For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாக்கு செத்து போச்சு... டேஸ்ட்டே தெரியலையா?... இந்த எண்ணெயை நாக்குல தடவுங்க...

சுவை மற்றும் வாசனை இழப்பை சரி செய்ய வீட்டு மருத்துவம் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

|

மனிதனுக்கு இயற்கை படைத்த அனைத்து இந்திரியங்களுக்கும் ஒவ்வொரு வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. அவை அவற்றை சரியாக செய்ய மறுத்தால் பிரச்சினை தான். அப்படித்தான் நாக்கும், மூக்கும்.. சுவையை உணரவும், வாசனையை நுகரவும் வேண்டும்.

Home Remedies for Loss of Smell

உடலுக்கு தீங்கான, உயிருக்கு ஆபத்தான நஞ்சு கலந்த ரசாயனங்கள், விஷ வாயுக்கள், நெருப்பு உள்ளிட்டவற்றை முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கும் சக்தி இதற்கு உண்டு. நரம்பில் உயிரணுக்களை அழிக்கவும், சுவை மொட்டுக்களை உணர்விழக்கச் செய்யவும் இந்த உணர்வுகெட்ட போக்கு தயங்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவையை உணர்தல்

சுவையை உணர்தல்

புகை பிடித்தல், ஊட்டச்சத்து குறைபாடு, காய்ச்சல், சுவாசத் தொற்றுகள் மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் நாக்கும், மூக்கும் இயல்புகளை இழக்கின்றன. வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும் இவற்றால், பசியின்மையும், ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும். உடல்நலத்தையும், மனச்சோர்வையும் உருவாக்கும் சுவை மற்றும் வாசனை இழப்பை சரி செய்ய வீட்டு மருத்துவம் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நீங்கள் மீண்டும் நுகரவும், உணரவும் உதவும் பொருட்களை உங்கள் முன் வைக்கிறோம்

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய்

அழற்சி எதிர்ப்பு சக்தியும், நுண்ணுயிர்க் கொல்லியுமான ஆமணக்கில், ஆன்டி ஆக்ஸிடென் அதிக அளவில் உள்ளது. நுண்ணலைகளை உருவாக்கி ஒரு சில நிமிடங்களில் மூக்குத்துவாரங்களை திறக்க உதவுகிறது.

தினந்தோறும் காலையிலும், படுக்கைக்கு செல்வதற்கு முன்பும் ஆமணக்கு எண்ணெயை நாசித் துவாரத்தில் விட, மூக்கடைப்பு சரியாகும். அதேபோல் நாக்கு மரத்துப் போயிருந்தாலும் நாவில் ஒரு துளி ஆமணக்கு எண்ணெயை தடவி வந்தால் சுவை நரம்புகள் தூண்டப்பட்டு, நாவில் எளிதில் சுவையை உணர்ந்து கொள்ள முடியும்.

பூண்டு

பூண்டு

நாக்கில் சுவை மொட்டுக்களை தூண்டவும், அடைபட்ட நாசித்துவாரங்களையும் திறக்கவும் போதிய வல்லமை கொண்டது பூண்டு. வாசனையை கவ்வி இழுக்கும் வைக்கும் திறன் இதன் சிறப்பு.

துண்டுகளாக்கப்பட்ட இரண்டு மூன்று பூண்டுகளை, இளஞ்சூட்டில் கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு இருவேளை குடிக்க, நாக்குக்கும், மூக்குக்கும் இருந்த பிரச்சினை விலகும்.

இஞ்சி

இஞ்சி

நாக்கில் உள்ள உணர்திறனை அதிகரிக்கக்கூடிய சக்தி இஞ்சியில் உள்ளது. சுவை மொட்டுக்களை தூண்டி, இழந்த உணர்வை மீட்டுருவாக்கம் செய்யக்கூடியது.

பொடிப்பொடியாக நறுக்கப்பட்ட அரை டீஸ்பூன் இஞ்சியுடன் பாறை உப்பு சேர்த்து, சாப்பிடப்போவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும் தொடர்ந்து 2 வாரம் இதனை மேற்கொள்ள வேண்டும். இதுதவிர 2 அல்லது 3 கப் இஞ்சி தேநீரும் கூட அருந்தலாம்.

நீராவி பிடித்தல்

நீராவி பிடித்தல்

ஆவி பிடிக்கும்போது மூக்கில் உள்ள அடைப்பு விடுபட்டு மீண்டும் சுவை உணர்வும், மோப்ப உணர்வும் மீளப் பெறப்பறப்படுகிறது. ஆவி பிடித்தலில் ஏற்படும் ஈரப்பதம் வீக்கத்தை கட்டுப்படுத்தி நாசியை திறக்கச் செய்கிறது.

சூடான வெந்நீரில பெப்பர்மிண்ட் அல்லது யூகலிப்படஸ் தைலத்தை போட்டு, உடலை போர்வையால் போர்த்திக்கொண்டு நுகரவேண்டும். ஒரு நாளைக்கு 2, 3 தடவை செய்தால் மூக்கடைப்பு ஓடிப்போகும்

கெய்ன் மிளகு

கெய்ன் மிளகு

சினுசிட்டி என்ற புரையழற்சி இருக்கும் பட்சத்தில் குளிர் மற்றும் உயர் சுவாசக் கோளாறுகளால் நோய்த்தொற்று உருவாகிறது. இதற்கு கெய்ன் மிளகு நல்ல மருந்து. இதில் உள்ள கேப்சஸின் மூக்கடைப்பை போக்குகிறது. மேலும் எச்சிலை உற்பத்தி செய்து சுவையுணர்வுக்கு தூண்டுகோலாக அமைகிறது.

ஒரு டீஸ்பூன் தேனுடன் கெய்ன் மிளகு சேர்த்து தினம் சிலமுறை சாப்பிட சளியை இளக்கி வெளித்தள்ளுகிறது. இதனால் மூக்கடைப்பு சரி செய்யப்படுகிறது. கறுப்பு மிளகு சுவையுணர்வைத் துண்டும் சக்தி கொண்டது

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரஸ், சுவையுணர்வையும், வாசனையை நுகரும் திறனையும் மீட்டுத் தருகிறது. இதில் இருக்கும வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி, நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான் நீரில் ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து, அதில் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை அருந்துங்கள்...

எலுமிச்சையாகவோ, ஊறுகாயாகவோ பயன்படுத்தலாம். எண்ணெயில் எலுமிச்சை சாறைவிட்டு அதனை கைக்குட்டையில் நனைத்து நுகர்ந்து வர பலன் கிடைக்கும். லெமன் ஜூஸ் அருந்துவதன் மூலம் மூக்கடைப்பு மற்றும் சுவையற்ற தன்மைக்கு விடை கிடைக்கும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for Loss of Smell and Taste

try some simple home remedies to help restore these important senses
Desktop Bottom Promotion