது முழுக்க முழுக்க தவறான பழக்கம். இப்படி நாக்கால் உதட்டை ஈரம் செய்து கொள்வதன் மூலம் உதட்டில் புண் ஏற்படும். உதட்டின் சருமத்தில் வெடிப்பு உண்டாகும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

உடலில் ஏதாவது பிரைச்னை என்றால், மருத்துவருடைய ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் நீங்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

 மருந்துகள்

மருந்துகள்

நாக்கு வறட்சி அடையாமல், எப்போதும் ஈரத்தன்மையுடன் இருப்பதற்கு சில பொருள்கள் மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்தலாம். அவை,

ஜெல்

ஸ்பிரே

டேப்ளட்ஸ்

லோஷன்ஸ்

ஆகிய வடிவங்களில் கிடைக்கும். இதில் எல்லோருக்கும் எல்லா வகையான பொருளும் சூட் ஆகாது. யாருக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

வறட்சி தீவிரமானால்

வறட்சி தீவிரமானால்

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றிய பின்னும் நாக்கு வறட்சி அதிகமானால், ஒரு வாரத்திற்காவது வீட்டிலோ அல்லது மருத்துவரிடமோ ஆலோசனை செய்து சில சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது.

பாதிப்புகள்

பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக நாக்கு வறண்டு போகும்போது, பேசுவதற்கு, மென்று சாப்பிட, உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.

வாயில் வலி உண்டு. லேசாக சிவந்து போகும். லேசான வீக்கம் உண்டாகும்.

நாக்கில் வெள்ளை வெள்ளையாக படலம் தோன்றும். அப்படி தோன்றுவதற்கு நீங்கள் சாப்பிடும் மாத்திரை காரணமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல.

கண்கள் உலர்ந்து போகும். சிறுநீர் கழிக்கும்போது, இன்னும் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். ஆனால் சிறுநீர் வராது

போன்ற பிரச்னைகள் உண்டாகும்.

குறிப்பு

குறிப்பு

ஒழுங்கா நமக்குத் தேவையான தண்ணீர் குடிச்சாலே இந்த பிரச்னைகள் வராம தவிர்க்க முடியும். அதற்காக தண்ணீரை நிறைய குடிக்க வேண்டும் என்பதற்கான ஒரே முறையில் ஒரு லிட்டர் தண்ணீரையும் முழுசாக குடித்து முடித்துவிட்டு கடமை முடிந்தது. தாகம் தீர்ந்தது என்று நினைக்காதீர்கள். சிறிது நேரத்திலேயே அந்த தண்ணீர் சிறுநீராக வெளியேறி மீண்டும் தாகம் எடுக்க ஆரம்பித்துவிடும்.

அதனால் தண்ணீரை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் செல்லும்போது மறக்காமல் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள்.

வெறுமனே தண்ணீர் மட்டும்தான் குடிக்க வேண்டுமா என்று கேட்காதீர்கள். அப்படியில்லை. பழச்சாறுகள் குடித்துக் கொள்ளலாம்.

இடையிடையே தர்பூசணி கிடைக்கும்போது சாப்பிட்டால், அது உங்களுடைய தண்ணீர் தேவையை பாதியாகக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. நிறைய மோர் குடிக்கலாம். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நாக்கு வறண்டு போகாமலும் தடுக்கும்.

முழு கிரீம் கொண்ட மோர் நல்லது. ஏனெனில் அதில் உள்ள வெண்ணெயின் பசைத்தன்மை நாக்கு மற்றும் உதடு வறட்சியடையாமலும் தடுப்பதோடு வயிற்றுப்புண்ணையும் ஆற்றுகின்ற ஆற்றல் கொண்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to help ease a dry mouth yourself

A dry mouth is rarely a sign of anything serious. There are things you can do to help ease it yourself.
Story first published: Wednesday, June 6, 2018, 13:23 [IST]
Desktop Bottom Promotion