For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோள்பட்டை வலி தாங்க முடியலயா?... இதோ உங்களுக்கு ஈஸியா ஒரு வழி சொல்றேன்... செய்ங்க...

தோள்பட்டை வலி மிகவும் பொதுவானது, பல காரணங்களால் வரலாம். தசைகள், தசை நார் மற்றும் தசை நாண்களில் ஏற்படும் இழுவை காரணமாக வலி ஏற்படலாம். உறைந்த தோள், பிணைந்த நரம்பு, திரிந்த தசை ஆகியவை வலி ஏற்படுத்தலாம்.

|

தோள்பட்டை வலி மிகவும் பொதுவானது, பல காரணங்களால் வரலாம். தசைகள், தசை நார் மற்றும் தசை நாண்களில் ஏற்படும் இழுவை காரணமாக வலி ஏற்படலாம். உறைந்த தோள், பிணைந்த நரம்பு, திரிந்த தசை ஆகியவை வலி ஏற்படுத்தலாம். குறைந்த அளவில் கால்சியம் உட்கொள்வது கூட பிரச்சனைக்கு காரணமாகலாம்.

Home remedies for shoulder pain in tamil

நாள்பட்ட தோள்பட்டை வலி இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தோள்பட்டை வலி வயதானவர்கள் என்றில்லாமல் எல்லா வயதினரையும் பாதிக்கின்றது. லேப்டாப், மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக் காட்ஜெட்ஸ் பயன்படுத்துவதால், தோள்பட்டை வலி ஒரு வாழ்க்கை முறை நோயாக மாறி விட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

தவறான நிலைகளில் உறங்குபவர்களுக்கு, தோள்களில் அழுத்தம் காரணமாக தோள்பட்டை வலி எளிதில் ஏற்படுகின்றது. இரவு முழுவதும் ஒரே நிலையில் உறங்குவதால் கூட இது ஏற்படலாம். உறங்கும் மெத்தையும் பிரச்சனைக்கு காரணமாகி வலியை ஏற்படுத்தலாம். திடீரென அதிக எடை கொண்ட பொருளை நீண்ட நேரம் தூக்குவதாலும் வலி ஏற்படலாம். பருவ காலங்களும் ஒரு காரணமாக இருக்கலாம், ஏனெனில் குளிர்காலத்தில் சிலருக்கு தோள்பட்டை வலி ஏற்படும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தோள்பட்டை வலிக்கு சில வீட்டு வைத்தியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

மூட்டுகளின் இயக்கத்தை உறுதிப்படுத்தல்

தோள்பட்டை வலி கொண்டவர்கள் தோள் மூட்டுகள் இயல்பான இயக்கத்தை கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். தோள்பட்டை வலி உள்ளவர்கள் காலையில் உடற்பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும். ஒரு ரப்பர் பந்தை அழுத்தி பயிற்சி செய்வது நல்ல தீர்வாகும்.

சூடான குளியல்

சூடான குளியல்

சூடான குளியல் தோள்பட்டை வலிக்கு மிகவும் இனிமையாக இருக்கும். சூடான நீரில் ஒரு துணியை முக்கி எடுத்து, அதை வலி உள்ள பகுதியில் வைக்கவும். இது வலியை குறைக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

தொடர்ந்து மஞ்சள் சாப்பிடுவது எவ்வகையான வலியையும் குணப்படுத்தும், ஏனெனில் மஞ்சள் சிறந்த அழற்சி எதிர்ப்பு திறன் கொண்டது. தோள்பட்டை வலி உள்ளவர்கள் நிவாரணத்திற்காக பாலுடன் மஞ்சள் கலந்து உண்ணலாம்.

உலர் இஞ்சி பவுடர்

உலர் இஞ்சி பவுடர்

உளர் இஞ்சி பொடி உட்கொள்வது பல வகையான வலிகளுக்கு நிவாரணம் தரும். உளர் இஞ்சி பொடியை முக்கிய பொருளாகக் கொண்டு செய்யப்படும் தஷ்மூல் கதா தோள்பட்டை வலிக்கு சிறந்த மருந்தாகும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

எப்சம் உப்பு உண்பது தோள்பட்டை வலிக்கு சிறந்த தீர்வு. இதை இன்னொரு வழியிலும் உபயோகிக்கலாம். தண்ணீரில் எப்சம் உப்பு போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் ஒரு துணியை நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுத்து உடனடி நிவாரணம் பெறலாம்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய்

ஜாதிக்காய் பொடி சிறந்த தீர்வு ஏனெனில் அது இயற்கையில் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. வலியை குறைக்க ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து உண்ணலாம். சிறிது தண்ணீரில் இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேனுடன் கலந்தும் உண்ணலாம். உடனடி நிவாரணத்திற்கு இதனை உட்கொள்ளவேண்டும்.

கசகசா

கசகசா

10கிராம் அளவு கசகசாவுடன் 10 கிராம் அல்லது ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து சாப்பிட்டு வரவும். இப்படி சாப்பிடுவதால் தோள்பட்டை வலியிலிருந்து நிவாரணம் பெற முடியும். அதேபோல் இதிலிருந்து 5 கிராம் அளவு கசகசாவை எடுத்து பாலுடன் கலந்தும் பருகலாம்.

ஓமம்

ஓமம்

ஓமத்துடன் கடுகு எண்ணெய் சேர்த்து உட்கொள்வது வலியில் இருந்து நிவாரணம் தரும். சிறிது ஓம விதைகளை ஒரு பையில் நிரப்பி அந்த பையை சூடு செய்து தோளில் வலிக்கும் இடத்தில ஒத்தடம் கொடுப்பதும் வலியில் இருந்து நிவாரணம் தரும்.

படிகாரம்

படிகாரம்

தண்ணீரில் படிகாரம் மற்றும் சக்கரை கலந்து, வலிக்கும் இடத்தில தடவுவது வலியை குறைக்க உதவும். சிலர் வெறும் படிகாரத்தையே பொடி செய்தும் தோள்பட்டை போன்ற மூட்டுப் பகுதிகளில் உண்டாகும் வலிக்கு தேய்ப்பார்கள்.

பூண்டு

பூண்டு

பூண்டு ஒரு மிகச்சிறந்த அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது என்பதால் எந்த வகையான வலி நிவாரணத்திற்கும் இது சிறந்தது. தோள்பட்டை வலி குறைய, ஆமணக்கு அல்லது கடுகு எண்ணெயில் 8-10 பூண்டு விழுதுகளை எள்ளுடன் சேர்த்து வறுத்து தினமும் இரு முறை உண்ண வேண்டும்.

எள் எண்ணெய்

எள் எண்ணெய்

எள் எண்ணெய் இயற்கையிலேயே சூடாக இருக்கும் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. வலிக்கும் இடத்தில அதை வைத்து மசாஜ் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய்

இதுவும் இயற்கையில் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. எனவே வலிக்கும் இடத்தில ஆமணக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதும் நல்ல பலன் தரும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் தோள் வலி சரி செய்ய மிகச்சிறந்தது. கொஞ்சம் மிளகுத்தூள், கற்பூரப்பொடி, ஓமப்பொடி இவற்றை கடுகு எண்ணெயில் கலந்து சுட வைத்து வலிக்கும் இடத்தில ஒத்தடம் கொடுப்பது நல்ல நிவாரணம் தரும்.

வெந்தயம்

வெந்தயம்

உடனடி நிவாரணத்திற்கு, வெந்தயத்தை ஊற வைத்து பேஸ்ட் செய்து ஒரு நாளைக்கு இரண்டு முறை தோளின் பாதிக்கப்பட்ட பகுதியில் இதை பயன்படுத்தலாம். உடனடியாக வலியைப் போக்க ஏறகனவே வீட்டில் வெந்தயத்தைப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அது நிறைய விஷயங்களுக்குப் பயன்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedies for shoulder pain – How to treat shoulder pain?

People of all ages can experience shoulder pain. However, people who use laptops, tablets and smartphones for extended periods are more prone to this problem.
Desktop Bottom Promotion